இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இதை வெளியிட்டால் I...

ரேடியோ நிலையம் ஒன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் கத்தோலிக்க மத சம்பந்தமானவை பற்றி சொற்பொழிவோ அல்லது பாடல்களோ ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. வாரத் தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மொழிகளில் ஒலி பரப்பப்படுகின்றன. அது எந்த மொழியில் இருந்த போதிலும், முடிவில் Laudetar Jesus Christus என்னும் இலத்தீன் மொழிகளில் சொல்வதைக் கேட்கலாம். அதன் பொருள் யேசுக்கிறிஸ்து நாதர் புகழப்படுவா ராக என்பதே.

இந்தச் சொற்பொழிவு வத்திக்கான் ரேடியோ நிலையத்திலிருந்து வருகிறது. இது ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்து நாதருடைய புகழை அகில உலகுக்கும் அறிவித்து, புனித சின்னப்பர் கிறிஸ்து நாதரைப் பற்றிச் சொன்னதை நிறைவேற்றி வருகிறது. ''கடவுள் அவரை உயர்த்தி, எல்லாவற்றுக்கும் மேலான திருநாமத்தை அவருக்குத் தரிப்பித்தார்; எதற்கென்றால், யேசு என்னும் அந்தப் பெயரைக் கேட்கும் போது, வானுலகத்திலும் பூவுலகத்திலும் நரகத்திலுமுள்ள சகலருமே முழங்காலில் விழுந்து ஆராதிக்கும்படியாகவும், ஆண்டவராகிய யேசுக் கிறிஸ்து நாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமை யில் வீற்றிருக்கிறாரென நாவைப் படைத்திருக்கிறவர் யாவருமே பிரத்தியட்சமாய் விளம்பரஞ் செய்யும்படி யாகவுமே." (பிலிப். 219-11).

யேசுக்கிறிஸ்துநாதர் புகழப்படுவாராக என்னும் குரல் வத்திக்கான் ரேடியோ நிலையத்திலிருந்து நாள் தோறும் உலகெங்கும் ஒலிக்கிறது. இவ்விதம் உல குக்கு அறிவிப்பது சரியே. வத்திக்கான் இருப்பதன் நோக்கமென்ன? குருத்துவத்தின் கதியென்ன? திருச் சடை எதற்காக ஏற்படுத்தப்பட்டது? கடவுளது பெயரை மகிமைப்படுத்துவதற்காக; உலகெங்கும் அந்தத் திருநாமம் வாழ்த்தப்படும்படி.

யேசுக்கிறிஸ்துநாதர் புகழப்படுவாராக. சில நாடுகளில் கிறிஸ்தவர்கள் ஒருவர் இன்னொருவரைச் சந்திக்கையில் யேசுக்கிறிஸ்துநாதர் புகழப்படுவா ராக என்னும் அழகிய வாழ்த்து மொழிகளைக் கூறு கிறார்கள். இது முற்றிலும் தகுதியானதே. ஏனெனில் நாம் இவ்வுலகில் இருப்பதும், மானிடர் இவ்வுலகில் இருப்பதும் கடவுளது பெயரை அர்ச்சிக்கவே: “உம் முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக''

கடவுளின் பெயரை வாழ்த்துவது நம் கடமை. வாய்மொழியினால் அதை வாழ்த்தியும் நாம் கத்தோ லிக்கர் என பிறர் அறியும்படி நம் திரு வேதத்தை அனுசரித்தும் நாம் இந்தக் கடமையை நிறை வேற்றுகிறோம்.

கடவுளின் பெயரை நாம் அர்ச்சிக்கவேண்டும், அதை நிந்திக்கக்கூடாது, அதை வீணாக உச்சரிக்க் கூடாது. பேசும் திறமை கடவுள் தரும் அரிய கொடை; இந்தப் பேசும் திறமையினால் மனிதனுக்கு எவ்வளவு இன்பமும் ஆறுதலும் முன்னேற்றமும் ஏற்படுகின்றன. மனிதனைத் தவிர வேறு யாருக்கும் இந்த சக்தி கொடுக்கப்படவில்லை. மிருகங்களுக்கு சுவாசப் பைகள் உண்டு, தொண்டை இருக்கிறது, நாக்கு உண்டு, ஆனால் அவை பேசுவதில்லை? ஏனெ னில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

ஆனால் நம்மிடமே சொல்வதற்கு ஏராளமாய் இருக்கிறது. கடவுள் கொடுத்த இந்த நற்கொடை. யை அவரை நிந்திப்பதற்காகப் பயன்படுத்துவது பெரும் தவறு. "என்னைப் பகைத்துக்கொண்டவன் என்மேல் அபாண்டங்களைப் பேசியிருந்தால், சில விசை அவனுக்கு அகன்று ஒளிந்திருப்பேன்; ஆனால் நீ என்னோடு கூடி வாழ்ந்தவன். நாம் சர்வேசுரனு டைய ஆலயத்தில் ஒரே மனதாய் உலாவினோம்'' என தாவீது அரசன் கூறியதுபோல், கடவுளும் நம்மில் அநேகரைப்பற்றிக் கூறலாம். (சங். 54)

ஹாலந்திலுள்ள பல ரெயில் வண்டி நிலையங்களில் பின் காணப்படுவது பெரிய எழுத்துக்களில் பொறிக் கப்பட்டிருக்கிறது: "சர்வ வல்லப கடவுள் மேல் உனக்கு விசுவாசம் இருக்குமானால், அவரை மகிமைப் படுத்து; அவருடைய பெயரை வீணாக உச்சரியாதே. அவர் மேல் உனக்கு விசுவாசம் இல்லையானால் உன் னையும் மற்றவர்களையும் மனம் வருந்தச் செய்கிறாய்.''

தேவதூ ஷணம் சொல்வது கடவுளுடைய பெய ருக்கு விரோதமான பெரும் குற்றம். பொய்ச்சத்தியம் செய்வதும் பெரும் தவறு.

"நான் பொய்ச் சத்தியம் செய்வது மிகத்தாழ்ந்த செய்கை. ஆனால் ஒருவன் உறுதிமொழி கூறினால் அதன்படி நடக்க வேண்டும். சத்தியம் செய்வதைப் பற்றிய பேச்சு இங்கு இல்லை'' என சிலர் சொல்ல லாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் கடவுளுடைய பீடத்துக்கு முன் முழந்தாளிட்டு நித்தியத்துக்கும் மனைவிக்கு உண்மையுடனிருப்பதாக வாக்களித்து விட்டு அவளுக்குத் துரோகம் செய்யவில்லையா? 'உம் முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக' என இவர்கள் கர்த்தர் கற்பித்த மன்றாட்டில் எவ்விதம் சொல்லக் கூடும்? கடவுளுடைய நாமத்துக்கு இவர்கள் பெரும் நிந்தை வருவிக்கிறார்கள்.

நாம் நம் தாயின் பெயரைச் சொல்கையில் எவ் வளவு நன்றியுடனும் அன்புடனும் அதை உச்சரிக் கிறோம். ஆனால் சர்வ வல்லப கடவுளுடைய திரு நாமத்தை உச்சரிக்கையில் நாம் எதைப் பற்றி நினைக் கிறோம்? அல்லது வெறுமனே உச்சரிக்கிறோமா? “ஓ எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூவுலகெங்கும் எம்மாத்திரம் ஆச்சரியத்துக் குரியதாயிருக்கின்றது" (சங் 8/2) என்னும் அரச தீர்க்க தரிசியின் மொழிகளை நாம் நினைக்கிறோமா? “என் ஆத் துமாவே, ஆண்டவரை வாழ்த்தி ஸ்துதிப்பாயாக. எனக்குள்ளிருக்கும் சகலதத்துவங்ககளே அவருடைய திருநாமத்தை வாழ்த்துங்கள்'' (சங். 102/1) "ஆண்டவ ருடைய நாமம் இப்பொழுதும் இது முதல் என்றென் றைக்கும் தோத்தரிக்கப்படக்கடவது; சூரியன் உதிக் கிற திசை துவக்கி அஸ்தமிக்கிற திசைமட்டும் ஆண்ட வருடைய நாமம் துதிக்குரிய தாமே'' (சங்.112) என்ற தாவீது அரசரைப் போல நாமும் உணர்கிறோமா? இவ்விதம் ஆண்டவருடைய திருநாமத்துக்கு நாம் மரி யாதை செய்வது முற்றிலும் நியாயமே. பெரிய வான சாஸ்திரியான நியூட்டன் இந்த நாமத்துக்கு வந்தனை செலுத்திவந்தார். அதனால் தான் கடவுளுடைய பெய ரைக் கேட்கும்போதெல்லாம் தம் தொப்பியை எடுத்து விடுவாராம். ஏனெனில் தாம் கண்ட நட்சத்திரங் களின் அதிசய உலகிலிருந்து கடவுள் எப்பேர்ப்பட்ட வர் என அவர் அறிந்தார். தேவாராதனைச் சடங்கு களில் ஆண்டவராகிய யேசுவின் நாமம் உச்சரிக்கப் படும் பொழுதும் “பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் தோத்திரம் உண்டாகக்கடவது'' என்று சொல்கையிலும் நாம் தலை குனியவேண்டும் என திருச்சபை உத்தரவிட்டிருக்கிறது.

கடவுளின் நாமம் பரிசுத்தமானது என நாம் அறிந்தால் நாம் ஆவலுடனும் மகிழ்வுடனும் அவரு டைய உதவியைத் தேடுவோம். "ஆண்டவருடைய நாமத்தில் தான் நமக்கு உதவியிருக்கிறது” (Adjutorium Nostrum in Nomine Domini) என்று நம் குருக் கள் சொல்லும் போது அக்களித்து அகமகிழ்வோம்.

இது நியாயமே. மனிதருக்கு ஏன் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன? அந்தப் பெயர்களால் பிறர் அவர்களை அழைக்கும்படி கடவுளுக்கு பெயர் உண்டு. நம்பிக்கையுடன் நாம் அவரது உதவியைத் தேடும் பொருட்டு அவருக்குப் பெயர் கொடுக்கப்பட்டிருக் கிறது. “பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த ஆண்டவருடைய நாமத்தினாலே நமக்குச் சகாயமுண்டாயிருக்கிறது" (சங். 12318).

இவ்வுலகில் நம் வாழ்க்கையே ஒரு போர். எப் பக்கமும் விரோதிகள் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர். வாழ்வின் கடின போரில் நமக்குப் பலம் தேவை. தாவீதைப் போல் நாம் பலம் பெறவேண்டும். கோலி யாத் என்னும் இராட்சதனை அவர் எதிர்த்துச் செல் கையில் கடவுளுடைய பலம் அவரைத் தாங்கி நின்றது. “நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடயத் தோடும் என்னிடம் வருகிறாய்: நானோ இராணுவங் களின் தேவனுடைய பேராலே உன்னிடம் வருகி றேன்'' (அரச.17 | 45).

கடவுளின் பெயரை நாம் அர்ச்சிக்க வேண்டும் என்று சொல்கையில், ஆண்டவராகிய யேசுக் கிறிஸ்து நாதருடைய நாமத்தை அர்ச்சித்து வாழ்த்தி மகிமைப்படுத்த வேண்டியதாகிய நம் கடமையை நாம் மறக்கலாகாது.

"நாம் இரட்சணியம் அடைவதற்கு வேண்டிய எத்தனமாக வானத்தின் கீழ் வேறுநாமம் மனிதருக் குக் கொடுக்கப்பட்டதே இல்லை " (அப். நட. 4/12) புனித இராயப்பர் இவ் வார்த்தைகளைச் சொன்ன நாளிலிருந்து மானிடர்க்குள் தீபமாயிருந்தோர் யேசு வின் நாமத்தை மகிமைப்படுத்தி வந்திருக்கின்றனர்.

“யேசுவின் நாமம் வாய்க்குத் தேன், செவிக்குக் கீதம், உள்ளத்துக்கு இன்பம்'' என புனித பெர்நார்து கூறு கிறார். “யேசுவின் நாமம் என்னும் எண்ணெயால் தெளிக்கப்படாத எந்த உணவும் என் ஆத்துமத்துக்கு உலர்ந்ததாகவே இருக்கிறது; யேசுவின் நாமத்தின் வாசனை இல்லாவிடில் ஒவ்வொரு பிடி உணவும் உருசி யற்றது, யேசுவின் நாமம் அதில் இல்லாவிடில் புத்த கம் இனிப்பற்றது. யேசுவின் நாமம் கேட்கப்படா விடில் சம்பாஷணை பயனற்றது'' என அதே பரிசுத்த வான் இன்னோரிடத்தில் கூறுகிறார்.

ஜாண் நுஸ்பாம் என்பவர் வைத்திய நிபுணர். மூனிச் நகரில் புகழ்படைத்தவர். முப்பத்தோராண்டு களாக அவர் வைத்தியம் செய்து பத்தாயிரம் அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறார். “யேசுக்கிறிஸ்து நாதருக்கு மகிமை உண்டாகக்கடவது'' என்னும் வார்த்தைகளைக் கூறி அவர் தலைசாய்த்து உயிர் விட்டார்.

கூடஷி என்னும் கணித நிபுணர் சிறு பிள்ளை களுக்கு ஞானோபதேசம் கற்றுக்கொடுத்து புது நன்மை உட்கொள்ள அவர்களைத் தயார் செய்வதைத் தம் ஆனந்தமாகக் கருதுவார்; தம்முடன் இருக்கும் கணித சாஸ்திரிகளுக்கு நம் வேதசத்தியங்களை எடுத்துரைத்து வியாக்கியானம் செய்வார். அவரது விசுவாச உச்சாரணத்தைக் கேள்: "நான் கிறிஸ்த வன்; அதாவது, டிக்கோ தெபிராஹே, கோப்பெர்னிக் குஸ், தேக்கார்த், நியூட்டன், பெர்மா, லெப்னிட்ஸ், பாஸ்க்கால், கிரிபால்டி, யூலர் இவர் போன்ற வான சாஸ்திரிகளும் சென்ற நூற்றாண்டின் கீர்த்திவாய்ந்த கணித விற்பன்னரும் விசுவசித்து வந்ததுபோல், யேசுக்கிறிஸ்துநாதர் கடவுள் என விசுவசிக்கிறேன். மேலே கூறப்பட்டவர்களைப் போல் நானும் கத்தோ லிக்கன். என் விசுவாசம் பிதிரார் ஜி தமாய் நான் பெற்றுக் கொண்ட தப்பெண்ணமல்ல. ஆனால் ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவு'' - இவ்வித விசுவாச உச்சார ணம் உண்மையாகவே யேசுக்கிறிஸ்துநாதரின் பெயரை அர்ச்சிப்பதாகும்.

பிரஸ்ஸல்ஸ் நகர்ப் பொருட்காட்சி சாலையில் ஒரு படம் இருக்கிறது. நாடு கடத்தப்பட்ட நெப்போலிய யனுடைய படம் அது. அதிகாரத்துடனிருக்கையில் “பத்து லட்சம் மனிதர் எனக்கு ஒரு பொருட்டா?'' என்ற நெப்போலியனுடைய படம். சென்ற ஹெலே னாத் தீவில் அவன் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக அந்தப் படத்தில் வரையப்பட்டிருக்கிறது - அவனைச் சுற்றிலும் அவனால் உயிரிழந்த கணக்கிட முடியாத போர் வீரர்களின் ஆவிகள் நின்று அவனை மொய்க் கின்றன. தான் நினைத்ததை நிறைவேற்றி முடிப்ப தற்காக அவன் அத்தனை லட்சம் பேர்களையும் சாவுக்கு அனுப்பினான். அவர்களது ஆவிகள் அவ னுக்கு முன் தோன்றி அவனைப் பயமுறுத்துகின்றன; கைகளை உயர்த்தி அவனை அடிக்கப் போகின்றன. பார்க்கப் பயங்கரக் காட்சி. அவர்கள் உயிரிழக்க தானே காரணம் என்ற நினைவு நெப்போலியனை உபாதிக்கிறது. இந்தப் பயம் அவனது பார்வை யிலேயே காணப்படுகிறது.

உண்மைக் கிறிஸ்தவர்களாகிய நம் கண்முன் இன்னொருவிதமான படம் காட்சியளிக்கிறது - கல் வாரி மலைமீது சிலுவையில் தொங்கும் யேசுவின் உருவம். இங்கு கோடிக்கணக்கான மக்கள் கைகளை அவர் பக்கமாய் உயர்த்துகிறார்கள் - அவரைச் சபிக்க அல்ல, திட்டுவதற்காக அல்ல, ஆனால் வாழ்த்தி மகி மைப்படுத்தும்படி. ''பத்து லட்சம் மனிதர் எனக்கு ஒரு பொருட்டா?" என நெப்போலியன் கூறி, தன் சுய நலத்துக்காக அவர்களை யுத்த களங்களில் பலியிட் டான். "ஒரு ஆத்துமம் முதலாய் எனக்கு அளவிடற்கரிய திரவியம்" என கிறிஸ்துநாதர் கூறி தம்மை நமக்காகப் பலியிட்டார்.

இந்தப் பெரும் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. மனிதர் கன்னெஞ்சராயிருக்கலாம், துஷ்டர்களாயிருக்கலாம், ஆனால் மானிடர்மேலுள்ள நேசத்துக்காக நம் ஆண்டவராகிய யேசுக்கிறிஸ்து நாதர் கொடுத்த பலியை ஒருபோதும் நாம் மறக்கக் கூடாது. நன்றியற்றவர்களாய் நடக்கக்கூடாது.