ஒரு தவறான வாதம்!

பாவசங்கீர்த்தனம் தெய்வீகமான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்னும் விஷயத்தில் வரலாறும், பாரம்பரியமும் எவ்வளவு தெளிவாகவும், ஆணித்தர மாகவும் இருக்கின்றன என்றால் இந்த தேவத்திரவிய அனுமானத்தின் எதிரிகள் எப்படியாவது இதற்கு எதிரான ஒரு வாதத்தைக் கண்டுபிடிக்க மிகக் கேவலமான வழி களிலும் கூட முயற்சி செய்கிறார்கள்.

இதன் விளைவாக, அது ஒரு மனிதனால் உருவாக்கப் பட்டது என்னும் கட்டுக்கதையைக் கைவிட்டு, கிறிஸ்துவே நேரடியாக பாவங்களை மன்னிக்கிறார் என்ற வாதத்தில் இறங்குகிறார்கள்; ஆகவே இத்தகைய ஒரு அதிகாரத்தை மனிதர்களின் மீது அவர் பொழிவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அவர்கள் வாதிடுகிறார்கள்!

சேசுக்கிறிஸ்துநாதர் தமது திருப்பாடுகளைக் கொண்டும், தமது விலைமதியாத திரு இரத்தத்தை விலை யாகத் தந்தும் மனிதனை இரட்சித்தார் என்பது வெளிப் படையான சத்தியம்தான். ஆனால் கிறீஸ்து நாதருடைய திருமரணம், அவருடைய திரு இரத்தம் ஆகியவற்றின் பேறு பலன்கள் ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்துமத்திற்கும் தொடர்ந்து வழங்கப்படுவது அவசியமாக இருக்கிறது. நம் இரட்சகர் நம் இரட்சணியத்திற்காக ஓர் ஒப்பற்றதும், அளவற்றதுமான விலையைத் தம் பிதாவுக்குச் செலுத் தினார். ஆனால், இந்த உத்தமமான இரட்சிப்பின் அலுவலை அவர் முழுமையாக நிறைவேற்றியிருந்தும் நாம் உடனே சம்மனசுக்களாக மாறிவிடவில்லை. இன்னும் நாம் பலவீனமான, அழியக்கூடிய மனிதர்களாகத்தான் இருக் கிறோம். இன்னும் பாவ சோதனையால் தாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம், தள்ளாடுகிறோம், விழுந்து விடுகிறோம். பாவம் இன்னும் நம் மத்தியில் இருந்து பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்கள் பாவம் செய்கிறார்கள்; பாவத்தில் நிலைத்திருக் கிறார்கள்; கொலை செய்கிறார்கள்; பொய் சொல் கிறார்கள், திருடுகிறார்கள், சரீர அசுத்தப் பாவங்களை ஏராளமாகக் கட்டிக் கொள்கிறார்கள், பலவீனமான மனித சுபாவத்திற்குரிய எண்ணற்ற பாவங்களில் தொடர்ந்து விழுந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

நம்மை சம்மனசுக்களுக்கும், ஏன் கடவுளுக்குமே கூட ஒரு விதத்தில் ஒப்பானவர்களாக ஆக்குகிற ஆத்து மத்தின் மாபெரும் சத்துவமாகிய சுயாதீன சித்தத்தைக் கடவுள் நமக்குத் தந்திருக்கிறார். ஆனால் நாமோ மிக இழிவான முறையில் சுதந்திரம் என்னும் இந்தக் கொடை யைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். கடவுளின் நன்மைத் தனத்தையெல்லாம் மீறி, நாம் தொடர்ந்து, அடிக்கடி பாவம் செய்கிறோம், மிகக் கனமான பாவங்களைக் கூட எளிதாகக் கட்டிக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமாக உலகில் பாவம் பெருவெள்ளத்தைப் போலப் பெருகிக் கொண்டே போகிறது. நம்மைப் பாவத்திலிருந்து இரட் சிக்கவே கடவுள் உலகிற்கு வந்தார். அப்படியானால், பாவத்தை மன்னிக்கவும், புதிய பாவங்களில் நாம் விழுவ தைத் தவிர்க்க நமக்கு பலமும், உதவியும் தரவும் அவர் ஒரு பயனுள்ள வழியைக் கட்டாயம் உண்டாக்கி வைத்திருக்க வேண்டும் அல்லவா? அந்த வழி பாவசங்கீர்த்தனம்தான் என்பது சொல்லாமலே விளங்கும்.