வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் திருத்தலப் பேராலய வரலாறு - மரபு உரை

இந்நூலில் கூறப்படும் இயற்கைக்கு மேலான நிகழ்ச்சிகள் திருச்சபையால் ஆராயப்படாதவை. எனினும், அவை பாரம்பரியத்தையும், வாய்மொழி வரலாற்றுச் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டவை. ஆதலின் அருட்கொடைகள், புதுமைகள், சலுகைகள் என்பவற்றைக் கிறிஸ்தவ மக்கள் பொதுவாக எப்பொருளில் பேசுகின்றனரோ, அப்பொருளிலேயே எழுதுகின்றோம், வரையறுத்துக் கூறுவதற்குத் தனி உரிமை கொண்ட திருச்சபையின் முடிவை இதனால் நாங்கள் எவ்வகையிலும் பாதிக்கத் துணியவில்லை என்று 8-ஆம் உர்பன் பாப்பரசர் தந்துள்ள விதிகளுக்கொப்ப உறுதி கூறுகிறோம்.

வெளியிடலாம் :

இரா. ஆரோக்கியசாமி சுந்தரம்,
தஞ்சை ஆயர்.