இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

07 புனித அந்தோணியார் ஆலயம், குருவிக்காடு


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம்: குருவிக்காடு

மறை மாவட்டம் : குழித்துறை
மாவட்டம் : கன்னியாகுமரி

நிலை: கிளைப்பங்கு
பங்கு : தூய கார்மல் அன்னை ஆலயம், கொல்வேல்.

குடும்பங்கள் : 84
அன்பியங்கள்: 3

ஞாயிறு
திருப்பலி : காலை 08.30 மணிக்கு

பங்குத்தந்தை : அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்

திருவிழா : மே மாதம்.

வரலாறு :

கி.பி 1935 ஆம் ஆண்டு அருட்பணி. தனிஸ்லாஸ் அவர்களால் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டு மக்கள் ஜெபித்து வந்தனர். புத்தன்கடை பங்கின் கிளைப் பங்காக இருந்து வந்தது. 1973 ல் கொல்வேல் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது முதல் கொல்வேலின் கிளைப் பங்காக ஆனது.