அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள் - அவர்களுடைய மேற்போர்வையின் கீழ்

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போது (நான் நீரருந்தும் ஊற்றின் அருகிலிருந்த முகப்பு மண்டபத்தின் இரண்டாவது வளைவின் அருகில் நின்று கொண்டிருந்தேன்.), 

நீங்கள் அங்கே காண்கிற சிறிய சுரூபம் (பரிசுத்த கன்னிகையின் சுரூபம்) உயிர்பெற்று, நிஜ ஆளுயரத்திற்கு வளர்ந்தது. அதன்பின் நம் இராக்கினி தன் கரங்களை விரித்தார்கள். 

அவர்களுடைய மேற்போர்வை, அதில் அற்புதமான நூற்பின்னல் வேலையாகச் செய்யப்பட்டிருந்த எழுத்துக்களைக் காட்டியபடி பரந்து விரிந்தது. நம்ப முடியாத விதமாக, தனக்குக் கீழ் ஒன்றுகூடிய அனைவருக்கும் புகலிடம் தரும்படியாக, அது பெரும் நீள, அகலத்திற்குப் பரந்து விரிந்தது. 

மிகச் சிறந்த சிறுவர்கள்தான் அதனுள் பாதுகாப்புக்காக முதலில் ஓடி நுழைந்து கொண்டார்கள். பல சிறுவர்கள் தன்னிடம் ஓடி வர அவசரப்படவில்லை என்பதை நம் திவ்விய மாதா கண்டு, உரத்த குரலில், “வெனித்தே அத் மே ஓம்னெஸ் - எல்லோரும் என்னிடம் வாருங்கள்!” என்றார்கள். அவர்களுடைய அழைப்பு செவிசாய்க்கப்பட்டது. 

மேற்போர்வையின் கீழ் ஒன்றாகக் கூடிய சிறுவர்களின் கூட்டம் பெருகியதால், அந்தப் பரிசுத்த மேற்போர்வையும் இன்னும் அதிகமாகப் பரந்து விரிந்தது! ஆனாலும் ஒரு சில சிறுவர்கள் தொடர்ந்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதுகாப்பான இடத்தை வந்து அடைவதற்கு முன் காயப்படுத்தப்பட்டார்கள். முகம் சிவந்தும், தவிப்போடும் மகா பரிசுத்த கன்னிகை தொடர்ந்து மன்றாடிக் கொண்டே இருந்தார்கள், 

ஆனால் அவர்களிடம் ஓடி வந்த சிறுவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து கொண்டே வந்தது. அந்த யானை இதனிடையே தன் படுகொலையைத் தொடர்ந்தது. பல சிறுவர்கள் அங்குமிங்கும் ஓடி, ஒன்று அல்லது இரண்டு வாள்களைப் பயன்படுத்தி, தங்கள் தோழர்கள் மாமரியிடம் ஓடி வராதபடி தடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த உதவியாளர்களை அந்த யானை தொடவேயில்லை.

இதனிடையே, திவ்விய கன்னிகையால் தூண்டப்பட்டு, சில சிறுவர்கள் காயப்பட்ட சிலரைக் காப்பாற்றும்படி சிறு விரைவான போர்க் குழுக்களாக மாமரியின் மேற்போர்வையின் பாதுகாவலை விட்டு வெளியே சென்றார்கள். காயப்பட்டவர்கள் நம் அன்னையின் மேற்போர்வைக்குள் கொண்டு வரப்பட்ட கணமே அவர்கள் குணப்படுத்தப்பட்டார்கள். 

மீண்டும் மீண்டும் அந்த வீரமிக்க சிறுவர்களில் பலர், சிறு பிரம்புகளை ஆயுதமாக வைத்துக் கொண்டு, வெளியே சென்று, தங்கள் உயிரைப் பணயம் வைத்து, யானையிட மிருந்து தங்கள் கூட்டாளிகளைக் காப்பாற்றினார்கள். இறுதியாக கிட்டத்தட்ட எல்லோருமே காப்பாற்றப்பட்டு விட்டார்கள்.

மைதானம் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது. ஒரு சில சிறுவர்கள் மட்டும் கிட்டத்தட்ட இறந்து போனவர்களாக கீழே கிடந்தார்கள். முகப்பு மண்டபத்தின் ஒரு மூலையில் ஒரு சிறுவர் கூட்டம் திவ்விய கன்னிகையின் மேற்போர்வையின் கீழ் பாதுகாப்பாக நின்றது. மறு மூலையில் அந்த யானை, இப்படிப் பட்ட பேரழிவை நிகழ்த்த தனக்கு உதவிய பத்துப் பன்னிரண்டு சிறுவர்களோடு நின்றது. அவர்கள் இன்னும் ஆணவத்தோடு தங்கள் வாட்களைச் சுழற்றிக் காட்டிக் கொண்டு நின்றனர்.

திடீரென அந்த யானை தன் பின்னங்கால்களில் எழுந்து நின்று, ஒரு பயங்கரத்துக்குரிய நீண்ட கொம்புள்ள பசாசாக மாறியது. அது ஒரு கறுப்பு நிறமான வலையைத் தனக்கு உடந்தையாயிருந்த அந்தப் பரிதாபத்திற்குரிய சிறுவர்களின்மீது வீசியது. அதன்பின், அந்த மிருகம் கடுமையாகப் பிளிற, ஓர் அடர்த்தியான புகை மேகம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. அவர்களுக்கு அடியில் நிலம் திடீரெனப் பிளந்து, அவர்கள் எல்லோரையும் விழுங்கியது.

வாக்குறுதிகளும், பொன்மொழிகளும்

நான் என் தாயிடமும், பேராசிரியர் வல்லோரியிடமும் பேசுவதற்காக அவர்களைத் தேடினேன். ஆனால் அவர்களை எங்கேயும் என்னால் காண முடியவில்லை. அதன்பின் நான் மாமரியின் மேற்போர்வையில் பொறிக்கப்பட்டிருந்த வாசகங் களைப் பார்ப்பதற்காகத் திரும்பினேன். அதில் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள வேதவாக்கியங்களையும், சற்றே திருத்தப் பட்ட வாக்கியங்களையும் நான் கண்டேன். அவற்றில் ஒரு சில வாசகங்களை நான் வாசித்தேன்:

குயி எலூச்சிதாந்த் மே வீத்தாம் ஏத்தெர்னாம் ஆபேபுந்த் - “என்னை மற்றவர்களுக்குப் போதிக்கிறவர்கள் நித்திய ஜீவியத்தை அடைவார்கள்” (சர்வப் (சீராக்).24:31).

குயி மே இன்வெனேரித் வீத்தாம் - “என்னைத் தேடுகிறவன் வாழ்வைக் கண்டடைவான்” (பழ. 8:35).

ஸி குயிஸ் எஸ்த் ப்ராவுலுஸ், வேனியாத் அத் மே - “சிறியவனாயிருப்பவன் எவனும் என்னிடம் வருவானாக” (பழ.9:4).

ரெஃபூஜியும் பெக்காத்தோரும் - “பாவிகளின் அடைக்கலம்.”

ஸாலுஸ் க்ரெதெந்த்ஸியும் - “தேவ நம்பிக்கையுள்ளவர்களின் இரட்சணியம்.”

ப்ளேனா ஓம்னிஸ பியெத்தாத்திஸ், மான்சுவே தூதினிஸ் எத் மிசெரிக்கோர்தியே - “தேவபக்தியும், சாந்தமும், இரக்கமும் பூரணமாக நிறைந்தவர்கள்.”

பெயாத்தி குயி குஸ்தோதியுந்த் வியாஸ் மேயாஸ் - “என் வழிகளைக் காப்பவர்கள் பேறுபெற்றவர்கள்” (பழ.8:32). 

அசுத்த பேச்சை விலக்குங்கள்

இப்போது எல்லாம் அமைதியாயிருந்தது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, இவ்வளவு அதிகமாகக் கெஞ்சி மன்றாடிய தால் களைப்புற்றதாகத் தோன்றிய திவ்விய கன்னிகை, சிறுவர்களை ஆறுதல்படுத்தி அவர்களைத் தேற்றி, தைரியம் தந்தார்கள்.

அவர்களுடைய திருச்சுரூபத்தின் அடிப்பீடத்தில் நான் பொறித்து வைத்திருந்த “குயி எலூச்சிதாந்த் மே, வீத்தாம் ஏத்தெர்னாம் ஆபேபுந்த்” என்ற வாசகத்தை மேற்கோள் காட்டி, அவர்கள் தொர்ந்து இப்படிப் பேசினார்கள்.

“நீங்கள் என் அழைத்தலுக்கு செவிசாய்த்து, உங்கள் தோழர் களின் மீது பசாசால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலையில் இருந்து பாதுகாக்கப்பட்டீர்கள். அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயிருந்தது எது என்று அறிய நீங்கள் விரும்புகிறீர்களா? சுந்த் கொல்லோக்குய்யா ப்ராவா: அசுத்தப் பேச்சும், அசுத்த செயல் களும்.' உங்கள் தோழர்கள் வாள்களைப் பயன்படுத்திக் கொண் டிருந்ததையும் நீங்கள் கண்டீர்கள். உங்கள் பள்ளி நண்பர்களில் சிலரைத் தாங்கள் என்னிடமிருந்து கவர்ந்து கொண்டது போலவே உங்களுக்கும் செய்வதன் மூலம் உங்கள் நித்திய அழிவைத் தேடுபவர்கள் அவர்கள்.

ஆனால் குவோஸ் தேயுஸ் தீத்ஸியுஸ் எக்ஸ்பேச்சியாத் தூரியுஸ் தாம்னாத் - “கடவுள் யாருக்காக அதிகம் காத்திருக் கிறாரோ, அவர்களை அதிகக் கடுமையாகத் தண்டிக்கிறார்.” நரகப் பசாசு அவர்களைத் தன் வலையில் சிக்க வைத்து, நித்திய அழிவிற்குள் அவர்களை இழுத்துச் சென்றது. இப்போது, சமாதானமாய்ப் போங்கள், ஆயினும் என் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்: சாத்தானோடு நட்புக்கொள்ளும் உங்கள் தோழர்களிடமிருந்து விலகியோடுங்கள், கெட்ட பேச்சைத் தவிருங்கள், என்மீது அளவற்ற நம்பிக்கை கொண்டிருங்கள். என் மேற்போர்வை எப்போதும் உங்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கும்.”

இப்படிச் சொன்னபின் நம் அன்னை மறைந்து விட்டார்கள். அவர்களுடைய அன்பிற்குரிய திருச்சுரூபம் மட்டுமே அங்கிருந்தது. என் இறந்து விட்ட தாய் மீண்டும் தோன்றினார்கள். “ஸாங்க்தா மரியா, சுக்குர்ரே மிஸேரிஸ்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த விருதுக்கொடி மீண்டும் விரிக்கப்பட்டது.

அதன் பின்னால் சிறுவர்கள் “லவ்தாத்தே மரியா, ஓ லிங்குவே ஃபிதேலி - விசுவாசமுள்ள நாவுகளே, நீங்கள் மரியாயைப் புகழுங்கள்” என்று பாடியபடி பவனியாகச் சென்றார்கள். சற்று நேரத்திற்குப் பிறகு, அந்தப் பாடல் ஒலி தேய்ந்து மறைந்தது. அந்த முழுக் காட்சியும் மங்கி மறைந்தது. நான் வியர்வையில் குளித்தவ னாகக் கண்விழித்தேன். என் கனவு இப்படித்தான் இருந்தது.

என் மகன்களே, இப்போது உங்கள் சொந்த ஸ்ட்ரென்னாவை இந்தக் கனவிலிருந்து பெற்றுக்கொள்வது உங்கள் பொறுப்பு. உங்கள் மனச்சான்றுகளைப் பரிசோதியுங்கள். அப்போது நீங்கள் மரியாயின் மேற்போர்வையின்கீழ் பாதுகாப்பாக இருந்தீர்களா. அல்லது அந்த யானை உங்களை ஆகாயத்தில் வீசியெறிந்ததா, அல்லது நீங்கள் ஒரு வாளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தீர்களா என்பதை அறிந்து கொள்வீர்கள். 

திவ்விய கன்னிகை சொன்ன வார்த்தைகளைத் திரும்பவும் சொல்லத்தான் என்னால் முடியும்: “வெனித்தே அத் மே ஓம்னெஸ் - எல்லோரும் என்னிடம் வாருங்கள்.” அவர்களிடம் திரும்புங்கள்: எந்த ஆபத்திலும் அவர்களை அழையுங்கள். உங்கள் ஜெபங்கள் கேட்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். யானையால் மிக மோசமாகத் தாக்கப்பட்டவர்கள் கெட்ட பேச்சையும், தீய தோழர்களையும் தவிர்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாமரியிடமிருந்து தங்கள் தோழர்களைக் கவர்ந்து விட முயல்பவர்கள் ஒன்றில் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது இல்லத்தை விட்டு உடனே போய்விட வேண்டும். யாராவது இந்தக் கனவில் தன்னுடைய பங்கு என்ன என்பதை அறிய விரும்பினால், அவன் என் அறைக்கு வரட்டும், நான் அவனுக்குக் கூறுவேன். ஆனால் நான் திரும்பவும் சொல்கிறேன்: சாத்தானின் கூட்டாளிகள் ஒன்றில் தங்கள் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்ள வேண்டும், அல்லது போய்விட வேண்டும்! நல்லிரவு வாழ்த்துக்கள்!

டொன் போஸ்கோ எத்தகைய ஆர்வத்தோடும், உணர்ச்சி யோடும் பேசினார் என்றால், அடுத்து வந்த ஒரு முழு வாரத்திற்கு சிறுவர்கள் அந்தக் கனவைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருந் தார்கள். அவர் சற்று நேரம் ஓய்ந்திருக்கவும் அவர்கள் விடவில்லை . ஒவ்வொரு நாள் காலையிலும் அவருடைய பாவசங்கீர்த்தனத் தொட்டியைச் சுற்றி அவர்கள் ஒன்றுகூடினார்கள். ஒவ்வொரு பிற்பகலிலும் இந்த மர்மமான கனவில் தங்கள் பங்கு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள்.

“ஏதாவது ஒரு ஸ்ட்ரென்னாவை எனக்குத் தரும்படி நான் தொடர்ந்து கடவுளை இரந்து மன்றாடுகிறேன் . . . ஒரு மிக மோசமான இரவு வழக்கமாக, கடவுள் எனக்கு எதையோ வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதன் முன்னெச்சரிக்கையாக இருக்கிறது” என்ற வார்த்தைகளைக் கூறியதன் மூலம், இது கனவல்ல, மாறாக இது ஒரு காட்சிதான் என்பதை டொன் போஸ்கோ மறைமுகமாக ஒத்துக்கொண்டார். மேலும், தாம் விவரித்த எதையும் யாரும் இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

ஆனால் இதில் இன்னும் அதிகம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவர் காயம்பட்ட அல்லது ஒரு அல்லது இரண்டு வாள்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த சிறுவர்களின் பட்டியல் ஒன்றை அவர் தயாரித்தார். அவர் அதை செலஸ்டின் ட்யூராந்தோ விடம் கொடுத்து, அவர்களைக் கண்காணிக்கும்படி உத்தரவிட்டார். இந்தத் துறவி இந்தப் பட்டியலை எங்களிடம் தந்தார். அது இன்னும் எங்களிடம் இருக்கிறது. 

காயம்பட்டவர்கள் பதின்மூன்று பேர் - அநேகமாக, இவர்கள் காப்பாற்றப்படாதவர்கள், மாமரியின் மேற்போர்வையின் கீழ் தஞ்சமடையாதவர்கள். ஒரு வாளைப் பயன் படுத்தியவர்கள் பதினேழு பேர்; மூவர் மட்டும் இரண்டு வாள்களை வைத்திருந்தார்கள். ஒரு சிறுவனின் பெயருக்குப் பக்கத்தில் அங்குமிங்கும் சிதறலாகக் காணப்படும் ஓரக் குறிப்புகள், அவன் வாழ்வைத் திருத்திக் கொண்டதைக் குறித்துக் காட்டுகின்றன. மேலும், இந்தக் கனவு, நாம் காண இருப்பது போல, எதிர்காலத்தைக் குறிப்பதாக இருந்தது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சிறுவர் விடுதியிலிருந்த உண்மையான நிலையையே இந்தக் கனவு பிரதிபலித்தது என்று சிறுவர்களே ஒத்துக்கொண்டார்கள்.

“டொன் போஸ்கோ என்னை இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார் என்று நான் நினைக்கவேயில்லை” என்று அவர்களில் ஒருவன் குறிப்பிட்டான். “அவர் என் ஆன்ம நிலையையும், எனக்கு வரும் சோதனைகளையும் எவ்வளவு துல்லியமாக வெளிப்படுத் தினார் என்றால், மேற்கொண்டு எதையும் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை .”

வேறு இரண்டு சிறுவர்களிடம், அவர்கள் வாள்களைச் சுழற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. “இது முழுவதும் உண்மைதான். நான் இதை நீண்ட காலமாகவே அறிந்திருந்தேன்” என்று அவர்கள் இருவருமே ஒப்புக்கொண்டனர். தங்கள் வழிகளையும் அவர்கள் திருத்திக் கொண்டார்கள்.

ஒரு நாள் பிற்பகலில், இந்தக் கனவைப் பற்றிப் பேசிக் கொண்டும், சில சிறுவர்கள் ஏற்கெனவே ஆரட்டரியை விட்டுப் போய்விட்டார்கள் என்றும், மற்றவர்கள் தங்கள் தோழர்களுக்குத் தீங்கு செய்யாதபடி விரைவில் போய்விடுவார்கள் என்றும் சொல்லிக் கொண்டும் இருந்த போது, டொன்போஸ்கோ, தம்முடைய சொந்த “மந்திரவாதத்தைப்” (அவர் இப்படித்தான் அதை அழைத்தார்.) பற்றி அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக, அவர் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறினார்.

சிறிது காலத்திற்கு முன், ஒரு சிறுவன் தன் வீட்டிற்குக் கடித்தம் எழுதினான். அதில் இல்லத்தைச் சேர்ந்த குருக்களும், இல்ல அதிபர்களும் தவறான செயல்களில் ஈடுபடுவதாக அவன் அவர்களைக் குற்றஞ்சாட்டியிருந்தான். டொன் போஸ்கோ இந்தக் கடிதத்தைப் பார்த்து விடக் கூடும் என்று அஞ்சிய அவன், அதை இரகசியமாகத் தபாலில் சேர்க்க தன்னால் முடியும் வரை, அதை மறைவாக வைத்திருந்தான். 

அதே நாளில், இரவுணவுக்குப் பின், நான் அவனை அழைத்து வர ஆளனுப்பினேன். என் அறையில் அவனுடைய தவறான செயலைப் பற்றி நான் அவனுக்கு எடுத்துக் கூறி, அவன் ஏன் இப்படிப்பட்ட பொய்களைச் சொன்னான் என்று நான் கேட்டேன். தன் செயலைப் பற்றிய வெட்கமின்றி, அவன் ஆணவத்தோடு எல்லாவற்றையும் மறுத்தான். நான் அவனைப் பேச விட்டேன். அதன்பின் அந்தக் கடிதத்தில் இருந்த வாசகங்களை ஒவ்வொரு வார்த்தையாக நான் அவனுக்குச் சொன்னேன்.

சங்கடமும், அச்சமும் அடைந்தவனாக அவன் என் பாதங்களின் அருகில் கண்ணீரோடு முழந்தாளிட்டான். “என் கடிதம் திறந்து வாசிக்கப்பட்டதா?” என்று அவன் கேட்டான்.

“இல்லை” என்று நான் பதிலளித்தேன். “உன் குடும்பத்திற்கு இப்போது அநேகமாக அந்தக் கடிதம் போய்ச் சேர்ந்திருக்கும். இப்போது உன் தவறால் விளைந்த தீமையைச் சரிசெய்வது உன் கடமை .”

அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவரிடம் இதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று கேட்டார்கள். அவர் சிரித்தபடி, “ஓ, இது என் மந்திர வித்தை ” என்று பதிலளித்தார். சிறுவர்களின் தற்போதைய ஆன்ம நிலையை மட்டுமின்றி, அவர்களுடைய எதிர் காலத்தையும் வெளிப்படுத்திய இந்த ‘மந்திரவாதமும்', அவருடைய கனவும் வெவ்வேறானவையல்ல, அவை ஒரே காரியம்தான்.