இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இப்பக்தி முயற்சி ஒரு உத்தம வழி

157. சேசு கிறீஸ்துவிடம் செல்வதற்கும் அவருடன் ஐக்கியமாவதற்கும் ஒரு உத்தம வழியாக இருக்கிறது மாதாமீது கொள்ளும் இப்பக்தி. ஏனென்றால், சிருஷ்டி டிகளில் மிக உத்தமமான, மிகப் புனிதம் வாய்ந்த சிருஷ்டி தேவ மரியாயே. ஓர் உத்தம முறையால் நம் மிடம் வந்த சேசு கிறீஸ்து தனது மாபெரும் இவ் அதிசயப் பயணத்திற்கு மரியாயைத் தவிர வேறு எந்த மார்க்கத் தையும் தெரிந்து கொள்ளவில்லை. மிக உந்நதரும், அறி வுக்கு எட்டாதவரும், சென்று அடைய முடியாதவரும், தாமே இருப்பவருமான இறைவன் ஒன்றுமில்லாத, உலகின் சிறிய புழுக்களாகிய நம்மிடம் வர சித்தங் கொண்டார் இது எவ்வாறு நடந்தேறியது?

மிக உந்நதர் தாழ்மையுள்ள மாதாவின் வழியாக நம்மிடம் வந்தார். தெய்வீகமாக, உத்தமமாக, தம்மு டைய தெய்வீகத்திலும் பரிசுத்த தனத்திலும் எதுவொன் றையும் இழக்காமல் வந்தார். சிறியவர்களாகிய நாமும் மரியாயின் வழியாக மிக உந்நதரிடம் உத்தமமாக, தெய் வீகமாக, எதற்கும் அஞ்சாமல் செல்ல வேண்டும்.

எதற்குள்ளும் அடக்கப்பட முடியாதவர் தாழ்மையும் எளிமையுமுள்ள மாதாவினால் முழுவதும் கொள்ளப் படவும் மாதாவுக்குள் அடைபட்டுக் கொள்ளவும் தம்மை விட்டுக் கொடுத்தார். அதில் அவர் தம்முடைய அளவற்ற தன்மையில் எதையும் இழந்து விடவில்லை. அது போலவே தாழ்மையுள்ள மாமரி அன்னை நம்மை முழுவதும் தன் னுட் கொள்ளவும் நம்மை வழி நடத்தவும் செய்யுமாறு நாம் முற்றுமாக, எவ்வித வைப்புமின்றி நம்மை விட்டுக் கொடுக்க வேண்டும்.

எட்டாப் பரம்பொருள், மாதா வழியாக நம்மை அணுகி வந்தார். நம்முடன் நெருக்கமாக, உத்தமமாக, ஏன் தம்முடைய ஆள்தன்மையிலேயே நம் மனித இயல் புடன் தம்மை ஐக்கியப்படுத்தினார். இதில் அவர் தம் முடைய மகத்துவத்தில் எதையும் இழந்துவிடவில்லை. அது போலவே நாமும், தள்ளப்பட்டு விடுவோம் என்ற பயம் இல்லாமல், மரியாயின் வழியாகக் கடவுளை அணுகிவந்து மகத்துவ தேவனுடன் உத்தமமாகவும் நெருக்க மாகவும் ஐக்கியமாகவேண்டும்.

இறுதியாக, இருக்கிறவர் இல்லாமையிடம் வர கிருபை கூர்ந்து ஒன்றுமில்லாமையைக் கடவுளாக- அதா வது இருப்பவராக ஆக்கத் தயை கூர்ந்தார். தம்மை முழு வதும் முதுமை காணா கன்னிமரியிடம் ஒப்படைத்து கீழ்ப்படுத்திக் கொண்டதால் இதனை உத்தமமாய்ச் செய் தார். நித்திய காலமாக இருக்கிறவர் அதில் குறைவு படாமலே, காலத்தில் அங்ஙனம் செய்தார். இதைப் போலவே ஒன்றுமில்லாமையாகிய நாமும், வரப்பிரசா தத்தாலும் மகிமையாலும் மரியாயின் வழியாக கடவுளைப் போன்று ஆகமுடியும். எவ்வாறு? மரியாயிக்கு உத்தம மாகவும் முழுவதுமாகவும் நம்மைக் கொடுப்பதனாலேயே. இதனால் நம்மிலே ஒன்றுமில்லாமையாக இருக்கிற நாம் மரியாயிடமாய் எல்லாமாக இருக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். என்ற பயமே இல்லாமல் அங் ஙனம் ஆகமுடியும்.

158. சேசு கிறீஸ்துவிடம் செல்வதற்கு எனக்கொரு புது வழி திறக்கப்படுமானால், எல்லா அர்ச்சிஷ்டவர் களுடைய பேறுபலன்களாலும் அவ்வழி நிரப்பப்பட்டு அவர்களுடைய மேலான புண்ணியங்களால் அலங்கரிக் கப்படுமானால், சம்மனசுகளுடைய அழகாலும் அவர்களின் எல்லா அழகொளியாலும் அவ்வழி ஒளிர்விக்கப்பட்டு அழகுபடுத்தப் பட்டிருக்குமானால், அவ்வழியில் செல்ல விரும்புகிறவர்களைப் பாதுகாத்து தாங்கி வழி நடத்த சகல தூதர்களும் அர்ச்சிஷ்டவர்களும் வருவதாயிருக்கு மானால், நிச்சயம் நிச்சயம், நான் திடமாய்க் கூறுகிறேன்நான் உண்மையைப் பேசுகிறேன் - அத்தகைய ஒரு உத்தம வழியைவிட நான் மாதாவின் அமல பாதையைத்தான் தெரிந்து கொள்வேன். "என் வழியை அமல பாதையாக் கினார் தேவன்'' (சங் 17, 33) கறையோ புள்ளியோ இல்லாத வழி அது. கர்ம வினையோ ஜென்ம வினையோ படராத வழி. இருளோ நிழலோ படராத வழி. என் அன்புள்ள சேசு இரண்டாம் முறை தம் மகிமையில் உலகிற்கு அரசாள வருவதாயிருந்தால் - அவர் நிச்சயம் வரு வார்- அவர் முதலில் எவ்வளவோ பத்திரமாயும் உத்தம் மாயும் தாம் வந்த தேவ மரியாயைத் தவிர வேறு வழி யைத் தெரிந்து கொள்ளவே மாட்டார். அவருடைய முதல் வருகைக்கும் இறுதி வருகைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், முதல் வருகை இரகசியமாயும் மறை வாயும் இருந்தது. இரண்டாம் வருகை மகிமையாயும் ஒளி பொருந்தியதாயும் இருக்கும். ஆனால் இரண்டு வருகைகளுமே உத்தமமானவையாக இருக்கும் ஏனெ னில் இரண்டுமே மாதா வழியாக நிகழ்கின்றன. ஆ! கண்டுணர முடியாத ஒரு மறை பொருள் இதில் உள்ளதே "எல்லா நாவும் இங்கு மவுனமாகக் கடவன'' -Hic taceat omniso lingual