இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே!

நம்முடைய நேசத்துக்கும், வணக்கத்திற்கும், சங்கைக்கும், ஸ்துதிக்கும் முற்றும் உரியவர் ஒருவரே; அவரே கடவுள்; நம்முடைய கர்த்தர். நாம் முழுவதும் அவருக்கு மட்டுமே சொந்தம். சகல நன்மைகளும் உருவான அவர் சகல புகழ் ஸ்துதிகளுக்கும் உரியவரே.

இவ்வாறிருக்க, நம் தேவதாயைப் புகழும் பொழுது ஒருவேளை, அவர்களை கடவுளுக்கு மட்டுமே உரிய புகழோடு புகழ்ந்து கூறிவிடுகிறோமோ? இது கடவுளின் உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பாகாதா? கடவுளுக்கு உகந்த காரியமாகுமாவென்று மனத்தகத்தே ஐயம் உதித்தல் கூடும். இது தவறு; ஏனெனில் எல்லாம் வல்ல சர்வேசுரனே சகல புண்ணியங்களினாலும் வரங் களினாலும், வரப்பிரசாதங்களினாலும் அவர்களை அலங்கரித்திருப்பதைச் சற்று ஆராய்வோமானால், நாம் ஐயமுற மாட்டோம். மிக அழகாகச் செதுக்கப்பட்ட சிலையைக் கண்டு நாம் மகிழும் போதும், அச்சிலை ஓர் அபூர்வ வேலைப்பாடென அதை நாம் புகழ்ந்து பேசும்போதும் அதை உருவாக்கிய சிற்பியின் புகழ் மங்குமென யார் சொல்ல முடியும்? நாம் சிலையைப் புக ழும் அளவுக்கு சிற்பியின் புகழும் உயரும். அதுபோன்றே, கடவுளின் உன்னத சிருஷ்டியாகிய மாமரியன்னையை எவ்வளவுக்கு அதிகமாய்ப் புகழ்ந்து ஸ்துதிக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாய் தேவனுக்கு உரித்தான புகழும் தன்னிலேயே உயருகின்றது. “தாயை வெகுவாய்ப் போற்றுவதால் மகனுடைய மகிமையை ஒருவாறு மங்கச் செய்கிறோமென நினைத்தலாகாது. ஏனெனில் எவ்வள வுக்கு எவ்வளவு தாயானவர்கள் மகிமைப்படுத்தப் படுகிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு மகனுடைய மகிமையும் விளங்கும்... தாயைப் பற்றிப் புகழ்ச்சியாய் நாம் கூறுவது மகனுடைய புகழ்ச்சியாம்” (அர்ச். பெர்நார்து).

நாம் கன்னிமரியாயைப் புகழ்ந்து ஸ்துதிக்க வேண் டுமென்பது நமது ஆண்டவருடைய அவா! சுவிசேஷச் சம்பவங்கள் இதை நமக்குப் படிப்பிக்கின்றன. தீர்க்க தரிசிகளால் முன்னறிவிக்கப்பட்ட மெசியா எப்பொழுது வருவார் என்று ஏக்கம் கொண்டிருந்தனர் யூத மக்கள். கன்னிமாமரியன்னையும் இதே ஏக்கத்துடன் மிகவும் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்நிலை யில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட கபிரியேல் சம்மன சானவர் அவர்கள் முன் தோன்றி, சிரம்பணிந்து: “பிரியதத் தத்தினாலே பூரணமானவளே வாழ்க! கர்த்தர் உம்முடனே; ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே” (லூக். 1:28) என்று வாயார வாழ்த்திப் புகழ்கின்றார். இப் புகழுரையில் பொதிந்து கிடக்கும் பொருளை யாரால் சரிவரக் கண்டுபிடிக்கக்கூடும்? தேவன் அனுப்பிய தூதன் கூறும் வார்த்தைகள்; தேவனின் விருப்பத்தை வெளியிடும் வார்த்தைகள். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட் டிலும் தேவன் அநேகருக்கு தமது சம்மனசுக்களை அனுப்பியுள்ளார் என்பது உண்மைதான். ஆனால் கபிரியேல் தூதர் கன்னிமாமரிக்குச் சொன்ன மங்கள வார்த்தைகளைப் போன்ற புகழுரைகளை ஒரு தேவதூதனிடமிருந்து கேட்டவர் வேறு எவருமில்லை.

பிறர் சிநேகத்தால் தூண்டப்பட்ட நம் மாதா எலிசபெத்தம்மாளைச் சந்திக்கச் செல்கிறார்கள். தனது உறவினரைச் சந்தித்தவுடன் இஸ்பிரீத்துசாந்துவால் நிரப்பப்பட்ட எலிசபெத்தம்மாள், ஆண்டவரின் தாயென அவர்களை அழைக்கிறாள்; பெண்களுக்குள் பாக்கியவதி எனப் போற்றுகிறாள்; ஆண்டவரின் தாய் தன்னைச் சந்திக்க வர, தான் அருகதையற்றவள் என்று கூறுகிறாள். உலக இரட்சகரின் முன்னோடியான ஸ்நாபக அருளப்ப ரின் தாயைப் போல நாமும் நமதன்னையைப் போற்றிப் புகழ வேண்டாமா? நம்மால் இயன்ற அளவு அவர்களை வாழ்த்துதல் முறையன்றோ?

“ஓ மரியாயே! உமது திருவயிற்றின் கனியாகிய சேசு ஆசீர்வதிக்கப்பட்டவர்; அதற்குக் காரணம் நீரல்ல, நீர் சகல ஸ்திரீகளுக்குள்ளும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதின் காரணம் உமது குமாரனின் வரங்களே”( Serm. in Assumpt. B.M.V.) என்று கூறுகிறார் அர்ச். பெர்நார்து.

“மனுக்குலத்துக்கு தேவ ஆசீர் பெற்றுத் தந்து, பாவ நோய், நரக ஆக்கினை முதலியவை அகற்றிய மாமரியே! சூரிய பிரகாசத்திலும், அதிரூப லாவண்ய வடிவாய்ச் சகல செளந்தரிய அலங்காரமும் கொண்ட நீதி ஆதித்தனான தேவ சுதனின் மாதா நீரே, உம்முடைய மகிமையை எவ்விதமாய் வர்ணிப்போம்! மணி மகுடம் தாங்கிய உமது சிரம் மோட்ச முடி பெற எங்களை அழைக்கிறது; உமது மலர்ந்த திருவதனம் துயரம் நிறைந்த மனித இருதயங் களுக்கு ஆறுதல் அளிக்கிறது; சர்வேசுரனுக்குப் பிறகு உம்மைவிட வல்லபமுள்ளவர் ஒருவரும் இல்லை. உம்மை விட அதிசுத்த ஆத்துமா இல்லை” என்று பலவாறு வேதசாஸ்திரிகள் அவர்களைப் போற்றியிருப்பதிலிருந்து நம் தாயின் மகிமையை ஒரு சிறிது அறிய முடிகிறது.

“இதோ என்னை சகல மக்களும் பாக்கியவதி என்று அழைப்பார்கள்” என தேவதாய் அன்று கூறியது இந்நாள் வரை எவ்விதம் நிறைவேறி வருகிறது என்பதை “முன்னுரையில்” எடுத்துக் காட்டியுள்ளோம். “தேவ சுதனைத் தாங்கிய உதரமும், அவருக்குப் பாலூட்டிய கொங்கைகளும் பாக்கியம் பெற்றவைகளே.” அத்தாய் நம் புகழ்ச்சிக்கு முற்றும் உரியவர்களே. ஆகவே தேவனின் தாயும், நம் தாயுமாயிருக்கிற மரியாயின் புகழும், கீர்த்தியும், மகத்துவமும், வல்லமையும் உலகில் எங்கும் எப்பொழுதும் பரவ வேண்டுமென ஆசிப்பது நம் கடன். அவர்களைப் பற்றி பிறருக்கு எடுத்துக் கூறுவது அவசியம்.

“அர்ச். மரியாயே, மோட்சமே கொள்ளாத தேவனைப் பெற்ற உம்மை எவ்விதம் ஏற்ற விதமாகப் போற்றிப் புகழ வேண்டுமென நாங்களறியோம்! புகழ் பெற்ற பிரசங் கிகள் உமது பெருமையை மனிதருக்கு எடுத்துரைத்திருக் கின்றனர்; ஞானிகள் உமது மகிமையைப் பற்றி எழுதியுள் ளனர். உத்தம கிறீஸ்தவர்கள் அனைவரும் உம்மைத் துதித் துப் பாடுகின்றனர். உமது புகழை உலகிற்கு சரிவர எடுத் துக் கூற இயலாத நாங்களும் எங்களால் இயன்ற மட்டும் எங்கள் சக்தியெல்லாம் கூட்டி உம்மைத் துதிக்க முயலுவோம். எங்கள் துதி புகழ்ச்சிகளைத் தயவாய் ஏற்றருளும், தாயே!”


பிரகாசமாய் ஸ்துதிக்கப்பட யோக்கியமாயிருக்கிற கன்னிகையே!
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!