இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானத் தாத்தாவும் ஞானப் பேத்தியும்!

(அர்ச். ஜான் மரிய வியான்னியும், அர்ச். பிலோமினம்மாளும்)

கூரேதார்ஸ் என்றழைக்கப்படுகிற சகல பங்குக் குருக் களுக்கும் பாதுகாவலராய் திருச்சபையால் கொடுக்கப் பட்டிருக்கிற அர்ச். ஜான் மரிய வியான்னி என்றவுடனேயே அர்ச். பிலோமினம்மாளின் ஞாபகம் ஓடிவரும். அவளை இவர் “என் அன்புள்ள சின்ன அர்ச்சியசிஷ்டவள்'' என்றே அழைப்பார். தாம் செய்த எல்லா நன்மைகளுக்கும் அவளே காரணம் என்பார். அவர் அர்ச். பிலோமினம்மாளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அதன் அடிப்படையிலேயே நடந்து வந்தார். அவளுடைய காரியங்களை இவரும் இவருடைய காரியங்களை அவளும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்.

முத். பவுலின் ஜாரிகோ அர்ச். பிலோமினம்மாளின் திருப்பண்டம் ஒன்றை அர்ச். ஜான் மரிய வியான்னிக்குக் கொண்டு கொடுத்தாள். அவர் ஒரு சேத்திரம் கட்டி அதில் அந்த திருப்பண்டத்தை வைத்து அதை அவளாகவே பாவித்து வந்தார். 1843-ல் அவர் நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கை யிலிருந்த போது அர்ச். பிலோமினம்மாள் அவரைக் குணமாக்கினாள். ஒரு தடவை பசாசு இவ்வர்ச்சிய சிஷ்டவரின் படுக்கையில் நெருப்பு வைத்துவிட்டது. அந்த நெருப்பு படுக்கையின் மேல் பகுதியில் தொங்கிய அர்ச். பிலோமினம்மாளின் படம் வரை எரிந்து அத்துடன் அணைந்து விட்டது. அர்ச். பிலோமினம்மாளைக் கொண்டே அவர் ஆர்ஸ் என்ற மிக மோசமாயிருந்த தன் பங்கைப் புனித இடமாக்கினார். அர்ச். வியான்னியா ருக்கும் அர்ச். பிலோமினம்மாளுக்குமிடையில் ஏற்பட் டிருந்த அன்பு ஒரு ஞானத் தாத்தாவுக்கும் ஞானப் பேத்திக்கும் இடையிலான அன்பாகும். 

அர்ச். பிலோமினாம்மாளின் பாதுகாவலைத் தேடிய இதர அர்ச்சியசிஷ்டவர்கள்

அர்ச். பீற்றர் ஜீலியன் எய்மார்ட்
அர்ச். ஷானல் இராயப்பர்
அர்ச். மரிய அந்தோனி கிளாரட்
அர்ச். மதலேன் சோபி பாரட்
அர்ச். பெல்லத்தியே யூஃராஸியா
அர்ச். பிரான்சிஸ் சேவியர் கப்ரீனி
அர்ச். ஜான் நெப்புமசேன் நியூமன்
முத். அன்னா மரிய தாகி
முத். பவுலின் ஜாரிகோ
இன்னும் பலர்.

திருச்சபையின் தவறா வரம் பெற்ற பாப்புமார்களின் சார்பாக இத்தனை சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தவள் அர்ச். பிலோமினம்மாள். அவளுடைய வல்லமை, அவளுடைய பிரார்த்தனையை எழுதிய அர்ச். ஜான் மரிய வியான்னி கூறுவதுபோல் சர்வேசுரனுடைய சர்வ வல்லமையாயிருக்கிறது. அவளை அவர் தம் விசேஷ திட்டங்களை நிறைவேற்றும் கருவியாகத் தெரிந்து கொண் டிருக்கிறார். இதை சாத்தான் அறிவான். ஆகவேதான் அவன் அவளுக்கெதிராக எழும்பினான்.