இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 07

பிரபுக்கள் திருவாசஸ்தலத்தின் பிரதிஷ்டையிலும் பலிபீடத்தின் பிரதிஷ்டையிலும், செலுத்தும் காணிக்கை--தேவன் கிருபாசனத்திலிருந்து மோயீசனுடன் பேசினது.

1. வேலையெல்லாந் தீர்ந்து மோயீசன் திருவாசஸ்தலத்தை ஸ்தாபகம் பண்ணின போது, அதையும் அதின் சகல ஜாமான்களையும், பலிபீடத்தையும், அதற்கடுத்த எல்லாப் பணிமுட்டுக்களையும் எண்ணெயைப் பூசி அபிஷேகம் பண்ணிப் பரிசுத்தப் படுத்தினார்.

2. இஸ்றாயேலின் அதிபதிகளும், அந்தந்தக் கோத்திரத்திலிருந்த வம்சத் தலைவர்களும், எண்ணிக்கையிடப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்டவர்களும்,

3. ஆறு கூண்டு வண்டிகளையும், பன்னிரண்டு மாடுகளையும் கர்த்தர் சமூகத்தில் காணிக்கை வைத்தார்கள். இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு இரதமும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாகக் கொடுத்தார்கள். அவர்கள் அவற்றை வாசஸ்தலத்துக்கு முன்பாகக் கொண்டு வந்த போது,

4. கர்த்தர் மோயீசனை நோக்கி:

5. வாசஸ்தலத்துக்கு உபயோகமாகுமென்று நீ அவைகளை அவர்களிடத்திலிருந்து வாங்கி லேவியருக்கு அவரவருடைய வேலைக்குத் தக்கபடி பங்கிட்டுக் கொடு என்றார்.

6. ஆகையால் மோயீசன் வண்டிகளையும் மாடுகளையும் வாங்கி லேவியருக்கு ஒப்பித்தான்.

7. இரண்டு வண்டிகளையும், நாலு மாடுகளையும் ஜேற்சோன் குமாரருக்கு அவர்கள் அவசரத்துக்குத் தக்கபடி கொடுத்தான்.

8. ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரன் ஈட்டமாருக்குக் கீழ்ப்படிந்திருந்த மேறாரியின் புத்திரருக்கு, அவர்களுடைய உத்தியோகத்திற்கும் சேவைக்கும் தக்கபடி நாலு வண்டிகளையும் எட்டு மாடுகளையும் கொடுத்தான்.

9. ககாட்டின் புத்திரர்களுக்கோ வண்டியாவது மாடாவது ஒன்றும் கொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கூடாரத்திற்குள்ளே வேலை செய்து சுமக்க வேண்டிய சுமை தோள்மேலே சுமப்பார்கள்.

10. பலிபீடம் அபிஷேகஞ் செய்யப் பட்ட நாளிலே பிரபுக்கள் அதற்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

11. அப்பொழுது கர்த்தர் மோயீசனை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன் தன் நாளில் தன் தன் காணிக்கையைச் செலுத்தக் கடவான் என்றார்.

12. (அவ்வாறே செய்தார்கள்.) முதல் நாளில் யூதா கோத்திரத்தானாகிய அமினதாபின் குமாரன் நகஸோன் தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.

13. அவன் காணிக்கையின் வரலாறு: பரிசுத்த ஸ்தலத்துச் சீக்கல் கணக்குப் படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள் ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், மேற்படி சீக்கல் கணக்காக எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித் தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

14. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒருதூபக் கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

15. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

16. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

17. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் கட்டிகளுமே. இவைகள் அமினதாபின் குமாரனாகிய நகஸோனின் சொந்தக் காணிக்கையாம்.

18. இரண்டாம் நாளிலே இசக்கார் கோத்திரத்தானாகிய சூவாரின் குமாரனாகிய நத்தானியேல் என்னும் பிரபு,

19. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக்கிண்ணியும், எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

20. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒருதூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

21. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

22. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

23. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் சூவாரின் குமாரனான நத்தானியேலுடைய காணிக்கையாம்.

24. முன்றாம் நாளிலே சாபுலோன் புத்திரனின் பிரபுவாகிய ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்பவன்,

* சுவாமியுடைய சமூகத்திலே எல்லாக் கோத்திரங்களும் வம்சங்களும் ஒன்றுக்கொன்று சரிசமானமாயிருப்பதினால் அந்தந்த அதிபதிகள் சரியான சந்திப்புகளை ஒப்புக் கொடுக்கிறார்கள்.

25. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக்கிண்ணியும், எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

26. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

27. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

28. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

29, சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் ஏலோனின் குமாரனான எலியாபுடைய காணிக்கையாம்.

30. நான்காம் நாளிலே ரூபன் புத்திரரின் பிரபுவாகிய செதெயூரின் குமாரனாகிய எலியசூர் என்பவன்,

31. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக்கிண்ணியும், எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

20. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒருதூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

21. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

22. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

23. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் 
37. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

38. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒருதூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

39. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

40. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

41. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் சுரிஸதையின் குமாரனாகிய சலமியேலுடைய காணிக்கையாம்.

42. ஆறாம் நாளிலே காத் புத்திரரின் பிரபுவாகிய எலியஸாப் என்பவன்,

43. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

44. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

45. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

46. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

47. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் துயேலின் குமானாகிய எலியஸாபுடைய காணிக்கையாம்.

48. ஏழாம் நாளிலே எப்பிறாயீம் புத்திரரின் பிரபுவாகிய அம்மியூதின் குமாரன் எலிஸ்மா என்பவன்,

49. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித் தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

50. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

51. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

52. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

53. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் அம்மியூதின் குமாரனாகிய எலிஸ்மாவுடைய காணிக்கையாம்.

54. எட்டாம் நாளிலே மனாசே புத்திரரின் பிரபுவாகிய வதசூரின் குமாரனாகிய கமலியேல் என்பவன்,

55. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

56. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

57. சர்வாங்கத் தகனப்பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

58. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

59. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் வதசூரின் குமாரனாகிய கமலியேலுடைய காணிக்கையாம்.

60. ஒன்பதாம் நாளிலே பெஞ்சமீன் புத்திரரின் பிரபுவாகிய செதெயோனின் குமாரனாகிய அபிதானென்னும் அதிபதி,

61. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

62. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

63. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

64. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

65. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் செதெயோனின் குமாரனாகிய அபிதானுடைய காணிக்கையாம்.

66. பத்தாம் நாளிலே தான் புத்திரரின் பிரபுவாகிய அம்மிஸதையின் குமாரனாகிய அகியஸேர் என்பவன்,

67. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

68. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக் கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

69. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

70. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

71. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டி களுமே. இவைகள் அம்மிஸதையின் குமாரனாகிய அகியஸேருடைய காணிக்கையாம்.

72. பதினோராம் நாளிலே அஸோ புத்திரரினின்று ஒக்கிரானின் குமாரனாகிய பெகியேலென்னும் அதிபதி,

73. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

74. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

75. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

76. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

77. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் ஒக்கிரானின் குமாரனாகிய பெகியேலுடைய காணிக்கையாம்.

78. பன்னிரண்டாம் நாளிலே நேப்தலி புத்திரரின் பிரபுவாகிய ஏனானின் குமாரனாகிய அகிராவென்பவன்,

79. தன் காணிக்கையைக் கொண்டு வந்தான். அதாவது: பரிசுத்த ஸ்தலத்து சீக்கல் கணக்குப்படி நூற்று முப்பது சீக்கல் நிறை யுள்ளதான ஒரு வெள்ளிக் கிண்ணியும், எழுபது சீக்கல் நிறையுள்ளதான ஒரு வெள்ளித்தட்டும்; இவ்விரண்டும் பலிக்காக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவினாலே நிறைந்திருந்தது.

80. பத்து சீக்கல் நிறையுள்ளதும் பொன்னாலே செய்யப் பட்டதுமான ஒரு தூபக்கலசமும்; அதில் தூபவர்க்கம் நிறைந்திருந்தது.

81. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட ஒரு காளையும், ஒரு ஆட்டுக் கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக் குட்டியும்,

82. பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவும்,

83. சமாதானப் பலிக்காக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக் கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக் கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக் குட்டிகளுமே. இவைகள் ஏனானின் குமாரனாகிய அகிராவுடைய காணிக்கையாம்.

84. பலிபீடத்தின் பிரதிஷ்டையாகிய அபிஷேகஞ் செய்யப்பட்ட போது இஸ்றாயேல் பிரபுக்களால் ஒப்புக்கொடுக்கப் பட்டவையாவன: வெள்ளிக் கிண்ணிகள் பன்னிரண்டும், வெள்ளித் தட்டுகள் பன்னிரண்டும், பொன்னால் செய்யப்பட்ட தூபக்கலசங்கள் பன்னிரண்டும்.

85. ஒவ்வொரு வெள்ளிக் கிண்ணி நூற்று முப்பது சீக்கல் நிறையும், ஒவ்வொரு தட்டும் எழுபது சீக்கல் நிறையும் ஆக இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தல நிறைக் கணக்குப்படி இரண்டாயிரத்து நானூறு சீக்கல் நிறையாயிருக்கும்.

86. தூபவர்க்கங்களால் நிறைந்திருந்த தங்கத்தால் செய்யப்பட்ட பன்னிரண்டு தூபக் கலசம். ஒவ்வொரு பொன் கலசம் பரிசுத்த ஸ்தலத்தின் நிறை கணக்குப்படி பத்து சீக்கல் நிறையாக, கலசங்களின் பொன்னெல்லாம் நூற்றிருபது சீக்க லிருக்கும்.

87. சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையில் தெரிந்தெடுக்கப் பட்ட மாடுகள் பன்னிரண்டும், ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டும், ஒரு வயதான ஆட்டுக் குட்டிகள் பன்னிரண்டும், அவைகளுக்கடுத்த பானங்களும், பாவ நிவாரணப் பலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக் கடாக்களும்,

88. சமாதானப் பலிக்காக மாடுகள் இருபத்து நான்கும், ஆட்டுக்கடாக்கள் அறுபதும், வெள்ளாட்டுக் கடாக்கள் அறுபதும், ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபதும், இவைகளெல்லாம் பலிபீடத்தின் பிரதிஷ்டையாகிய அபிஷேக நாளின் போது ஒப்புக் கொடுக்கப் பட்டன.

89. மோயீசன் தேவன் ஆலோசனை கேட்கத் தக்கதாக எப்பொழுது கூடாரத்திற்குள் பிரவேசிப்பானோ கிருபாசனத்தினின்று தனக்கு விடை கொடுக்கறவருடைய குரற் சத்தத்தைக் காதினாலே கேட்டுக் கொண்டிருப்பான். கிருபாசனம் சாட்சியப் பெட்டியிலே இரண்டு கெருபீம் நடுவே இருந்தது. குரற் சத்தம் அதிலிருந்தே வரும்.