இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எபிரேயருக்கு எழுதிய நிருபம் - பாயிரம்

அர்ச் சின்னப்பர் உரோமாபுரியில் முதல்முறை சிறையிலிருக்கும் போது கர்த்தர் அவதாரமான ஏறக்குறைய 60-ம் வருஷத்தில் இந்த நிருபத்தை யூதேயா தேசத்திலுள்ள புதுக் கிறீஸ்தவர்களான யூதர்களுக்கு எழுதினார். 

அவர்கள் மோயீசன் பிரமாணத்தை முழுவதும் விட்டுவிட்டுச் சுவிசேஷத்தில் அதிகமதிகமாய் உறுதிப்படும்படிக்கு மோயீசனிலும் பழைய ஏற்பாட்டின் ஆசாரியரிலும் சேசுக்கிறீஸ்து நாதர் மிகவும் மேன்மைப்பட்டவர் என்றும், பழைய ஏற்பாட்டின் பலிகளிலும் புதிய ஏற்பாட்டின் பலியானது மிகவும் உத்தமமானது என்றும், அநேக நியாயங்களினால் காட்டினபிறகு, நன்னடத்தைக்குரிய பற்பல புத்திமதிகளைச் சொல்லி நிருபத்தை முடிக்கிறார். 

இந்த நிருபம் அர்ச். சின்னப்பர் எழுதின நிருபங்களுக்குள்ளே வரிசை முறையில் கடைசியானதாகிலும், போதக விஷயத்தில் முந்தினதென்று சொல்லத்தகும்.