இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் தேவ அன்னையின் சலுகைகளை இப் பக்தி முயற்சி நமக்கு அடைந்து கொடுக்கிறது.

(1) தன் அன்பின் அடிமைக்கு மாதா தன்னைக் கொடுத்து விடுகிறார்கள்.

144. மிகவும் புனித கன்னிமாதா சாந்த முள்ள அன்னை ; இரக்கத்தின் தாய்; அன்பிலும் தாராளத் திலும் அவர்களை யாரும் மிஞ்ச விடாதவர்கள், ஒரு ஆன்மா தன்னை முழுவதும் அர்ப்பணித்து, அவர்களை அலங்கரிப்பதற்கென தன்னிடம் அருமையாக இருந்த வற்றையெல்லாம் துறந்துவிடக் காணும்போது, இத் தாய் எல்லாவற்றையும் இவ்வாறு தனக்களித்து விட்ட அவ் ஆன்மாவுக்கு தன்னை முழுதும் ஒரு உந்நத முறை யில் தந்துவிடுகிறார்கள். அவ் ஆன்மாவை தன் வரப் பிரசாதப் பெருங்கடல் வெள்ளத்துள் மூழ்கும்படி செய்கிறார்கள். தன் பேறுபலன்களால் அந்த ஆன் மாவை அலங்கரிக்கிறார்கள். தன் வல்லமையால் அதைத் தூக்கி நிறுத்துகிறார்கள். தன் ஒளியால் அதனை ஒளிர் - விக்கிறார்கள். தன்னுடைய அன்பால் அவ்வான்மா எரியும்படி செய்கிறார்கள். தன்னுடைய புண்ணியங் களை அதற்குக் கொடுக்கிறார்கள். தன்னுடைய தாழ்ச்சி, விசுவாசம், தன்னுடைய தூய்மை எல்லாவற்றையும் அந்த ஆன்மாவிற்குத் தருகிறார்கள். தானே அவ்வான் மாவின் பணயமாக நிற்கிறார்கள். அதனிடம் குறை யாக உள்ளவற்றையெல்லாம் நிரப்புகிறார்கள். சேசு விடம் அவ்வான்மாவின் சகலமுமாக ஆகிறார்கள். சுருக்கத்தில், மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒருவன் அவர்களுடையவன் ஆவது போல் மாதாவும் அவனு டையவர்களாகிறார்கள். எந்த அளவிற்கென்றால், மரி யாயின் உத்தம ஊழியனும் பிள்ளையுமாக ஆன இவனைப் பற்றி, சுவிசேஷகரான அர்ச். அருளப்பர் தன்னைப் பற்றிக் கூறியதைப் பொருத்தமாகச் சொல்லலாம். அந்தச் சீடன் அவளைச் சொந்தமாக ஏற்றுக் கொண் டார். (அரு. 19, 27) மாதாவை அவன் தன் சொந் தமாக ஏற்றுக்கொண்டான் என்று!

145. இவன் பிரமாணிக்கமுள்ளவனாக இருந்தால் இவன் ஆன்மாவிலே தற்பகையும் (தன் மீது), வெறுப்பும் நம்பிக்கை கொள்ளாமையும் ஏற்படுவதோடு அவனுடைய நல்ல தலைவியாக கன்னிமாதா மீது மிகுந்த நம்பிக்கை யும் அவர்களிடம் சரணடையும் தன்மையும் உண்டா கும். முன்போல அவன் தன் சொந்த மன நிலைகளிலும், கருத்து பேறுபலன், புண்ணியம், நற்செயல்களிலும் ஊன்றமாட்டான் - ஏனென்றால் இவற்றையெல்லாம் அவன் மரியாயின் வழியாக சேசுவுக்கு முற்றும் காணிக் கையாகக் கொடுத்து விட்டான். இப்பொழுது அவ னுக்கு ஒரே ஒரு திரவியசாலை மட்டுமே உள்ளது. அங்கேதான் அவனுடைய திரவியங்கள் யாவும் சேகரிக் கப்பட்டுள்ளன. அது இப்போது அவனிடத்தில் இல்லை. ஏனென்றால் மாதாவே அவனுடைய திரவியசாலையாக இருக்கிறார்கள்.

இதனால் - அவன் அடிமைக்குரிய பயமின்றி, ஐயம் கலந்த அச்சமின்றி ஆண்டவரை அணுக முடிகிறது. மிகுந்த நம்பிக்கையுடன் அவரிடம் மன்றாடவும் அவ னால் கூடுமாகின்றது. பக்தியும் கல்வியும் நிறைந்த ரூபர்ட் என்னும் துறவியர் தலைவர், பிதாப்பிதாவான யாக்கோபு சம்மனசானவர் மீது கொண்ட வெற்றியைப் பற்றிப் (ஆதி. 32, 24) பேசுகையில், பின்வரும் அழ கிய உரையை , மரியாயை நோக்கிக் கூறியுள்ளார்: ஓ மரியாயே! என் ஆண்டவளே!. மனிதாவதாரமான சேசு கிறீஸ்துவின் அமலோற்பவ அன்னையே! கடவுளின் வார்த்தையான இம்மனிதனுடன் போரிட நான் விரும்புகிறேன். என்னுடைய பேறுபலன்கள் என்னும். ஆயு தம் தாங்கி அல்ல,. உங்களுடைய பேறுபலன்களைக் கொண்டுதான்' (Rup Prolog. in Cantio) - இந்த விதமான உணர்வை ரூபர்ட் என்பவருடன் சேர்ந்து அவனால் கொள்ள முடிகிறது. ஓ! கடவுளின் தகுதி வாய்ந்த தாயினுடைய பேறுபலன்கள், மன்றாட்டுக்கள் என்னும் ஆயுதங்களை நாம் ஏந்தி நிற்போமானால், சேசு கிறீஸ்துவிடம் எவ்வளவு பலமும் வலிமையுள்ள வர்களாக நாம் ஆகின்றோம்! அர்ச். அகுஸ்தீன் உரைப் பது போல் இவ்வன்புத்தாய் எல்லாம் வல்லவரை அன்பினால் வெற்றி கொண்டு விட்டார்களே!