இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாழும் ஜெபமாலையின் சிறப்பு அம்சங்கள்!

 நோக்கம்:

1. கடவுளின் நீதியின் உக்கிரம் அமர்த்தப்பட வேண்டும். ஆன்மாக்களின் விசுவாசம் புதுப்பிக்கப்பட்டு, பாவிகள் மனந்திரும்பி, மாதாவின் மாசற்ற இருதய வெற்றி வழியாகத் தாயாகிய சத்திய திருச்சபை தழைத்தோங்க வேண்டும். இதை முதல் நோக்கமாகக் கொண்டு “வாழும் ஜெபமாலை'' திருச்சபையின் அனைத்து மக்களாலும் ஜெபிக் கப்பட வேண்டும். 2-ம் நோக்கம் இறுதிக்கால புதிய நட்சத் திரமான அர்ச். பிலோமினம்மாளின் வணக்கத்திற்காக!

2. வாழும் ஜெபமாலையில் பல லட்சக்கணக்கான மக்கள், நெருங்கிய ஜெப உறவு கொண்டு ஒரே நோக்கத் தோடும், ஒரே கடவுள் அன்பிலும் ஒன்றுபட்டிருக் கிறார்கள். உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே தேவ சிநேகத்திலும், ஒரே வரப்பிர சாதத்தினாலும் ஞான ஊட்டம் பெறுகிறார்கள். இது உலக ஜெபமாலை ஐக்கியம்.

3. வாழும் ஜெபமாலையைக் கைக்கொள்ளும் ஒவ்வொரு ஆன்மாவும், தன்னை ஒரு சிறு எறும்பாகக் கருத வேண்டும். மனுக்குல இரட்சிப்பாகிய பெரும் மலையை நாம் கட்டி எழுப்பவேண்டும். சர்வேசுர னுடைய சித்தம் இது. ஒவ்வொருவரும் தினமும் பத்து மணற்பரல்களை (10 அருள் நிறை மந்திரங்களை) கொண்டு சேர்க்க வேண்டும். அநேகர் 53, 153 என்று உழைப்பதும் உண்மை. உலகடங்கிலும் இப்படி இரட் சிப்பின் மங்கள வார்த்தை உச்சரிக்கப்பட்டு இரட்சண்ய மலை முற்றுப்பெறும். 

4. வாழும் ஜெபமாலை என்பது பாத்திமா தான்! மரியாயின் பிள்ளைகள் பாத்திமா செய்திகளை ஏற்க வேண்டும், அனுசரிக்க வேண்டும், ஜெபம், தவம், மாதா வுக்கு அர்ப்பணம், மரியாயின் மாசற்ற இருதயத்துக்குப் பரிகாரம் ஆகிவற்றை ஜெபமாலையுடன் இணைத்துச் செய்ய வேண்டும். தற்காலத்தில் நிறைய “காட்சிகளும்'' “செய்திகளும்'' நடமாடுகின்றன. அவை பாத்திமா செய்திகளை மறைக்கின்றன. இந்தத் தப்பறையில் நாம் ஈடுபடக் கூடாது. மரியாயின் மாசற்ற இருதய வெற்றியே பாத்திமாவின் சுருக்கமாகும்.

5. வாழும் ஜெபமாலை என்பது, நேசிக்கிற இருதயங் களின் ஐக்கியம். சேசு மரியாயின் இருதயங்களுடன் ஒன்றிக்கிற ஆன்மாக்களின் ஐக்கியம் அது. முதலில் ஒரு முழு ஜெபமாலைக்குத் தேவையான 15 ஆன்மாக்கள் ஒன்றித்து தேவசிநேகத்தில் ஐக்கியமாயிருக்கின்றன. அப்படியே பதினைந்து பதினைந்தாக லட்சம், கோடிக்கணக்கில் வாழும் ஜெபமாலையை ஜெபிக்கிற ஆன்மாக்கள் ஒன்றாய் சேர்ந்து, ஜெபித்து, ஒரு மாபெரும் ஜெப சக்தி உருவாகிறது. அந்த ஆன்மாக்கள் ஒன்றாக சேசு மரியாயையும், ஒருவர் ஒருவரையும் நேசிப்பதால் ஒரு மாபெரும் அன்புச் சூளை உரு வாகிறது. அந்த தேவசிநேகச் சுவாலை மோட்சத்தை எட்டுகிறது. அதிலே மனுக்குல இரட்சண்யம் விளைகிறது. 

6. வாழும் ஜெபமாலையை ஜெபிக்கிற கோடிக்கணக்கான ஆன்மாக்களே பரிசுத்த கன்னித்தாயின் மாபெரும் இராச்சியம். இந்த மரியாயின் இராச்சியம் வரும் போது, மரியாயின் மாசற்ற இருதயம் வெற்றி பெறும். பாத்திமாவில் மாதா இதை வாக்களித்திருக்கிறார்கள். “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றிபெறும்''. என்றார்கள். இந்த மாசற்ற இருதய வெற்றியே வாழும் ஜெபமாலையின் இலட்சியம். ஏனென்றால் அதுவே சேசு கிறீஸ்துவின் இராச்சியம்.