இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயின் வழியாக

258 நாம் நம் செயல்களையெல்லாம் மரியாயின் வழியாகச் செய்ய வேண்டும். அதாவது, எல்லாவற்றிலும் நாம் மாதாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர்களுடைய உணர்வால் வழி நடத்தப்பட நம்மையே விட்டுக் கொடுக்க வேண்டும். அந்த உணர்வு பரிசுத்த ஆவியின் உணர்வே யாகும். "கடவுளின் ஆவியால் நடத்தப்படுகிறவர்கள் கடவுளின் பிள்ளைகளாயிருக்கிறார்கள்” (உரோ. 8, 14). மரியாயின் ஆவியால் நடத்தப்படுகிறவர்கள் மரியாயின் பிள்ளைகளாயிருக்கிறார்கள். இதனால் அவர்கள் கடவுளின் பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். இது பற்றி நாம் கூறி யுள்ளோம். (எண். 29-30). தேவ அன்னையின் அநேக பக்தர்களுள் அவர்களுடைய உணர்வால் நடத்தப்படு கிறவர்கள் மட்டுமே அவர்கள் மீது உண்மையான பிர மாணிக்கமுள்ள பக்தி உடையவர்களாயிருக்கிறார்கள். மரி யாயின் உணர்வு கடவுளின் உணர்வு என்று நான் கூறினேன். ஏனென்றால் மாதா ஒரு போதும் தன் சொந்த உணர்வால் நடத்தப்படவில்லை. ஆனால் மரியா யின் சொந்த உணர்வாக ஆகுமளவிற்கு அவர்களை ஆட் கொண்டிருந்த கடவுளின் ஆவியால் தான் மாதா எப் போதும் நடத்தப்பட்டார்கள்.

இதனாலேயே அர்ச். அம்புரோஸ். "மரியாயின் ஆன்மா கடவுளைப் புகழ்வதற்கு நம் ஒவ்வொருவரிலும் இருப்பதாக நாம் கடவுளில் மகிழ்வதற்காக மரியாயின் உணர்வு நம் ஒவ்வொருவரிலும் இருப்பதாக'' என்கிறார் (எண். 217). புனித மணம் கமழ இறந்த சேசு சபை சகோதரர் ரொட்ரிகஸ் என்பவரைப் போல், முழுவதும் மரியாயின் உணர்வால் ஆட்கொளப்பட்டு நடத்தப்படும் ஆன்மா எவ்வளவு பேறுபெற்றது! அந்த உணர்வு சாந் முள்ளது; ஆயினும் வலிமையுடையது. தாகமுடையது; எனினும் விவேகமுள்ளது. தாழ்மையுள்ளது; ஆயினும் தைரியமுடையது. பொறையுடையது; எனினும் வளமும் உடையது.

259. மரியாயின் உணர்வால் நடத்தப்பட விரும்பும் ஆன்மா செய்ய வேண்டியவை : [1] தன் சொந்த உணர்வை விட்டு விட வேண்டும். தன் சொந்தக் கருத்துக்களை விட வேண்டும். ஏதாவது ஒன்றைச் செய்யத் துவக்குமுன் அதில் தன் சொந்த விருப்பத்தை ஒதுக்கி விடவேண்டும். உதாரணமாக, தியானம் செய்யுமுன் திவ்விய பலி பூசை செய்யுமுன், அல்லது பூசை காணுமுன், நற்கருணை அருந்துமுன் நம் சொந்த விருப்பத்தை விட்டு விட வேண்டும். ஏனென்றால், நம்முடைய உணர்வின் இருண்ட தன்மையும் நம் விருப்பம், நம் செயல் இவற்றின் தீமை யும் நமக்கு நன்மையானவை போல தோன்றினாலும் நாம் அவற்றின்படி நடந்தால் மரியாயின் உணர்வைத் தடை செய்து விடுவோம்.

[2] மாதா எவ்வாறு விரும்புவார்களோ அவ்வாறு நடத்தப்படும் படி நாம் அவர்களின் விருப்பங்களுக்கு விட் டுக் கொடுத்து விட வேண்டும். மரியாயின் கன்னி மை பொருந்திய கரங்களில் நம்மைக் கொடுத்து அங்கேயே நம்மை நாம் விட்டு விடவேண்டும். எவ்வாறெனில், ஒரு தொழிலாளி கையில் விடப்பட்ட கருவியைப் போலவும், அல்லது ஒரு இசை வல்லுநன் கையில் இசைக் கருவி போலவும், அவ்வாறு விடவேண்டும். கடலில் எறியப் பட்ட கல்லைப் போல் நாம் நம்மையே மாதாவிடம் இழந்து, கையளித்து, விட்டு விடவேண்டும். இதை ஒரு விநாடி யில் ஒரு நினைவால், நம் சித்தத்தின் ஒரு சில அசைவால் செய்து விடலாம். அல்லது சில வார்த்தைகளால் பின் வருமாறு அது செய்யப்படலாம் : "என் நல்ல தாயே. என்னை நான் உங்கள் கரங்களில் விட்டு விடுகிறேன்.” இவ்வாறு செய்யும் ஐக்கிய முயற்சியில் இனிமை எதை யும் நாம் உணராதிருக்கலாம். ஆனால் அதற்காக அது உண்மையில்லாமல் போகாது. ஒருவன் ''என்னை பசா சுக்கு கொடுக்கிறேன'' (ஆண்டவர் காப்பாராக!) என்று இதே உண்மையுடன் சொல்வானானால், அதில், காணக் கூடிய மாற்றம் எதுவும் இல்லாதிருந்தாலும், அவன் பசாசுக்குத் தானே உண்மையில் சொந்தமாகி விடுகிறான்! அதே போலத்தான்.

[3] ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கும் போதும், அதற்குப் பின்னும் இடைக்கிடையே இந்த ஐக்கிய அர்ப் பண முயற்சியை நாம் புதுப்பிக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக அப்படிச் செய்கிறோமோ அவ்வளவு சீக்கிர மாக நாம் அர்ச்சிக்கப்படுவோம். அவ்வளவு சீக்கிரமாக கிறீஸ்து நாதருடன் ஐக்கியம் அடைவோம். மரியாயிடம் ஐக்கியம் கொள்வ தன் தவிர்க்க முடியாத விளைவு தான் கிறீஸ்துவுடன் நமக்குக் கிடைக்கும் ஐக்கியம். ஏனென்றால் சேசுவின் உணர்வுதான் மரியாயின் உணர்வாக இருக்கிறது.