எண்ணாகமம் - அதிகாரம் 05

அசுசியானவர்களைப் பாளையத்துக்குப் புறம்பே துரத்துவதையும்--அபகரிப்புக்கு உத்தரிக்க வேண்டியதையும்--புருஷன் பெண்சாதி விஷயத்தில் சமுசயம் படும்போது செய்ய வேண்டியதையும் குறித்துச் சொல்லியது.

1. மீண்டுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

2. குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவனையும், சவத்தினாலே தீட்டுப் பட்டவனையும் பாளையத்தினின்று புறம்பாக்கி விட இஸ்றாயேல் புத்திரருக்குக் கட்டளையிடு.

3. நாம் உங்கள் மத்தியில் வசித்திருக்கின்றோமாகையால் அப்படிப் பட்டவர்கள் ஆண்பிள்ளையானாலும், பெண்பிள்ளையானாலும் பாளையத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு அதிலிருந்து புறம்பாக்கக் கடவார்களென்றார்.

4. இஸ்றாயேல் புத்திரர் அவ்விதமாய்ச் செய்து கர்த்தர் மோயீசனுக்குச் சொன்னபடியே அப்படிப் பட்டவர்களைப் பாளையத்தினின்று புறம்பாக்கி விட்டார்கள்.

5. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

6. நீ இஸ்றாயேல் புத்திரருக்குச் சொல்ல வேண்டியதென்னவெனில்: ஒரு புருஷனாவது ஒரு ஸ்திரீயாவது மனிதர் வழக்கமாய்ச் செய்யும் பாவங்களில் யாதொன்றைக் கட்டிக் கொண்டு யோசனையில்லாமல் கர்த்தருடைய கற்பனையை மீறிக் குற்றவாளியானால்,

7. அவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட வேண்டியதன்றி எவனுக்கு அநியாயஞ் செய்தார்களோ அவனுக்கு முதலோடு ஐந்தில் ஒருபங்கைக் கூட்டி உத்தரிக்கக் கடவார்கள்.

* 6,7-ம் வசனம். இவ்விடத்திற் குறிக்கப் பட்ட குற்றங்கள் இரகசியமானவைகளாம். அருள் வேதத்திற் கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களுக்குக் கற்பிக்கப் படும் பாவசங்கீர்த்தனத்திற்கு அது முன்னடையாளமாகவேயிருந்தது.

8. அதை வாங்குவார் ஒருவருமில்லையென்றால் அது கர்த்தருக்குச் செலுத்தப் படும். ஆதலால் கர்த்தரைச் சமாதானப் படுத்த பாவநிவிர்த்திக்குக் கொடுக்கப் படும் ஆட்டுக்கடா நீங்கலாக அது ஆசாரியனைச் சேர வேண்டும்.

9. இஸ்றாயேல் புத்திரர் எவ்வித நவபலன்களையும் ஒப்புக் கொடுத்தாலும் அவைகள் குருவானவருக்குச் சொந்தமாகி விடும்.

10. மேலும் சாதாரணமாய்த் தேவாலயத்தில் எவ்விதக் காணிக்கை ஒப்புக் கொடுக்கப்பட்டாலும் அதுவும் அவனுடையதாகும் என்றருளினார்.

11. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

12. நீ இஸ்றாயேல் புத்திரரிடத்தில் சொல்ல வேண்டியது என்னவெனில்: ஒருவனுடைய பெண்சாதி புத்தி கெட்டு புருஷனுக்குத் துரோகம் பண்ணி,

18. மற்றொருவனோடு சம்போகமாய்ச் சயனித்துக் கொண்ட விஷயத்திலே அவள் சோரம் போனது வாஸ்தவமாயினும் புருஷன் அதைக் கண்டதில்லை என்கிறதினாலும், அவள் கையுங் களவுமாய்ப் பிடிபடா மலுமிருக்கிறதினாலும், அவளுடைய விபசாரம் வெளிக்கு வந்து சாட்சிகள் மூலியமாய் ருசுப்படுத்தப் படக் கூடாத பட்சத்தில்,

14. அப்பொழுது அவள் மெய்யாகவே தீட்டுப்பட்டாளோ அலலது பொய்யாகக் குற்றவாளியென்று எண்ணப் பட்டாளோ வென்னும் எரிச்சலாகிய பேய் புருஷனை அவன் மனைவிக்கு விரோதமாய்த் தூண்டிவிடுகிறதாகில்,

15. அவன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக் கொண்டு வந்து அவள் நிமித்தம் ஒரு படி அளவிலான வாற்கோதும்பை மாவிலே பத்தில் ஒரு பங்கு படைக்கக் கடவான். ஆனால் அது எரிச்சலின் காணிக்கையும், அவள் சோரம் போனாளோ அல்லவோ என்று காண்பிக்கத் தக்க காணிக்கையும் ஆனபடியினாலே அந்த மாவின் மேல் எண்ணை வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பான்.

16. ஆசாரியன் இதனைக் கர்த்தருடைய சந்நிதியில் ஒப்புக்கொடுப்பான். 

17. ஒரு மண்பாண்டத்திலே தீர்த்தத்தை வார்த்துச் சாட்சியக் கூடா ரத்தின் தரையில் இருக்கும் புழுதியிலே கொஞ்சம் எ:த்து மேற்படி தீர்த்தத்திலே போட்டு,

18. கர்த்தர் சமூகத்தில் நின்று கொண்டிருக்கிற அந்த ஸ்திரீயின் முக்காட்டை நீக்கி நினைப்பூட்டும் பலியையும் எரிச்சலின் சந்திப்பையும் அவள் கையின் மேல் வைப்பான். பிறகு ஆசாரியன் தன்னால் வெறுப்புடன் சபிக்கப் பட்ட அந்தக் கசப்பான ஜலத்தைக் கையிலேந்தி,

19. அந்த ஸ்திரீயை ஆணையிடுவித்து: நீ கேள், யாதொரு கள்ளப் புருஷனும் உன்-னோடு படுக்காமலும் உன் கணவனுக்கு நீ துரோகம் பண்ணாமலும் தீட்டுப்படாமலும் இருந்தாயானால் நான் தூ´த்துச் சபித்த இந்தச் சலத்தால் உனக்குக் தின்மை வராது.

20. ஆனால் நீ உன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடு சம்போகமாய்ச் சயனித்துத் தீட்டுப்பட்டாயாகில்,

21. இந்த சாபமெல்லாம் உன் மேல் வரும். சபையிலுள்ள சகல பேர் களும் கண்டு பயப்படும்படி கர்த்தர் உன்னை எல்லோருடைய சாபனைகளுக்குள்ளாகச் செய்யக் கடவது; (மேலும்) அவர் உன் கால்கள் அழுகிப் போகவும், உன் உதரம் வீங்கி வெடித்துப் போகவும் செய்யக் கடவாராக.

22. சபிக்கப்பட்ட இந்தச் சலங்கள் உன் வயிற்றில் விழவே உன் மடி வீங்கவும், உன் துடைகள் அழுகவும் கடவதென்று ஆசாரியன் சொல்லும்போது அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென் என்று சொல்லக் கடவாள்.

23. பின்பு ஆசாரியன் இந்தச் சாபனை வார்த்தைகளை ஒரு புஸ்தகத்தில் எழுதித் தன்னாலே பூர்த்தியாய்ச் சபிக்கப் பட்ட அதிக கசப்பான சலத்தினால் அவ்வெழுத்தைக் கழுவிக் கலைத்து,

24. அதை அவளுக்குக் குடிக்கக் கொடுப்பான். அவள் அவற்றைக் குடித்தான பின்பு,

25. குரு எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி அதைக் கர்த்தருடைய சந்நிதிக்கு அசைவாட்டிப் பீடத்தின் மேல் வைக்கப் போகும்போது,

26. முந்த அதில் நின்று பலிபீடத்தின் மேல் தகனிக்க வேண்டி ஒரு கைப்பிடி நிறைய மாவை எடுத்து வைக்கக் கடவான். அதன்பிறகு அதிகக் கசப்பான ஜலத்தை அந்த ஸ்திரீ குடிக்கும்படி கொடுப்பான்.

27. அதை அவள் குடித்தபின்பு அவள் உண்மையாகவே தீட்டுப்பட்டுப் புருஷனைத் துரோகம் பண்ணி விபசாரியானாளென்றால் சபிக்கப்பட்ட ஜலம் அவளுக்குள்ளே பிரவேசித்த மாத்திரத்தில் அவளுடைய வயிறு வீங்கித் துடைகள் அழுகலாய்ப் போய்விடும். அந்த ஸ்திரீ ஜனங்களுக்குள்ளே சபிக்கப் பட்டவளாகி எல்லோருக்கும் மாதிரிகையாயிருப்பாள்.

* கடவுள் தேவ பிரசையைத் தாம்தாமே ஆளத் திருவுளமானபடியால் தமது கற்பனைகளை உறுதிப்படுத்தத் தக்கதாகப் பற்பல புதுமைகளையும் காண்பிக்கச் சித்தமுள்ளவரானார். அதுகளிலே இது ஒன்று.

28. அவள் குற்றமில்லாதவளாயிருந்தாலோவென்றால், அவளுக்கு ஒரு நஷ்டமும் வராது. கர்ப்பந் தரிக்கத் தக்கவளுமாயிருப்பாள்.

29. எரிச்சலைப்பற்றிய பிரமாணமிதுவே. அதாவது: ஸ்திரீ தன் கணவனை விட்டு அவனுக்குத் துரோகம் பண்ணின போது,

30. கணவன் சந்தேகச் சிந்தனையால் ஏவப்பட்டு அவளைக் கர்த்தர் சமூகத்தில் அழைத்துக் கொண்டு வருவான். குருவும் இந்தப் பிரமாணத்தின்படி யெல்லாம் அவளுக்குச் செய்யக் கடவான்.

31. கணவன் குற்றத்திற்கு நீங்கலாகியிருப்பான். ஸ்திரீயானவளோ தன் அக்கிரமத்தின் சுமையைச் சுமப்பாளென்று கர்த்தர் திருவுளம் பற்றினார்.