இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் கீதம் (Magnificat) சொல்லுதல்

255. முத். ஓயிக்கனி மேரி என்ற புனிதை, இன்னும் பல புனிதர்கள் செய்து வந்துள்ளபடி, கடவுள் நம் தேவ அன்னைக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களுக்கு நன்றியாக அவர்களின் அடிமைகள் அடிக்கடி என் ஆத்துமம் ஆண் வரை மகிமைப் படுத்துகிறது'' என்னும் மரியாயின் கீதத் தைச் சொல்லி வர வேண்டும். பரிசுத்த கன்னிமரியால் இயற்றப்பட்டுள்ள ஓரே கீத செபம் இதுவே. இதை மாதா அல்ல, சேசுவே இயற்றினார் என்றே கூற வேண் டும். ஏனென்றால் மரியாயின் வாய்மொழி வழியாக சேசுவே அதை உரைத்தார். எல்லாவற்றிலும் அதிக தாழ்ச்சியுடையதும் நன்றி நிறைந்ததும் இச் செபமே. அதே சமயம் மிக உந்நதமானதும் எல்லா கீதங்களிலும் உயர்வான தும் இதுவே. இதில் எவ்வளவு பெரிய மறை பொருளான திரு நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளதென்றால் சம்மனசுகள் முதலாய் அவற்றை அறிந்து கொள்ள இயலாது. பக்தியும் அறிவாற்றலும் உள்ள ஜெர்சன் என்பவர் மிக வும் கடின தலைப்புகள் பற்றி ஆழ்ந்த அறிவும் பக்தி யும் மிகும்படி எழுதுவதில் தம் வாழ்வின் பெரும் பகுதி யைச் செலவிட்டபின் தன் இறுதி நாட்களில், தன் மற்ற எல்லா நூல்களின் மகுடம் போல் விளங்கும் படி இந்த 'மாக்னிபிக்காத்' என்ற கீதத்திற்கு விளக்கம் எழுத நடுக் கத்துடன் ஆரம்பித்தார். இந்த அழகிய தெய்வீக கீதத் தைப் பற்றி பல ஆச்சரியத்துக்குரிய காரியங்களை தாம் இயற்றிய பெரிய நூலில் இவர் கூறுகிறார். மற்ற பல காரியங்களைக் கூறுவதுடன் பரிசுத்த கன்னித்தாய் இக் கீதத்தை அடிக்கடி, குறிப்பாக நற்கருணை உட்கொண்ட பின் நன்றியறிதலாக இதைச் சொன்னதாக எழுதியுள்ளார். பென்சோனியுஸ் என்ற கல்விமான் இந்தக் கீதத்தை அர்த் தப்படுத்துகையில் இதன் வல்லமையால் நடந்த பல புதுமை களைச் சொல்கிறார் இவர் மேலும் கூறுகிறார், ''என் ஆத் துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது'' என்ற கீதத் தின் வார்த்தைகளைக் கேட்கும்போது பசாசுகள் நடு நடுங்கி ஓடிப் போகின்றன என்று - "தம்முடைய கரத் தின் வல்லமையைக் காட்டியருளினார். தங்கள் இருதய சிந்தனையில் கர்வமுள்ளவர்களைச் சிதறடித்தார்'' (லூக் 1, 51).