தெய்வீக ஞானமானவரை அடையும் மூன்றாவது வழி: ஒறுத்தல்!

ஒறுத்தலின் அவசியம்

194. உலக சுகபோகங்களில் வாழும் மனிதர்களின் இருதயங் களில் ஞானம் காணப்படுவதில்லை என்று பரிசுத்த ஆவியானவர் நமக்குக் கூறுகிறார் (யோப். 2813). அவர் அவர்களுடைய ஆசாபாசங்களையும், மாம்ச ரீதியான ஆசைகளையும் திருப்திப் படுத்துவதில்லை. ஏனெனில், மாம்ச சிந்தை மரணமாம். ஞானத் தின் சிந்தையோ சீவியமும், சமாதானமுமாம். எப்படியெனில், மாம் சத்துக்குரிய புத்தி சர்வேசுரனுக்குச் சத்துருவாயிருக்கின்றது (காண்க. உரோ.86,7). "நமது ஆவி மனிதனில் என்றென்றும் தங்காது, ஏனெனில் மனிதன் மாம்ச பந்தமாயிருக்கிறான்'' (ஆதி.6.3).

அவதரித்த ஞானமாகிய கிறீஸ்துநாதருக்குச் சொந்தமான வர்கள் அனைவரும் தங்கள் மாம்சத்தை அதன் ஆசாபாசங் களோடும், இச்சைகளோடும் சிலுவையில் அறைந்து விட்டார்கள். அவர்கள் சேசுநாதரின் மரணத்தைத் தங்கள் சரீரங்களில் எப்போதும் தாங்கியிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து தங்களுக்குத் தாங்களே வலுவந்தம் செய்கிறார்கள், அனுதினமும் தங்கள் சிலுவையைச் சுமக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே மரித்து, கிறீஸ்துவோடு அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் (கலாத் 5.24, 2 கொரி 410, லூக் 9.23, உரோ . 64, 8).

நாம் அவதரித்த ஞானமாகிய சேசுக்கிறீஸ்துநாதரைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டுமானால், சுய மறுதலிப் பையும், உலக ஒறுத்தலையும், சுய ஒறுத்தலையும் அனுசரிக்க வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவரின் இந்த வார்த்தைகள் நமக்கு அதிகத் தெளிவாகக் காட்டுகின்றன. 

195. சூரியக் கதிர்களை விட அதிக மாசற்றவராக இருக்கிற அவதரித்த ஞானமானவர் புலன்களின் இன்பத்தால் கறைப் பட்டுள்ள ஓர் ஆத்துமத்திலும், சரீரத்திலும் பிரவேசிப்பார் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள். உலகத் தோழமையையும், வீண் பெருமைகளையும் நேசிக்கும் மனிதர்களுக்கு அவர் தம் இளைப் பாற்றியையும், வாக்குக் கெட்டாத சமாதானத்தையும் தந்தருள் வார் என்று நம்பாதீர்கள். உலகத்தையும் தன்னையும் " வெற்றி கொள்பவனுக்கு நான் மறைந்திருக்கிற மன்னாவைத் தருவேன்" (காட்சி . 2:17).

இந்த நேசத்திற்குரிய அரசர் தமது சொந்த அளவற்ற ஒளியைக் கொண்டு சகல காரியங்களையும் ஒரே கணத்தில் அறிந்து கொள்கிறார், தெளிவாக உணர்ந்து கொள்கிறார் என்றாலும், அவர் இன்னும் கூட தமக்குத் தகுதியான மனிதர் களைத் தேடிக் கொண்டிருக்கிறார் (ஞான. 6, 17). அப்படிப்பட்ட வர்கள் வெகு சிலர் மட்டுமே என்பதால் தான் அவர் தேட வேண்டியிருக்கிறது. தமக்கும், தம் பொக்கிஷங்களுக்கும், தமது ஐக்கியத்திற்கும் தகுதியுள்ளவர்களாக இருக்கும் அளவுக்கு போதுமான அளவு உலகத் தன்மையற்றவர்களாக, அல்லது போதுமான அளவு உள்ளரங்கமானவர்களாகவும், தங்களையே ஒறுப்பவர்களாகவும் இருக்கும் மனிதர்களை அவர் மிக அரிதாகத் தான் கண்டுபிடிக்க முடிகிறது.