தக்கபடி யுத்தஞ் செய்யாதவன் எவனும் முடி சூட்டப்படான்.

கிறீஸ்துவ சாங்கோபாங்கம் எது? அதை அடைவதற்கு யுத்தஞ் செய்யவேண்டும்; அந்த யுத்தத்தில் செயங் கொள்வதற்கு, நான்கு வித ஆயுதங்கள் அவசியமாகும்.

கிறீஸ்துவ ஆத்துமமே! மேலான சுவிசேஷக சாங்கோபாங்கத் தை அடைந்து, சர்வேசுரனோடு அந்நியோந்நியமாய் ஒன்றித்திருக்க உனக்கு மனதானால், அந்த மேலான ஞான சீவியம் என்னவென்று நீ அறியவேண்டியிருக்கிறது.

சிலர், ஞான சீவியத்தைச் சேர்ந்த கிருத்தியங்களாகிய கசை யால் அடித்துக்கொள்ளுதல், முள்ளொட்டியாணந் தரித்தல், ஒரு சந்தி உபவாசம் அனுசரித்தல், இராக்கண் விழித்தல் முதலிய வெளிக் கிருத்தியங்களை மாத்திரங் கவனித்து, இந்தத் திரேக ஒறுத்தல்களே ஞான சீவிய மென்பார்கள்.

வேறு சிலருடைய , விசேஷமாய்ச் சில பெண்பிள்ளைகளுடைய எண்ணமேதென்றால் : பல செபஞ் செபிப்பது, பல பூசை காண் பது, திவ்விய சடங்குகளுக்குப் போவது, கோவிலில் நெடுநேரம் இருப்பது, அடிக்கடி தேவத்திரவிய அநுமானங்களைப் பெறுவது முதலியவை புண்ணியக் கிருத்தியங்களாகையால், இவைகளை அது சரித்து வருகிற தாங்கள், மெய்யான புண்ணிய சீவியத்தைக் கைப்பற்றினதாக எண்ணங்கொள்ளுகிறார்கள்.

இன்னுஞ் சிலர், சரியாய்ச் சொல்லவேண்டுமானால், சந்நியாசி கன்னியாஸ்திரீகளில் முதலாய்ப் பலர், பொதுச் செபக் கிருத்தியங் களில் சுறுசுறுப்பு, அடக்கவொடுக்கம், மெளனம், சபை ஒழுங்கின் அநுசரணை முதலியவைகளே சாங்கோபாங்க சீவிய மென்பார்கள்.

இவ்வாறு பலர் பலவாறாய் தங்கள் தங்கள் மனதின்படிப் பற் பல கிருத்தியங்களே ஞான சீவியம், மெய்யான சாங்கோபாங்க மென்று அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால், இவர்களெல்லோரும் மோசம் போகிறார்களென்பது நிச்சயம். ஏனெனில், இந்த வெளிக் கிருத்தியங்களெல்லாம், மெய்யான சாங்கோபாங்கத்தை அடைவ தற்கு வழியாய், அல்லது மெய்யான சாங்கோபாங்கத்தின் பலனாய் மாத்திரம் இருக்கிறதேயல்லாமல், இந்தக் கிருத்தியங்களே மெய் யான ஞான சீவிய மென்பது முழுதுந் தப்பறையாம்.

ஆயினும் மெய்யான பக்தி, மெய்யான சாங்கோபாங்கத்தை அடைவதற்கு இக்கிருத்தியங்கள், பலத்த வழிபாடுகளாம். விமரிசை யுடன் இவைகளை அநுசரித்து வந்தால், புண்ணியத்தின் மட்டில் வெறுப்பும், பாவத்தின் மட்டில் ஆவலுமுள்ள நமது சுபாவ நாட்டத் தைக் கண்டித்துத் திருத்திச் சீர்ப்படுத்தலாம்; தந்திரங்களை எளிதாய் வெல்லலாம்; நமது இரட்சண்ணிய சத்துருவின் கண்ணிகளிலிருந்து தற்செயலாய் விலகி நடக்கலாம் , நம்மெல்லோருக்கும் அத்தியாவசிய மாய் வேண்டிய தேவ உதவி சகாயங்களை ஏராளமாய்ப் பெற்றுக் கொள்ளலாம்; ஆனதால் அந்த வெளிக்கிருத்தியங்களை விவேக விம் ரிசையுடன் அநுசரிப்பது உத்தமமாம்.

புண்ணியவான்களும், மெய்யான அர்ச்சியசிஷ்டர்களுமாய் இருக்கிறவர்கள், இந்த வெளிக்கிருத்தியங்களைச் செய்து வருகிறது அவர்கள் புண்ணிய நெறியில் விளைவிக்கிற பலன்களாகும். ஏனெ னில், அவர்கள் தங்கள் சரீரத்தைத் தண்டிப்பது, அது செய்த குற் றத்திற்கு ஆக்கினையாக, அல்லது அதை அடக்கிச் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படுத்துவதற்காக அல்லாமல் வேறல்ல; அவர்கள் பல நற்கிருத் தியங்களைச் செய்வது, தேவ ஊழியத்தில் முழுக்கவனம் வைப்பது எதற்காக ?

அவர்கள் வெகு பக்தியுடன் பலமுறை செபஞ் செபிப் பது எதற்காக? அவர்கள் நமது திவ்விய இரட்சகருடைய திருச் சீவியத்தையும் திருப்பாடுகளையும் அடிக்கடி தியானிப்பது எதற்காக? வினோதப் பிரியமா மிதந் தப்பின் ஆசையா? அல்ல. ஆனால், சர் வேசுரனுடைய இரக்கப் பெருக்கத்தையும், தங்களுடைய நன்றி கெட்டதனத்தையுந் திருத்தமாய்க் கண்டுணரவே அவர்கள் இந்தக் கிருத்தியங்களை எல்லாஞ் செய்து வருகிறார்கள்.

இதற்காகவே, அவர்கள் சர்வேசுரனை மேன்மேலுஞ் சிநே கித்து, தங்களை எப்போதும் நிந்தித்து, சிலுவை சுமந்த சேசுவைப் பின்பற்றிச் சுய மனதை வெறுத்து, சர்வேசுரனை ஸ்துதிக்க வேண்டும் மென்னுங் கருத்துடனே மாத்திரத் தேவதிரவிய அநுமானங்களைப் பெற்று வருகிறார்கள்; சர்வேசுரனோடும் வெகு ஐக்கியமாய் ஒன் றித்து ஏகோபித்திருக்கிறார்கள். நரக அலகையின் வஞ்சனைகளை விரோதித்து எதிர்த்து மல்லாடுவதற்கு வேண்டிய திடத்தையும் கைக்கொள்ளுகிறார்கள்.

வெளிக் கிருத்தியங்களில் மாத்திரம், சாங்கோபாங்கம் அடங்கி யிருக்கிறதென்று எண்ணுகிற மூடாத்துமாக்களிடத்தில், இதற்கு விரோதமாய்ச் சம்பவிக்கிறது; இந்தக் கிருத்தியங்கள் அவர்கட்கு வெகு கேடாயிருந்து, வெளியரங்கமான பாவங்களைப் பார்க்கிலும், அவர்களுக்குப் பல தீங்கு செய்கிறது.

இவ்வண்ணம் நேரிடுவதற்கு முகாந்தரமென்ன அந்தக்கிருத்தியங்கள் நற்கிருத்தியங்களல்லவோ? அவைகள் நற்கிருத்தியங்கள் தான். ஆனால், அவைகளை அவர்கள் ஒவ்வாத விதமாய் உபயோகித்து, அவைகளின் மட்டில் மிதந்தப்பி ஆவல் பட்டு, தங்கள் இருதய ஊக்கம், பற்றுதல்களைக் கண்டித்தடக் கக் கவலைப்படாமல், அது போகும் போக்கு நீக்கெல்லாம் போகவிட்டு, பசாசின் தந்திரத்திற்கு இணங்கி நடப்பதினாலேயே அவர்கள் இந்தக் கிருத்தியங்களால் பலனடையாமல் போகிறார்கள்;

சகல தந்திரமுங் கற்ற அலகையும், அவர்கள் மெய்நெறி தவறுகிறதைக் கண்டு, அவர் கள் தங்கள் தினக்கிருத்தியங்களை விடாமல் தொடங்கி நடத்தும்படி முதலாய் அவர்களைத் தூண்டுவதல்லாமல் பரலோகத்தைக் குறித்து முதலாயப் பல வீணான தோற்றங்களை அவர்களுக்கு ஏவிக்கொடுக் கின்றது. அப்போது அவர்கள் : பரலோகப் பிரவேசமானோம்; தெய்வலோகத் தரிசனம் அடைந்தோம் என்று வீணாய் எண்ணுகி றார்கள். மேலும் அந்த நரக அல்கையின் வஞ்சகம் இன்னும் எவ்வளவு கபடானதென்றால், அவர்கள் தியானஞ் செய்யும் போது, உத் தமமான சிந்தனைகளை அவர்கள் புத்தியிற் பிறப்பிக்கிறது. இதனால், இப்பிரபஞ்ச லோகம் அதன் சம்பத்துக்கள் எல்லாத்தையும் முற்றும் வெறுத்து மூன்றாஞ் சோதி மண்டலஞ் சேர்ந்தோமென்று, அவர்கள் ஆங்காரங்கொள்ள ஏதுவாகிறது.

ஆனால் நாம் அவர்களுடைய நடவடிக்கையை அற்பமாகிலும் ஆழ்ந்து பார்ப்போமானால், அவர்களின் அலங்கோலத்தையும், நாம் நாட வேண்டிய சாங்கோபாங்க நெறியினின்று அவர்கள் தவறின் தையுந் திட்டமாய்க் கண்டறிவோம். ஏனெனில், சொற்ப விஷய மோ, கனத்த காரியமோ, எதிலும் அவர்கள் தங்களை மற்றவர்கட்கு மேலாய் எண்ணுவார்கள்; தங்கள் புத்தியின்படியே நடப்பார்கள்; அவர்கள் மனதே அவர்களுக்கு வழிகாட்டி ; தங்களைச் சேர்ந்தவை களைக் கவனியாமல் பிறருடைய கிருத்தியங்களை மாத்திரங் கவனித் துப் பார்த்து, அவைகளில் குற்றம் கண்டு பிடிப்பார்கள்; அவர்கள் வெகு ஆவலாய்த் தேடி, வெகு அச்சத்துடன் காப்பாற்றிவருகிற உலக வீண் கீர்த்தியைக் குறித்து நாம் அற்பமாகிலுங் குறை பேசு வோமானால் அல்லது அவர்களுடைய தினக் கிருத்தியங்களில் சிலவற்றைச் சிறிது காலத்துக்கு நிறுத்தும்படிக் கற்பிப்போமானால், உடனே அவர்கள் வெகு விபரீதமாய்க் கலங்கி கஸ்திப்படுவார்கள்.

அவர்கள் தங்களையும், மெய்யான சாங்கோபாங்க நெறியையும் அறி யும்படிச் சர்வேசுரன் தாமே அவர்கட்குத் துன்பம், பிணி முதலிய உபத்திரியங்களை அனுப்புவதுண்டு; இவைகளெல்லாந் தேவ ஊழியர்களின் பிரமாணிக்கத்தைப் பரீட்சிக்கும் பரம் உரைக் கற்களாயினும், இவைகள் தேவ திருவுளமின்றி ஒருகாலுஞ் சம்பவியாவிட்டாலும், முழு ஆங்கார கெம்பீரமுள்ள அவர்கள் உள்ளம் எத்தன்மையானதென்று அப்போது நமக்கு வெளியாகும்.

இதுவுமன்றி இவ்வுலகத்தில் நமக்கு உண்டாகிற அநுகூலம் பிரதிகூலங்களில் தங்கள் மனதைத் தெய்வ சித்தத்திற்குக் கீழ்படுத்த அவர்களுக்குத் தெரியாது. ஏனெனில் சர்வ வல்லவரான சர்வேசுரனுடைய ஆதீனக் கற்பனைக்கு அடங்கி நமது புத்திக்கெட் டாத அவருடைய திருச் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதும், நிந்தை அவமானம், துன்ப துரிதங்களை அநுபவித்த சேசுகிறீஸ்துவைப் போல், நாம் நம்மைச் சகல சிருஷ்டிகளிலும் நிச சிருஷ்டிகளாய் எண்ணுவதும், நம்மை உபத்திரியப் படுத்துகிறவர்கள் சர்வேசுரனா லேயே ஏவிவிடப்பட்ட எத்தனங்கள், நாம் இரட்சணியம் அடைவ தற்கும், சாங்கோபாங்க நெறி சேர்வதற்கும் ஒத்தாசை செய்கிற உபகாரிகள் என்று ஏற்றுக்கொள்வதும், இன்னதென்று முதலாய் அவர்களுக்குத் தெரியாது. இதனால் நெறி தவறி நிர்ப்பாக்கியராவ. தற்கு அவர்களே வழிதேடிக்கொள்ளுகிறார்கள்.

இதுவுமல்லாமல் சுய நேசத்தால் இருளடர்ந்த கண்களைக் கொண்டு, அவர்கள் தங்களைப் பார்ப்பதால், அவர்கள் செய்கிற கிருத்தியங்கள் மெய்யாகவே சுகிர்த கிருத்தியங்களானாலும், அவை களில் அற்பக் குற்றங்குறை கண்டு ஆங்காரத்தை அடக்கவும், புண் ணிய நெறியில் நெடுந்தூரம் ஏறினதாக எண்ணாதிருக்கவும், பிறரி டத்தில் குற்றம் கண்டு பிடியாதிருக்கவும், அவர்களாற்கூடாது. அவர்களின் ஆங்காரம் அவர்கள் கண்களை அவித்து விட்டபடியால், அவர்கள் மனதைத் திருப்புவதற்கு, அருமையான தெய்வ உதவி வெகு அவசியமாயிருக்கிறது. வெளியரங்கமான பாவியைத் திருப்பு வதைப் பார்க்கத் தன் துர்ச் சுபாவத்திற்கு வஞ்சகமாய் இணங்கிய புண்ணிய வேஷத்தை மனதார உடுத்திக்கொள்ளுகிற பாவியைத் திருப்புவது அரிதென்று நாம் அநுதினமும் பார்த்து வருகிறோம் மல்லவா?

இதுவரையில் நான் சொல்லிக் காட்டிய வெளிக்கிருத்தியங் களில் சாங்கோபாங்கம் அடங்கியில்லை என்பது தெளிவாகின்றது. இப்போது சாங்கோபாங்கம் எதில் அடங்கியிருக்கிறதென்று சொல் கிறேன். அதாவது : சர்வேசுரனுடைய மட்டில்லாத இரக்கப் பெருக்கத்தைச் சிந்தித்து ஆராதிப்பதும், நமது நீசத்தனம், பாவத் தின்மட்டில் நமக்குள்ள நாட்டம் ஆவலை ஒப்புக்கொள்வதும், சர்வே சுரனை நேசித்து நம்மை நிந்திப்பதும், சர்வேசுரனுடைய சித்தத் திற்கு அமைந்து சிருஷ்டிகட்கு முதலாய்க் கீழ்ப்படிவதும், நமது மனதை முழுதும் வெறுத்துத் தேவ சித்தத்தை மாத்திரம் நாடி நடப்பதுமல்லாமல், சர்வேசுரன் தமது சிருஷ்டிகளுடைய நேசத் திற்குக் கீழ்ப்படிதலுக்கும் பாத்திரமாயிருப்பதால், அவருடைய திரு நாமத்தின் மகிமை, அவருக்கு மாத்திரம் பிரியப்பட வேணுமென்னுங் கருத்துத் தவிர, வேறெந்தக் கருத்தையும் விலக்கி மேற்குறித்த கிருத் தியங்களைச் செய்து வருவதே , மெய்யான ஞானச் சீவியம், மெய். யான சாங்கோபாங்கமெனப்படும்.

இஸ்பிரீத்து சாந்துவானவர் புண்ணியவான்களுடைய இருத யத்தில் பதித்திருக்கும் பரம் அறிக்கை கூறுவதும் இதுவே. திவ்விய இரட்சகர் சுவிசேஷத்தில் பலமுறையாய்க் கற்பிக்குஞ் சுய பரித் தியாகத்தை அடைவதற்கும் இதுவே வழி. இதுவே அவருடைய நுகத்தை இனியதாகவும், அவருடைய சுமையைப் பாரமற்றதாக வுஞ் செய்யும். நமது திவ்விய உபாத்தியாயர் தமது வாக்கினாலும் மாதிரிகையினாலுங் கற்பித்த கீழ்ப்படிதல் இதிலேயே அடங்கியிருக் கிறது. ஆகையால் மேலான சாங்கோபாங்கத்தை அடைய விரும்பு கிறவன் எவனும், தனக்கு எதிராய்த்தானே இடைவிடாமல் யுத்தஞ் செய்ய வேண்டும். அவனிடத்திலுள்ள துர்ப்பற்றுதல்கள் அவனுக்கு எவ்வளவுதான் சிறியவைகளாய்த் தோன்றினாலும், அவைகளை வே ரோடு பிடுங்க, அவன் தன் சத்துவமெல்லாம் கொண்டு பிரயாசைப் படவேண்டும். ஆனால் அகத்தியமாய், நீ உன்னிடத்திலுள்ள திறம், தைரியம், ஆவலெல்லாங்கொண்டு யுத்தத்திற்கு ஆயத்தமாகக் கடவாய். ஏனெனில், தளராத் திறத்துடன் யுத்தஞ் செய்பவன் மாத் திரமே முடி சூட்டப்படுவான்.

நம்மையே நாம் எதிர்த்து யுத்தஞ் செய்யும் போது, நாமே தோல்வியடைய வேண்டுமானாலும், அந்த யுத்தத்தில் ஜெயமடைவ தே சர்வேசுரனுக்குப் பிரியமானது ; நமக்கும் மெய்யான பெருமை வருவிக்கத்தக்கது. ஏனென்றால் தன் துர்க்குணங்களை அடக்கி, தன் ஆசாபாசங்களைக் கண்டித்து, தன் மனதின் அற்பச் சொற்பப் பற் றுதல்களை முதலாய் புறக்கணிக்கிறவனே, சர்வேசுரனுக்குப் பிரிய மான முறையில் நடக்கிறான். இன்னுஞ் சொல்லவேண்டுமானால், தன் ஆசாபாசங்களில் ஒன்றுக்கு அடிமைப்பட்டு, இரத்தம் ஓடத் தன்னை அடித்துக்கொண்டு, பூர்வ வனவாசிகள் பிடித்த ஒரு சந்தி உபவாசத்தைப் பார்க்கிலும் கடின ஒருசந்தி உபவாசம் பிடிக்கிற வனையும், அநேகாயிரம் பாவிகளைத் திருப்புகிறவனையும் பார்க்க, இந்த அந்தரங்க யுத்தஞ் செய்கிறவனே சர்வேசுனுக்குப் பிரியமான வன்.

ஒரு துர் நாட்டத்தைப் புறக்கணித்து அடக்குவதைவிட, ஓர் ஆத்துமத்தை இரட்சிப்பது சர்வேசுரனுக்கு அதிகப் பிரியமானதென்பதில் சந்தேகமில்லையென்றாலும், நம்மில் ஒவ்வொருவனுங் கவலைப்பட்டுச் செய்யவேண்டியதேதென்றால்: சர்வேசுரன் நம்மிடத்தில் கேட்பதென்னவென்று அறிந்து அதின்படி நடப்பதேயன்றி வேறல்ல. சர்வேசுரன் உன்னிடத்தில் கேட்பதென்ன? உன் துர் நாட்டங்களை எதிர்த்து யுத்தஞ் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார். ஆகையால் நீ, ஒறுத்தலற்ற இருதயத்துடன் புண்ணிய வேஷந்தரித் திருப்பதைக் காட்டிலும், இந்த அந்தரங்க யுத்தஞ் செய்வதே சர்வேசுரனுக்குப் பிரியமானது.

கிறீஸ்துவ ஆத்துமமே! சாங்கோபாங்கம் ஏதென்றும், அதை அடைவதற்கு இடைவிடாமல் உனக்கு விரோதமாய் நீயே யுத்தஞ் செய்ய வேண்டுமென்றுஞ் சொல்லிக் காட்டினேன். ஆகையால், அந்த யுத்தத்திற்கு ஆயத்தமாகக்கடவாய். அந்த யுத்தத்தில் வெற்றி அடைய வேண்டுமானால் நாலு ஆயுதங்களை அகத்தியமாய் அணிந்து கொள்ள வேண்டும்.
அவையாவன:

1- வது. தன்னை நம்பாமை;
2வது. சர்வேசுரன் மட்டில் முழு நம்பிக்கை;
3-வது . தன் ஆத்தும சரீர தத்துவங்களின் நற்பிரயோகம்;
4-வது . ஜெபமாம்.

பின்வரும் அதிகாரங்களில் தேவ உதவியைக் கொண்டு, தெளிவாயுஞ் சுருக்கமாயும் அவைகளை விவரித்துக் காட்டுவேன்.