ஒரு மனிதனிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டிய கடமையைக் கடவுள் நமக்கு ஏன் தருகிறார்?

சர்வேசுரனுடைய திருச்சுதன் நம்மைப் போலாகும் படியாகவும், அதன் மூலம் அதிக இயல்பான முறையில் நம் அன்பையெல்லாம் வெற்றி கொண்டு, நம் இரக்கத்தை சம்பாதித்து, தம்மை நேசிக்கும்படி நம்மை வற்புறுத்தும்படி யாகவும் மனிதனாக அவதரித்தார்.

நமது ஆண்டவரும், எஜமானருமாக, தமக்கு ஊழியம் செய்யும்படியாகவும், தமக்குக் கீழ்ப்படியும்படியாகவும் அவர் நமக்குக் கட்டளையிட்டிருக்க முடியும். ஆனால் அதை விட, தமது வாக்குக்கெட்டாத நன்மைத்தனத்தோடு, தமது நேசத்தின் இனிய ஈர்ப்புகளைக் கொண்டு நம் இருதயங்களின் மீது வெற்றி கொள்வதையே அவர் தேர்ந்து கொண்டார்.

அவருடைய நன்மைத்தனமும், இனிமையும், கருணையுள்ள பற்றுதலும், இரக்கமும், அயராத பொறுமை யும், இவையெல்லாம் ஓர் அற்புதமான முறையில் அவருடைய அளவற்ற நேசத்தை நமக்கு வெளிப்படுத்து கின்றன. அவருடைய பரிசுத்த வேதம் பரலோகத்தின் ஒரு முன்சுவையாக இருக்கிறது. அவரை நம் முழு இருதயத்தோடு நேசிப்பதும், நம்மை நாம் நேசிப்பது போல, நம் அயலானை நேசிப்பதும் அவருடைய இரண்டு மாபெரும் கட்டளை களாக இருக்கின்றன. 

ஆகவே, நம் பிரியமுள்ள ஆண்டவர் இப்படிப்பட்ட இனிமையும், அன்பும் நிறைந்த ஒரு பரிசுத்த வேதத்தை நமக்குத் தந்தார் என்றால், நம்மைப் போலவே பலவீனர்களும், பாவிகளுமாகிய மனிதர்களிடம் நம் பாவங்களை சங்கீர்த்தனம் செய்கிற இழிவுபடுத்துகிற, மிகக் கண்டிப்பான கடமையை அவர் ஏன் நம்மீது சுமத்துகிறார்? மரிய மதலே னம்மாளிடம்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டன. சமாதானமாய்ப் போ'' (லூக்.7:48,50) என்று அவர் கூறவில்லையா ? விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணிடம் “நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை. போ, இனி பாவம் செய்யாதே'' (அரு.8:11) என்று அவர் சொல்லவில்லையா ?

பாவசங்கீர்த்தனம் ஒரு கண்டிப்பான, நம்மை அவமானப்படுத்துகிற கடமை என்று ஒருவன் கூறுவான் என்றால், அதைப் பற்றி தான் எவ்வளவு குறைவாக அறிந் திருக்கிறான் என்பதையே அவன் காட்டுகிறான். உண்மை என்னவென்றால், நமது தெய்வீக எஜமானராகிய சேசுநாதர் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஸ்தாபித்தபோது, நம்மைத் தாழ்த்தி அவமானப்படுத்தும் விருப்பத்தையல்ல, மாறாக, ஓர் ஆழ்ந்த, நீடித்த ஆறுதலை நமக்குத் தர வேண்டும் என்ற எண்ணத்தையே தம் மனதில் கொண்டிருந்தார். அவர் தம்மையே நமக்குத் தருகிற நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்விய நற்கருணைக்குப் பிறகு, அனுமான பாவசங்கீர்த்தனத்திற்கு மேலான எந்த நன்மை யையும், அதை விட பரிசுத்தமான எந்தக் கொடையையும், அதை விட மேலான எந்த ஒரு மகிழ்ச்சியையும் அவர் நமக்குத் தரவில்லை.

பாவசங்கீர்த்தனத்தைப் பற்றிய நமதாண்டவரின் எண்ணத்தை அதன் முழு உண்மையோடும், தெளிவோடும் நாம் இங்கு விளக்குவோம்: