புனித ஜென்மராக்கினி மாதா பேராலயம்
இடம் : பூண்டி
மாவட்டம் : தஞ்சாவூர்
மறை மாவட்டம் : கும்பகோணம்
நிலை : பேராலயம் (Basilica)
ஆயர் : மேதகு பிரான்சிஸ் அந்தோனிசாமி
பங்குத்தந்தையர்கள்:
Rev.Fr. Packiasamy
Rector and Parish Priest
Rev.Fr. S. Alphonse
Vice Rector & Procurator
Rev.Fr.M. Kulandairaj
Director - Poondi Madha Retreat Centre
இணை பங்குத்தந்தையர்கள்:
Rev.Fr. Jeyan
Rev.Fr. Maria Anthony James.
வழிபாட்டு நேரங்கள் :
Week Days
TIMING MASS
06.00 A.M Holy Mass in Tamil
11.15 A.M Holy Mass in Tamil
05.15 P.M Holy Mass in Tamil
On Saturdays
TIMING MASS
06.00 A.M Novena Mass in Tamil
09.30 A.M Holy Mass in Tamil (1st Sat – for the sick)
11.15 A.M Novena Mass in Tamil
05.15 P.M Car Procession followed by Novena Mass
On Sundays and Feast Days
TIMING MASS
06.00 A.M Holy Mass in Tamil
08.30 A.M Holy Mass in Tamil
11.15 A.M Holy Mass in Tamil
12.30 P.M Holy Mass in English
05.15 P.M Holy Mass in Tamil
திருவிழாக்கள் :
கொடியேற்றம் : மே - 6
தேர்பவனி : மே -14
திருவிழா திருப்பலி : மே - 15
அன்னையின் பிறப்புப் பெருவிழா
ஆகஸ்ட் - 30 கோடியேற்றம்.
செப்டம்பர் - 8 தேர்பவனி
செப்டம்பர் - 9 திருவிழா திருப்பலி
வரலாறு :
⛪பூலோகம் போற்றும் பூண்டி மாதா தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கே மூன்று கி.மீ. அருகிலும் கல்லணைக்கு கிழக்கே பதினைந்து கி.மீ. தொலைவிலும் தஞ்சை-திருச்சி இருப்புப் பாதையில் பூதலூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே பத்து கி.மீ. தூரத்திலும் பார்போற்ற விளங்குவது தான் அலமேலுபுரம் பூண்டி. இப்போது இது பூண்டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
பசும் சோலையின் நடுவே வானுயர உயர்ந்த பூண்டித் தாயின் ஆலயம், செந்நெல்லும், செங்கரும்பும், பக்தர்களை தலையாட்டி வரவேற்கும் இனிய காட்சிகளை அலமேலுபுரம் பூண்டியிலே காணலாம்.
கும்பகோணம் மறைமாவட்டத்தில் உள்ள தலை சிறந்த பங்குகளில் ஒன்று தான் இந்த பூண்டி ஆகும்.
ஏறக்குறைய 310 ஆண்டுகளுக்கு முன்பு 1710 ல் இத்தாலி நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இயேசுவின் நற்செய்தியை போதிக்க வந்தவர் தான் கான்ஸ்டாண்டியுஸ் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்). இவர் இயேசு சபைச் சேர்ந்த குரு. தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து குருவாக இறைப் பணியாற்றினார்.
இவர் 1714-1720 இந்த ஆண்டுகளில் பூண்டியில் தங்கியிருந்தபோது மரியன்னைக்கு ஆலயம் ஒன்று கட்டினார். அங்கு எழுந்தருளியுள்ள மாதாவை அமலோற்பவ மாதா எனப் போற்றி வணங்கினார். 1945 ல் பூண்டி திருத்தலமாகவே விளங்கியது.
144 ஆண்டு பழமை வாய்ந்த சுரூபம்:
பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் 1858ஆம் ஆண்டில் பிப்ரவரி 11 ஆம் நாள் அன்னை மரியா பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி தந்து 'நாமே அமல உற்பவம்" என்று சொல்லி மக்களை செபிக்கும்படி கேட்டுக்கொண்டார். லூர்து நகரில் மாதா திருக்காட்சி தந்தார்.
இதன் நினைவாக அதே ஆண்டில் அதே தோற்றத்தோடு வடிவமைக்கப் பெற்ற மூன்று மாதா சுரூபங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இவற்றில் ஒன்று தான் பூண்டிமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டது. 144 ஆண்டு பழமை வாய்ந்த அந்த சுரூபம் தான் பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா என்று மக்களால் போற்றப் படுகிறது.
முதல் புதுமை:
1949 -இல் மிக்கேல்பட்டி என்னும் சிற்றூரை சார்ந்த பெரியவர் ஞானதிக்கத்தின் வயிற்றுவலி, அன்னையை நம்பியதால் அற்புதமாக குணமானது. இதுவே இத்திருத்தலத்தில் நடந்த முதல் புதுமை. அவரளித்த காணிக்கையான நற்கருணை கதிர் பாத்திரம் இன்றும் அன்னை புகழ்பாடுகிறது.
பூண்டி பங்கு 1945 ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள் மேதகு ஆயர் பீட்டர் பிரான்சிஸ் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டு மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் காலத்தில் ஐம்பதாம் ஆண்டு நிறைவாக பொன்விழா கண்டது.
திருத்தலப் பேராலயம்:
இத்திருத்தலம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களின் உத்தரவு பெற்றதன் பின் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3 ஆம் தேதி பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள பசிலிக்காக்களுள் பூண்டியும் ஒன்றாய் பாரெங்கும் பக்தி மணம் பரப்பிவருகிறது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் பாடுபட்ட திருச்சிலுவையின் சிறுபகுதி கர்தினால் லூர்துசாமி அவர்களின் உதவியால் அருட்தந்தை இராயப்பர் அடிகளார் பூண்டிக்கு கொண்டு வந்தார். அந்த திருச்சிலுவை அருளிக்கம் இறைமக்களின் வணக்கத்திற்காக, மாதா பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூண்டித்தாயின் பரிபூரண பலனைப் பெற்றுத்தரும் அற்புத ஆறு நாட்கள்!
ஜனவரி-3 பேராலயம் புனிதப்படுத்தப்பட்ட பொன்னாள்.
தவக்காலத்தின் ஆறாவது வெள்ளி.
மே-15 திருத்தல பேராலய ஆண்டுவிழா.
ஜுன் - 29 புனித பேதுரு, புனித பவுல் நாம விழா.
ஆகஸ்ட் -3 இவ்வாலயம் பேராலயமாக அறிவிக்கப்பட்ட நாள்.
செப்டம்பர் -8 புனித அன்னையின் பிறப்பு விழா.
அன்பிரவு வழிபாடு:
இறை அன்பு என்பது தனித்தன்மையானது. இறைவன் அவரவருக்கே (ஒவ்வொருவருக்கும்) உரிய பொருள். இந்த உறவே இறுதிவரை நிலைக்கக் கூடியது. இந்த அன்பே இறைவனையும், மனிதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையிலும் இரவு 9-12 மணிவரை அன்பிரவு செபகூட்ட வழிபாடு நடைபெற்று திருப்பலியுடனும், இறையாசீருடனும் நிறைவேற்றப் படுகிறது.
பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்..!