இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஆன்மாக்களின் அர்ச்சிப்பில் மரியாயைப் பயன்படுத்துவது கடவுளின் விருப்பம்

22. சேசு கிறீஸ்துவின் முதல் வருகை அவருடைய மனிதாவதாரமாகும். இதில் அர்ச். தமதிரித்துவ மூன்று ஆட்களும் என்ன திட்டத்தைக் கடைபிடித்தார்களோ அதே திட்டத்தை இப்பொழுதும் ஒவ்வொரு நாளும் பரிசுத்த திருச்சபையெங்கும் கண்காணா முறையில் கடைபிடித்து வருகிறார்கள். கிறிஸ்துவின் இறுதி வருகையில் காலம் முடியும் வரையிலும் அதையே கடைபிடித்தும் வருவார்கள்,

23. பிதாவாகிய சர்வேசுரன் பூமியின் எல்லா நீர்களையும் ஒன்றாய்ச் சேர்த்து அதைக் கடல் என அழைத்தார். அதே கடவுள் தமது வரப்பிரசாதங்கள் யாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து " மரியா'' என்று அழைத்தார். (அர்ச். அந்தோனினுஸ் - Summa p IV, Tit. 15 ch. IV.) இம்மாபெரும் இறைவனிடம் ஒரு திரவியசாலை உள்ளது. மிகப்பெரிய செல்வங்களைக் கொண்டது. அழகு வாய்ந்த அனைத்தையும், ஒளி வீசுவனவற்றையும், அரியனவற்றையும், விலை மதிப்புக்குரியனவற்றையும், ஏன் தம் சொந்தக் குமாரனையுமே இறைவன் அதனுள் வைத்துள்ளார்! இம்மாபெரும் திரவிய சாலை மாதாதான் கடவுளின் பொக்கிஷ சாலை என்று அர்ச்சிஷ்டவர்கள் மாதாவை அழைக்கிறார்கள். இதன் நிறைவிலிருந்தே எல்லா மானிடரும் செல்வந்தராக்கப்படுகிறார்கள்.

24. சுதனாகிய சர்வேசுரன் தமது வியக்கத்தக்க புண்ணியங்களையும் அளவற்ற பேறுபலன்களையும், தமது வாழ்வாலும் மரணத்தாலும் தாம் சம்பாதித்த யாவற் றையும் தமது அன்னையிடம் ஒப்படைத்துள்ளார். தம் பிதா தமக்கு வம்ச உரிமையாகக் கொடுத்த அத்தனைக்கும் அதிகாரியாக மாதாவை நியமித்துள்ளார். அத்தாயின் வழியாக அவர் தமது புண்ணியங்களை நமக்களிக்கிறார். வரப்பிரசாதங்களைப் பகிர்ந்து கொடுக்கிறார். மரியாயே அவருடைய ஞானத் திரு வாய்க்கால். இவ்வாய்க்கால் வழியாகவே அவர் தமது இரக்கத்தை அமைதியாக ஏராளமாய்ப் பாய விடுகிறார்.

25. பரிசுத்த ஆவியான சர்வேசுரன் தமது பிரமாணிக்கமுள்ள பத்தினியான மாமரிக்கு தமது சொல்லரிய வரங்களை அளித்திருக்கிறார். தம்மிடம் உள்ள யாவற் றையும் விநியோகிக்கும்படி கன்னிமரியாயைத் தெரிந்து கொண்டிருக்கிறார். அவருடைய எல்லா வரங்களையும் மாமரி தான் விரும்புகிறவர்களுக்குக் கொடுக்கலாம். விரும்பும்போது கொடுக்கலாம். இவ்வன்னையின் கன்னி மைக் கரங்கள் வழியாக அல்லாது எந்த ஒரு பரலோகக் கொடையையும் பரிசுத்த ஆவி மனிதருக்கு வழங்குவதில்லை. ஏனென்றால் நாம் எல்லாவற்றையும் மாதாவின் வழியாகவே அடைய வேண்டும் என்று ஆணை யிட்ட கடவுளின் சித்தம் அது. வாழ்நாள் முழுவதும் தன்னை ஏழையாக்கி, தாழ்வாக்கி, தனது ஆழ்ந்த தாழ்ச்சியால் தன்னை ஒன்றுமற்ற பாதாளத்துள் மறைத்துக் கொண்ட கன்னி மாமரி இவ்விதமாய் செல்வியாக்கப்பட்டு, உயர்த்தப்பட்டு, உந்தரால் அ. இராகம், மதிக்கப்பட வேண்டும் என்று கடவுள் அங்ஙனம் செய்தார். திருச்சபையினுடையவும் வேத பிதாக்களுடையவும் கருத்து இதுவே. (அர்ச். பெர்னார்ட், அர்ச். பெர்னார்டின் முதலியோர். இந்நூல் எண் : 141 & 142 காண்க.)

26. இக்காலத்திய கட்டுப்பாடற்ற சிந்தனைக்காரருக்கு இவற்றை நான் கூறுவதாயிருந்தால், இங்கு நிரூபணமின்றி சுருக்கமாகக் கூறும் உண்மைகளை, நிரூபணத்தோடு விரிவாய் வேதாகமத்திலிருந்தும், வேத பிதாக்களின் நூல்களிலிருந்தும் லத்தீன் மொழியிலே சான்றுகளுடன் கொடுத்திருப்பேன். மேலும் ''மாமரிக்கு மும்மகுடம்' என்ற சங். புவார் என்பவரின் நூலில் காணப்படும் திடமான காரணங்களையும் காட்டியிருப்பேன். ஆனால், பொதுவாக கற்றவர்களைவிட அதிக விசுவாசமுடைய நல் மனமுள்ள எளிய பாமர மக்களுக்கு நான் முக்கியமாக இதைக் கூறுகிறேன். அவர்கள் அதிக எளிதாகவும் அதிக பேறுபலனோடும் விசுவசிப் பார்கள் என்பதால் அவர்களுக்கு நிரூபணமோ லத்தீன் மொழியில் அவர்கள் கண்டுபிடிக்க முடியாத எடுத்துக் காட்டுகளோ தராமல் உண்மைகளை மட்டும் அப்படியே கூறுகிறேன். எனினும் ஒரு சில லத்தீன் வாக்கியங்களை நம் நோக்கத்திற்குப் புறம்பாகச் செல்லாத முறையில் கையாளுவேன்.

27. சுபாவத்தை வரப்பிரசாதம் பூரணப்படுத்துகிறது. வரப்பிரசாதத்தை மகிமை பூரணப்படுத்துகிறது. இதன்படி பார்த்தால் நமதாண்டவர் பூவுலகில் எந்த அளவிற்கு மரியாயின் குமாரனாக இருந்தாரோ அதே அளவிற்கு பரலோகத்திலும் மரியாயின் மைந்தனாகவே இருக்கிறார். அன்னையரில் சிறந்த அன்னைக்கு, குமாரர்களில் சிறந்த குமாரன் காட்டும் பணிவையும் கீழ்ப் படிதலையும் சேசு கொண்டிருக்கிறார். ஆனால் சேசுகிறீஸ்து தம் அன்னையை இங்ஙனம் சார்ந்திருக்கும் தன்மை இழிவானது அல்லது குறைபாடுள்ளது என்று நாம் எண்ணிவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். ஏனென்றால், சர்வேசுரனான தன் குமாரனுக்கு அளவற்ற முறையில் தாழ்ந்திருக்கும் மாமரி, பூவுலகில் தனக்குக் கீழ்ப்பட்டிருக்கும் தன் மகனுக்கு ஒரு தாய் கட்டளை யிடுவது போல் கட்டளையிடுவதில்லை. எல்லா அர்ச்சிஷ்டவர்களையும் சர்வேசுரனில் முழுமாற்றமடையச் செய்யும் வரப்பிரசாதத்தாலும், மகிமையாலும் மாதா முழுமையாக மாற்றம் எய்தியுள்ளார்கள். சர்வேசுரனுடைய நித்திய மாறுதலில்லா சித்தத்துக்கு மாறுபாடாக மாதா எதையும் கேட்பதில்லை, விரும்புவதில்லை, செய்வதுமில்லை. எனவே, அர்ச். பெர்னார்ட், அர்ச். பெர்னார்டின், அர்ச். பொன வெந்தூர் போன்றவர்களின் நூல்களில் பரலோ கத்திலும், எல்லா உலகங்களிலும் சர்வேசுரன் கூட மரி யாயிக்குக் கட்டுப்பட்டவராயிருக்கிறார் என்று நாம் காண்கிறோமே, அதன் பொருள் என்னவென்றால், கன்னித் தாய்க்கு எவ்வளவு பெரிய அதிகாரத்தை கடவுள் கொடுக்கத் திருவுளம் கொண்டாரெனில் சர்வேசுரனுக்குரிய அதிகாரத் தையே மாமரியும் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. மரியன்னையின் விண்ணப்பங்களும், மன்றாட்டுகளும் கடவு ளிடம் எவ்வளவு செல்வாக்குப் பெற்றுள்ளனவென்றால், மகத்துவமுள்ள சர்வேசுரனால் அவை கட்டளை போல் பாவிக்கப்படுகின்றன. தம் அருமைத் தாயின் விண்ணப் பத்தை கடவுள் ஒருபோதும் மறுப்பதில்லை. ஏனென்றால் அது எப்போதும் தாழ்ச்சியுடையதும் அவருடைய சித்தத்துக்கு பொருந்தியதுமாயிருக்கின்றது.

இஸ்ராயேலருக்கு எதிராக எழுந்த கடவுளின் கோபத்தை மோயீசன் தன் மனறாட்டால் எவ்வளவு நன்றாகத் தடுத்தாரெனில், மிகவும் உந்தரும் அளவற்ற இரக்கமுள்ளவருமான சர்வேசுரன் மோயீசனுக்கு மறுப் புக் கூற முடியாமல், அந்த எதிர்ப்பாளராகிய ஜனங் களின் மீது கோபங் கொண்டு தண்டிக்க தன்னை விட்டுவிடும்படியாக மோயீசனிடம் கேட்டாரே! இதுவே இப்படியென்றால், கடவுளின் உத் த ம அன்னையான தாழ்மையுள்ள கன்னிமரியாயின் மன்றாட்டைப் பற்றி நாம் என்ன நினைப்பது! இவ்வன்னையின் வேண்டுதல் மோயீசனின் மன்றாட்டைவிட அதிக வல்லமையுள்ள தென்று கூற வேண்டாமா? விண்ணிலும் மண்ணிலும் உள்ள எல்லா சம்மனசுக்கள் அர்ச்சிஷ்டவர்களுடைய மன் றாட்டுக்களை யெல்லாம் விட மரியாயின் செபங்கள் சர்வேசு ரனிடம் அதிக வல்லமை பெற்றுள்ளன அல்லவா? (அர்ச், அகுஸ்தீன் : (Semo 208 In Assumptione).

28. பரலோகத்தில் சம்மனசுக்கள் மீதும் அர்ச்சிஷ்டவர் கள் மீதும் மாமரி அதிகாரம் செலுத்துகின்றார்கள். அவர் களுடைய மகா ஆழ்ந்த தாழ்ச்சியினிமித்தம் ஆங்காரத்தால் வீழ்ந்து சர்வேசுரனை மறுத்த சம்மனசுக்களின் ஆசனங்களை நிரப்பும் அலுவலையும் அதற்குரிய வல்லமையையும் சர்வே சுரன் அவர்களுக்கு அளித்துள்ளார். பரலோகமும் பூலோக மும் நரகலோகமும், விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டா லும் சரி, இவ் எளிய மரியாயின் கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதே தாழ்ந்தவர்களை உயர்த்துகின்ற உந்ததரின் சித்தம். இம் மாமரி அன்னையை பரலோக இராக் கினியாகவும் பூலோக அரசியாகவும் இறைவனின் சேனை களின் தளபதியாகவும், அவரது திரவியங்களை வைத்துக் காப்பவராகவும், அவருடைய வரப்பிரசாதங்களை விநியோ கிப்பவராகவும், தேவனுடைய அற்புதங்களை இயற்றுகிற வராகவும், வீழ்ந்துவிட்ட மனுக்குலத்தை மீண்டும் எழுப்பு கிறவராகவும், மக்களின் மத்தியஸ்தியாகவும், கடவுளின் பகைவர்களை அழிப்பவராகவும், கடவுளின் பெருமைகளில் லும் வெற்றிகளிலும் உறுதுணைவியாகவும் அவர் ஏற்படுத்தி யருளினார்.

29. மாதா வழியாக கால முடிவு வரையிலும், பிதா தமக்கு மக்களை எழுப்ப விரும்புகிறார். யாக்கோபில் வாசஞ் செய்' (சர்வ. 24:13) என்று அவர் மரியாயிடம் கூறுகின்றார். அதாவது. உம் இல்லத்தையும் நீர் வசிக்குமிடத்தையும் என் மக்களிடத்தில் அமைத்துக் கொள்ளும் - அவர்கள் என்னால் முன் குறிக்கப்பட்டவர்கள். யாக்கோபினால் முன் அடையா ளமாய்க் காட்டப்பட்டவர்கள். ஏசாவினால் அடையாளம் காட்டப்பட்டு பசாசின் மக்களாயிருக்கும் சபிக்கப்பட்டவர் களிடத்தில் வேண்டாம் என்கிறார்.

30. இயற்கையான சரீரப் பிறப்புக்கு தந்தையும் தாயும் இருப்பது போலவே இயற்கைக்கு மேலான ஞானப் பிறப்புக்கு சர்வேசுரன் என்ற தந்தையும் மாதா என்னும் தாயும் இருக்கிறார்கள். முன் குறிப்பிட்டவர்களான கடவுளின் உண்மை மக்கள் யாவரும் கடவுளைத் தங்கள் தந்தையெனவும் மரியாயைத் தங்கள் தாயெனவும் கொண்டிருக்கிறார்கள். மரியாயைத் தன் தாயாகக் கொண்டிராதவன் கடவுளைத் தந்தையாகக் கொண்டிருப்பதில்லை. இதனால் தான் மாதா வைப் பகைக்கிற , இகழ்கிற , அல்லது அலட்சியம் செய்கிற தீர்ப்பிடப்பட்டவர்களான பதிதர் பிரிவினைக்காரர் போன்ற வர்கள், கடவுளைத் தங்கள் தந்தையாகக் கொண்டிருப்ப தில்லை. மரியாயை இவர்கள் தங்கள் தாயாகக் கொள்ளாத தினால் கடவுளைத் தந்தையெனக் கொண்டிருப்பதாகப் பெருமை பாராட்டிக்கொண்ட போதிலும் அப்படி இல்லை. ஒரு உண்மையான நல்ல பிள்ளை இயல்பாகவே தனக்கு உயிர் தந்த தன் தாயை நேசித்து மதிப்பது போல அவர் களும் மாமரியைத் தங்கள் தாயாகக் கொண்டிருந்தால் அவ்வன்னை மீது அன்பும் மதிப்பும் கொண்டிருப்பார்கள்.

பதிதத்தில் இருப்பவனையும் பதிதப் போதனையுடையவ னையும் தீர்ப்பிடப்பட்ட ஒருவனையும், முன் குறிக்கப்பட்ட ஒரு ஆன்மாவிலிருந்து தப்பாமல் திட்டமாய் நாம் பிரித்தறி யக் கூடிய அடையாளம் என்னவென்றால் பதிதத்தில் இருப் பவனும் தீர்ப்பிடப்பட்டவனும் தேவ அன்னைக்கு அலட்சி மும் அவமதிப்பும் தான் காட்டுவார்கள். வெளிப்படை யாகவும் மறைவிலும், சொல்லாலும் நடத்தையாலும் சில சமயம் பெரிய காரணங்களைக் காட்டியும் அத்தாய்க்கு அன் பும் வணக்கமும் குறையும்படி முயற்சிப்பார்கள். அந்தோ! இவர்கள் ஏசாக்களாக இருப்பதால் இவர்களிடம் குடி கொள்ளும்படி பிதாவாகிய சர்வேசுரன் மரியாயிடம் கூறுவதில்லை .