இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

யாக்கோபு முன் குறிக்கப்பட்டவர்களின் அடையாளம்

191. (1) இளைய மகனான யாக்கோபு பலம் குறைந்த உடலும் சாந்தகுணமும் அமைதியும் உடையவன். தான் மிகவும் நேசித்த தன் தாய் ரபேக்காளின் அன்பை அடையும் பொருட்டு பொதுவாக வீட்டிலேயே தங்கியிருப்பான். அவன் வீட்டைவிட்டு வெளியே செல்வதாயிருந்தால் அது தன் சொந்த விருப்பத்திற்காக அல்ல, தன் திறமையில் கொண்ட நம்பிக்கையாலுமல்ல. ஆனால் தன் தாய்க்குக் கீழ்ப்படிவதற்கென்றே அவ்வாறு செல்வான்.

192. (2) அவன் தன் தாயை நேசித்து மதித்து வந்தான். இதனாலேயே அவன் வீட்டில் தங்கி அவளரு கில் இருப்பான். தன் தாயைப் பார்க்கும் போது மற்ற நேரங்களை விட அதிக மன திருப்தியுடன் இருப்பான். அவளுக்கு விருப்பமற்ற எதையும் கவனமாக விலக்கி விடுவான். அவளுக்கு விருப்பமென தான் கருதியவற்றை யெல்லாம் செய்வான். இதெல்லாம் ரபேக்கா அவன் மீது கொண்டிருந்த அன்பை அதிகரித்தது.

193. (3) எல்லாவற்றிலும் அவன் தன் அன்புக்குரிய தாய்க்குப் பணிந்திருந்தான். எல்லாவற்றிலும் அவன் அவளுக்கு முழுவதும் கீழ்ப்படிந்தான். உடனடியாக, யாதொரு தாமதமுமில்லாமல், அன்புடன், எந்த ஒரு ஆவலாதி கூறாமல் கீழ்ப்படிந்தான். தாயின் விருப்பம் லேசாகப் புலப்பட்டதும் ஓடிச்சென்று அதைச் செய்வான். அவள் அவனிடம் கூறியதையெல்லாம் அவன் நம்பிக் கொள்வான் ஒரு சிறு தர்க்கம் கூட இல்லாமல், உதா ரணமாக அவள் ஈசாக்குக் சமைப்பதற்கென இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வரும்படி சொன்ன போது அப்படியே ஏற்றுக் கொண்டான். ஒரு மனிதன் உண்ப தற்கு ஒரு ஆட்டுக் குட்டி போதுமானதல்லவா என்று யாக்கோபு கேட்கவில்லை மறுப்புச் சொல்லாமல் அவள் சொன்னபடியே செய்தான்.

194. (4) அவன் தன் தாயிடம் முழு நம்பிக்கை வைத் திருந்தான். தன் சொந்தத் திறமையில் அவன் ஊன்றி யிருக்கவில்லை. தன் தாயின் கரிசனையிலும் பாதுகாப்பிலும் மட்டுமே ஊன்றியிருந்தான். தன் தேவை எல்லாவற்றி லும் அவன் அவளையே நாடினான். தன் சகல சந்தேகங் களிலும் அவளையே கலந்து ஆலோசித்தான். உதாரண மாக தன் தந்தை தன்னை ஆசீர்வதிப்பதற்குப் பதிலாக சபிப்பாரோ என்று அவன் கேட்டபோது அவன் தாய் அந்த சாபத்தை தன் மீது ஏற்றுக் கொள்வதாகக் கூறியதை அவன் ஏற்று நம்பினான்.

195. (5) இறுதியாக, யாக்கோபு தன் தாயிடம் கண்ட புண்ணியங்களை தன்னால் இயன்ற மட்டும் பின் பற்றி நடந்தான். அவன் இவ்வளவு தூரம் வீட்டிலேயே இருந்ததற்கு ஒரு காரணம், மிகவும் புண்ணியவதியான தன் தாயைக் கண்டுபாவிப்பதற்காகவும் ஒழுக்கத்தைக் கெடுக்கும் தீயோர் பழக்கத்தை விலக்குவதற்குமே என்றே தோன்றுகிறது. இங்ஙனம் அவன் தன் தந்தையின் இரட்டை ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள தன்னைத் தகுதியுடைய வனாக்கிக் கொண்டான்.

196. முன் குறிக்கப்பட்டவர்களின் அன்றாட நடத்தையும் இவ்வாறே உள்ளது.

(1) அவர்கள் தங்கள் தாயுடன் வீட்டில் தங்கியிருக் கிறார்கள். அதாவது அவர்கள் தனிமையில் வாழ்வதை யும் அந்தரங்க வாழ்வையும் விரும்புகிறார்கள். செபிப்பதில் முயற்சியாயிருக்கிறார்கள், இதை அவர்கள் தங்கள் அன்னையான கன்னிமரியாயின் முன்மாதிரிகைப்படியும் அவர்களுடன் சேர்ந்தும் செய்கிறார்கள். மரியாயின் மகிமை அந்தரங்கத்தில் இருக்கின்றது; அவர்கள் தங்கள் வாழ் நாளில் தனிமையில் வாழ்வதையும் செபிப்பதையும் விரும்பினார்கள். முன் குறிக்கப்பட்டவர்கள் - சில சமயங் களில் வெளியுலகில் காணப்படுகிறார்கள் தான். ஆனால் அது கடவுள் சித்தத்திற்கும் தங்கள் நேச அன்னை மரியா யின் விருப்பத்திற்கும் பணிந்து, தங்கள் அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்காகவே. அவர்கள் புறத் தில் செய்யும் வேலை எவ்வளவு பெரிதாகத் தோன்றினா லும், அவர்கள் தங்கள் அகத்தில் - அந்தரங்க வாழ்வில், கன்னித் தாயுடன் சேர்ந்து செய்பவற்றிற்கே அதிக முக் கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம் என்ன வென்றால், அங்கு அவர்கள் உத்தமதனம் அடைதல் என்னும் மாபெரும் அலுவலை ஆற்றுகிறார்கள் இவ்வலுவலுடன் மற்ற எல்லா உழைப்பையும் ஒப்பிட்டாலும் அவையா வும் வெறும் குழந்தை விளையாட்டுப் போன்றவையே. இதனாலேயே அவர்கள் தங்கள் சகோதரரும் சகோதரி களும் புற அலுவல்களில் மிகுந்த ஊக்கத்தோடும் உழைப்போடும் வெற்றியோடும் ஈடுபட்டு உலகத்தின் வாழ்த்துதலையும் ஒப்புதலையும் பெறும் பொழுது, தாங்கள் அதற்கு மாறாக தங்கள் முன்மாதிரிகையான சேசு கிறீஸ் துவுடன் மறைந்த ஓய்வில், தங்கள் தாயான மாதாவுக்கு முழுப் பணிதலுடன் இருக்கிறார்கள். இவ்வாறு இருப்பது, உலகத்தில் தன் மூப்புப் படி சுபாவ முறையிலும் வரப் பிரசாத முறையிலும் பல ஏசாக்களும் தீர்ப்பிடப்பட்டவர் களும் செய்வது போல் அதிசயங்களைச் செய்வதை விட அதிக நல்லதும் அதிக ஆனந்தமுள்ளதாகவும் இருக்கிறது என்பதை பரிசுத்த ஆவியின் ஒளியினால் அறிந்திருக்கிறார் கள். 'மகிமையும் செல்வமும் அவன் வீட்டில் உண்டு'' (சங். 111, 3). கடவுளின் மகிமையும் மனிதரின் செல்வ மும் மரியாயின் வீட்டில் காணப்படுகின்றன. .

ஆண்டவராகிய சேசுவே! உம்முடைய இல்லங்கள் எவ்வளவு அருமையாயிருக்கின்றன. அடைக்கலான் குருவி வசிப்பதற்கொரு வீடு கண்டு கொண்டது. காட்டுப் புறா தன் குஞ்சுகளுக்கு ஒரு கூடு தேடிக் கொண்டது. முதல் முதல் நீர் தங்கியிருந்த மரியாயின் வீட்டில் வாழும் மனிதன் எவ்வளவு மகிழ்ச்சியுடையவன்! முன் குறிக்கப் பட்டவர்களின் இந்த வீட்டில் அவன் உம்மிடமிருந்து மட்டுமே உதவி பெறுகிறான். இந்தக் கண்ணீர் கணவாயில் உத்தமதனத்தை ஏறிச் சென்று அடையும் பொருட்டு எல்லாப் புண்ணியங்களின் படிகளையும் அளவுகளையும் தன் இருதயத்தில் அவன் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆண்டவரே உமது இல்லம் எத்துணை இனிமையாயிருக்கிறது........... (சங். 83, 1)

197. [2] மன் குறிக்கப்பட்டவர்கள் மரியாயைத் தங்கள் நல்ல தாயாகவும் - தலைவியாகவும் கனிவுடன் நேசிக்கிறார்கள். உண்மையாகவே மதிக்கிறார்கள். வார்த் தையால் மட்டுமல்ல, உண்மையிலே நேசிக்கிறார்கள். வெளிக்கு மட்டுமல்ல, தங்கள் இருதயத்தின் ஆழத்திலி ருந்து மதிக்கிறார்கள். யாக்கோபைப் போல் அவர்கள் மாதாவுக்கு விருப்பமற்ற எதையும் தவிர்க்கிறார்கள். அன்னைக்கு விருப்பமானது என அவர்கள் கருதுகிற எல் லாவற்றையும் ஊக்கத்துடன் செய்கிறார்கள். யாக்கோபு ரபேக்காளிடம் கொண்டு கொடுத்தது போல் இரு ஆட்டு குட்டிகளையல்ல, அவற்றால் குறிக்கப்படும் தங்கள் சரீரத் தையும் ஆத்துமத்தையும் அவற்றைச் சார்ந்துள்ள அனைத் தையும் மரியாயிடம் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். எதற்காக?

(1) மாதா அவற்றைத் தன் சொந்தமாக ஏற்றுக் கொள்ளும்படியாக.

(2) மாதா அவற்றைக் கொன்று, பாவத்திற்கும் சுயத்திற்கும் அவற்றைச் சாகடித்து, அவற்றை உரித்து, சுயநலமாகிய தங்கள் சொந்த தோலைக் களையவும், தங்களுக்கு மரித்தவர்களையே தன் நண்பர்களாகவும் சீடர்களாகவும் கொள்ள விரும்பும் தன் திருக்குமாரன் சேசுவுக்கு அவர்களை உவந்தவர்களாகவும் செய்யும் படியாக.

(3) அவர்களைப் பரலோக பிதாவின் விருப்பத் திற்கு ஏற்றபடியும், மற்றெல்லா சிருஷ்டியையும் விட மாதா அதிகம் அறிந்துள்ள பிதாவின் அதிமிக மகிமைக் கெனவும் அவர்களை தானே தயாரிக்கும் படியாக,

(4) மரியாயின் கரிசனையாலும் மன்முட்டாலும் இந்த சரீரமும் ஆத்துமமும் முழுவதும் தூய்மையாக்கப் பட்டு, முழுவதும் மரித்து, முற்றிலும் களையப்பட்டு நன்கு தயாரிக்கப்பட்டு பரம தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற சிறந்த உண்பொருளாய் அவருடைய ஆசீரைப் பெறத் தகுதியுடையதாகச் செய்யும் படியாக.

சேசு மீதும் மாதா மீதும் தாங்கள் கொண்டுள்ள, ஆற்றலும் திடமுமுள்ள அன்பை நிரூபிக்க அவர்கள் விரும்புகிறார்கள். மரியாயின் கரங்கள் வழியாக சேசுவுக்கு முழு அர்ப்பணமாகும்படி நாம் இங்கு அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதை நடைமுறையிலும் செய்கிறார்கள். முன் குறிக்கப்பட்டவர்களின் செயலன்றோ இது!

தீர்ப்பிடப்பட்டவர்களும் தாங்கள் சேசுவை நேசிப் பதாகவும் மரியாயை நேசித்து மதிப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் "ஆஸ்தியைக் கொண்டு" நேசிப் பதில்லை (பழ. 3. 9). முன் குறிக்கப்பட்டவர்கள் செய் வது போல் தங்கள் சரீரத்தையும் அதன் புலன்களையும், தங்கள் ஆத்துமத்தையும் அதன் விருப்பங்களையும் பரித் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் நேசிப்பதில்லை.

198: [3] முன் குறிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புள்ள தாயைப் போல மாதாவைப் பணிந்து கீழ்ப்படிகிறார்கள். தாம் உலகத்தில் வாழ்ந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் முப்பது ஆண்டுகள் தம் புனித மாதாவுக்கு முழுவதும் முழுமையாகப் பணிந்திருந்து, அதனால் தம் பிதாவை மகிமைப்படுத்திய சேசு கிறீஸ்துவின் முன் மாதிரிகையைப் பின்பற்றி அப்படிச் செய்கிறார்கள். ரபேக்காள் யாக்கோ பிடம் “என் மகனே என் சொல்லைக் கேட்டுக் கொள்" (ஆதி 27, 8) என்றாள். இளைஞனான யாக்கோபு அதைக் கேட்டுக் கொண்டான். அதே போல இவர்களும் மரியா யின் ஆலோசனைகளை அப்படியே பின்பற்றி கீழ்ப்படிகி றார்கள். கானாவூர்க் கலியாணத்தில் ''அவர் உங்களுக்குச் சொல்கிறபடி செய்யுங்கள்.'' (அரு. 2, 5) என்று மாதா கூறியபடி வேலைக்காரர்கள் செய்தது போல இவர்களும் செய்கிறார் கள். ஏதோ ஒரு அற்புதம் போலவே யாக்கோபு தனக்கு இயல்பாக கிடைத்திருக்க முடியாத ஆசீர்வாதத்தை தன் தாய்க்குக் கீழ்ப்படிந்ததனால் பெற்றுக்கொண்டான். மாதாவின் ஆலோசனைப்படி நடந்ததற்குப் பரிசாக கானாவூர்க் கலியாணத்தில் அவ்வூழியர் கிறீஸ்துவின் முதல் புதுமையால் மகிமை பெற்றார்கள். தம் திரு அன்னையின் வேண்டுதலுக்காக அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். இது போலவே உலக முடியுமட்டும் இருக்கும். பரலோகத் தந்தையின் ஆசீரைப் பெறுகிறவர்களும் கட வுளின் அதிசயங்களால் மகிமைப்படுத்தப் படுகிறவர்களும் மாதாவுக்கு அவர்கள் முழுமையாகக் கீழ்ப்படிவதன் பல னாகவே இவ்வரங்களைப் பெற்றுக் கொள்வார்கள். இதற்கு நேர்மாறாக, ஏசாக்கள் மாதாவுக்குப் பணிதல் இல்லாததி னால் தங்கள் ஆசீர்வாதத்தை இழந்து போவார்கள்.

199. (4) தங்கள் நேச அன்னையான மரியாயின் நன்மைத்தனத்திலும் வல்லமையிலும் அவர்களுக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. எப்பொழுதும் அவர்கள் மரியாயின் உதவியைக் கேட்டு மன்றாடுகிறார்கள். பத்திரமாக துறை சேருவதற்கு வழி நடத்தும் துருவ நட்சத்திரமாக அவர் களை நோக்கிப் பார்க்கிறார்கள். தங்கள் துன்பங்களையும் - தேவைகளையும் மிகவும் திறந்த இருதயத்தோடு அவர் களிடம் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மன்றாட்டால் பாவத் திற்கு மன்னிப்புப் பெறவும், தங்கள் துன்ப ஏக்கங்களில் அவர்களுடைய தாய்க்குரிய இனிமையை நுகரவும் இத் தாயின் நெஞ்சின் இரக்கத்தையும் சாந்த குணத்தையும் விடாது பற்றிக் கொள்கிறார்கள். மரியாயின் அன்புமிக்க கன்னிமை குன்றா நெஞ்சில் ஒரு ஆச்சரியமான முறை யில் தங்களைக் கையளித்து, அதிலே மறைந்து தங்களையே அதில் இழந்து விடுகிறார்கள். அங்கே பரிசுத்தமான அன் பால் கொளுத்தப்படுகிறார்கள். மிகச் சிறிய கறையிலிருந் தும் தூய்மையாக்கப்படுகிறார்கள். அங்கு மிகவும் மகிமை பொருந்திய தமது சிங்காசனத்தில் இருப்பதுபோல் தங்கி வீற்றிருக்கும் சேசுவை முழு நிறைவாய் அடைகிறார்கள்.

என்னே இதன் மகிழ்ச்சி! குயெரிக் என்ற மடாதிபதி கூறு கிறார்: ''ஆபிரகாமின் மடியில் இருப்பது மரியாயின் மடியிலிருப்பதை விட அதிக ஆனந்தமானது என நினை யாதே. ஏனென்றால் நமதாண்டவரே தம் ஆசனத்தை மரியாயிடம் அமைத்துள்ளார்” என்று! (Sermo in Assum. ptione-4)

இதற்கு மாறாக தங்களையே நம்பிக் கொண்டு, ஊதாரி மகனோடு பன்றிகள் தின்னும் கோதுகளை உண்டு, உலக விரும்பிகளுடன் தேரைகளைப் போல் மண்ணை உணவாக்கி கண்காணும் வெளிப்புறக் காரியங்களை மட்டும் நேசித்து வரும் தீர்ப்பிடப்பட்டவர்களுக்கு மரியாயின் இருதய இனிமையில் எவ்வித சுவையும் தென்படுவதில்லை. முன் குறிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரிய அன்னை மீது கொள்ளும் ஊன்றுதலையும் நம்பிக்கையையும் அவர்கள் உணர்வதில்லை. அர்ச். கிரகோரியார் கூறுவது போல் அவர்கள் வெளியிலுள்ள காரியங்கள் மீது பரிதாபத்துக் குரிய விதமாய்ப் பசி கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் ஏற்கெனவே சேசுவிலும் மரியாயிலும் தயாரிக்கப்பட்டுள்ள இனிமையை தங்களுக்குள் நுகர அவர்கள் விருப்பங் கொள்ளவில்லை. போகப்போக

200. (5) இறுதியாக முன் குறிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புத் தாயின் வழியில் நடந்து செல்லுகிறார்கள். அதாவது அவர்களை முன் மாதிரிகையாகக் கொண்டு நடக் கிறார்கள். இதனால் அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச் சியாக இருக்கிறார்கள். பக்தியாக இருக்கிறார்கள். முன் குறிக்கப்படுதலின் தப்பாத அடையாளத்தைக் கொண்டி ருக்கிறார்கள். அவர்களுடைய அன்பான அன்னை அவர் களை நோக்கி, “என் வழிகளைப் பின் செல்லுகிறவர்கள் பாக்கியவான்கள்'' (பழ 8, 32)) என்கிறார்கள். இதன் பொருள், என்னுடைய புண்ணியங்களைப் பயிற்சி செய்கிற வர்களும், கடவுளின் அருளால் என் வாழ்க்கைப் பாதை யில் நடக்கிறவர்களும் பாக்கியவான்கள். அவர்கள் இவ் வுலகத்தில் தங்கள் வாழ்நாளில் மகிழ்ச்சியுடனிருக்கிறார் கள். இது ஏனென்றால் என்னுடைய நிறைவிலிருந்து நான் ஏராளமான வரப்பிரசாதங்களையும் இனிமையையும் அவர்களுக்குக் கொடுக்கிறேன். என்னை இவ்வளவு நுணுக்க மாகக் கண்டு பாவியாதவர்களுக்குக் கொடுப்பதை விட அதிகமாகக் கொடுக்கிறேன், அவர்கள் தங்கள் மரண வேளையில் மகிழ்வுடன் இருக்கிறார்கள். மரணம் அவர் களுக்கு இனிமையும் அமைதியும் உள்ளதாயிருக்கிறது. அவர்களை நானே நித்திய ஆனந்தத்திற்கு அழைத்துச் செல்லும்படி வழக்கமாக அந்நேரம் நான் பிரசன்னமாயி ருக்கிறேன். ஏனென்றால் வாழ்வில் என் புண்ணியங்களைப் பயிற்சி செய்த என் நல்ல ஊழியரில் ஒருவனாவது ஒரு போதும் இழக்கப்பட்டதில்லை.

இதறகு மாறாக, தீர்ப்பிடப்பட்டவர்கள் தங்கள் வாழ் நாளிலும் மரண வேளையிலும் நித்தியத்திலும் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மிகப்புனித கன்னி மரியாயின் புண்ணியங்களைக் கண்டு பாவிப்பதில்லை. சில வேளை மரியாயின் பக்தி சபையில் சேருவதிலும் சில செபங்களை அவர்களின் மகிமைக்காகச் சொல்வதிலும் அல்லது வேறு சில வெளிப் பக்திகளைக் காட்டுவதிலும் அவர்கள் திருப்தியடைந்து கொள்கிறார்கள்.

ஓ கன்னிமரியாயே! என் அன்புள்ள தாயே! என் இருதய மகிழ்ச்சிப் பெருக்கினால் நான மீண்டும் கூறுகி றேன். உங்கள் மீது தவறான பக்தியால் ஏமாற்றப்படா மல், உங்களின் பாதையில் உண்மையுடன் நடந்து உங் கள் ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கடைபிடிக்கிற வர்கள் எவ்வளவு பாக்கியசாலிகளாயிருப்பார்கள்! ஆனால் உங்கள் பக்தியை துர்ப்பிரயோகம் செய்து உங்கள் திருக் குமாரனின் கட்டளைகளின்படி நடவாதவர்கள் எவ்வளவு நிர்ப்பாக்கியரும் சபிக்கப் பட்டவர்களுமாயிருக்கிறார்கள்! “உமது கற்பனைகளை அனுசரியாமல் பிசகிப்போகிறவர்கள் சபிக்கப்பட்ட வர்கள்'' (சங். 118, 21).