தலையான பாவங்கள், தலையான புண்ணியங்கள், தேவத்திரவிய அனுமானங்கள்

நரகத்தைத் தவிர்க்கவும், மோட்சத்தை அடையவும் தலையான பாவங்களை விட்டுத் தலையான புண்ணியங்களை அனுசரிக்கும்படி திருச்சபை நம்மை அழைக்கிறது.

தலையான பாவங்கள் 

1. அகங்காரம் 
2. கோபம் 
3. மோகம் 
4. லோபித்தனம் 
5. போசனப்பிரியம் 
6. காய்மகாரம் 
7. சோம்பல்.

தலையான புண்ணியங்கள்

1. தாழ்ச்சி
2. பொறுமை
3. கற்பு
4. உதாரம் 
5. மட்டசனம் 
6. பிறர்சிநேகம் 
7. சுறுசுறுப்பு.

நரகத்தைத் தவிர்த்து விட்டு, மோட்சத்தை அடைய நம்முடைய சொந்தப் பலன் போதவே போதாது. நமக்கு வரப்பிரசாதத்தின் அனுக்கிரகம் வேண்டியது. தேவ வரப்பிரசாதத்தை ஜெபத்தினாலும் (பூசை, ஜெபமாலை), தேவத்திரவிய அனுமானங்களாலும் அடையலாம்.

தேவத்திரவிய அனுமானங்கள்

1. ஞானஸ்நானம், 
2. உறுதிப்பூசுதல், 
3. நற்கருணை, 
4. பச்சாத்தாபம், 
5. அவஸ்தைப் பூசுதல் 
6. குருத்துவம், 
7. மெய்விவாகம்

தேவத்திரவிய அனுமானங்களைத் தவிர, ஜெபமாலை, உத்தரியம், அற்புதப் பதக்கம் போன்ற அருட்கருவிகளும் நமக்கு தேவ வரப்பிரசாதத்தைப் பெற்றுத் தரும் சாதனங்களாக இருக்கின்றன. 

மேற்கூறியவைகள் அனைத்தும் நரகத்தைத் தவிர்த்து, மோட்சம் செல்ல நமக்கு உதவும் வகையில் திருச்சபையால் நமக்குத் தரப்படும் உபாயங்களாகும்.

-முற்றும்-