தெய்வீக ஞானமானவரை அடையும் முதல் வழி: ஒரு வேகமுள்ள ஆசை!

181. மனுமக்களே, உங்கள் இருதயங்கள் இன்னும் எவ்வளவு காலம் பாரமாகவும், உலகத்தோடு கட்டுண்டதாகவும் இருக்கும்? எவ்வளவு காலம் வீணானதை நேசித்து, பொய்யான தைத் தேடித் திரிவீர்கள் (சங். 4:3). அனைவரிலும் அதிகம் ஆசிக்கப்படத் தக்கவரும், நம் அன்பை ஈர்ப்பதற்காக தமது மூலாதாரத்தைத் தெரியப்படுத்துபவரும், தம் அழகைக் காண் பிப்பவரும், தமது செல்வங்களைக் காட்சிக்கு வைப்பவரும், தம்மை நாம் ஆசிக்கவும் தேடவும் வேண்டும் என்பதில் தாம் எவ்வளவு ஆவலாக இருக்கிறார் என்பதை ஓராயிரம் வழிகளில் காட்டுபவருமாகிய தெய்வீக ஞானமானவரை நோக்கி நீங்கள் ஏன் உங்கள் கண்களையும், இருதயங்களையும் திருப்பு வதில்லை? " ஆனதால் என் வார்த்தைகளை ஆவலோடு ஆசி யுங்கள்" (ஞான . 6:12) என்று அவர் நம்மிடம் சொல்கிறார். ஞானத்தை ஆசிப்பவர்கள் ஆசிக்கு முன்னமே அது அவர்களுக் குத் தன்னைத்தானே காட்டுகின்றது (ஞான . 6:14). ஞானத்தை அடைய வேண்டுமென்னும் ஆசை நித்திய இராச்சியத்திற்கு அழைத்துப் போகிறது (ஞான. 6:21). 

182. தேவ ஞானத்தை அடைய வேண்டுமென்னும் ஆசை உண்மையில் கடவுளிடமிருந்து வரும் வரப்பிரசாதமாகவே இருக்க வேண்டும். ஏனெனில், அது அவருடைய கட்டளை களைப் பிரமாணிக்கமாக அனுசரிப்பதற்கான வெகுமதியாக இருக்கிறது.

மகனே, நீ ஞானத்தை விரும்புவாயாகில் நீதியைக் கடைப்பிடி, சர்வேசுரன் உனக்கு அதை அளிப்பார்..... சர்வேசுர னுடைய கற்பனைகளில் உன் எண்ணத்தைச் செலுத்தி, அவர் கட்டளைகளில் வெகு கவனமாயிரு அவர் உனக்கு நன்மனதைக் கொடுப்பார். ஞானத்தின் ஆசையும் உனக்கு அளிக்கப்படும் (சர்வப். 1:33, 6:37). ஏனெனில் கெட்ட எண்ண முள்ள ஆத்துமத்தில் ஞானம் பிரவேசியாது (ஞான 1:4).

ஞானத்தின் மீதான இந்த ஆசை பரிசுத்தமாயும், நேர்மை யாயும் இருக்க வேண்டும். அது கடவுளின் கட்டளைகளைப் பிரமாணிக்கமாக அனுசரிப்பதன் மூலம் வளர்க்கப்பட வேண்டும். எண்ணற்ற ஆசைகளால், அல்லது ஆசைகளாக மாற இருக்கும் காரியங்களால் தூண்டப்படும் எண்ணற்ற மூடர்களும், சோம்பேறிகளும் இருக்கிறார்கள். இந்த ஆசைகள் அவர்கள் பாவத்தை விட்டு விலகவும், தங்களுக்குத் தாங்களே பலவந்தம் செய்யவும் அவர்களைத் தூண்டுவதில்லை. மாறாக, அவை நம்பத்தகாத, வஞ்சகமான ஆசைகளாக மட்டுமே இருக்கின்றன. இவை ஆத்துமத்திற்கு மரண ஆபத்தானவை, அதை நித்திய அழிவுக்கு இட்டுச் செல்பவை மட்டுமே. உண்மையான அறிவின் ஆசிரியரான பரிசுத்த ஆவியானவர் வஞ்சகமானது எதையும் தவிர்க்கிறார். புத்தியற்ற சிந்தனைகளிலிருந்து விலகிச் செல்கிறார். அக்கிரமம் அவரை ஆத்துமத்திலிருந்து வெளியேற்றுகிறது (ஞான 1:5). 

183. ஞானத்தை அடைவதற்கு முன்மாதிரிகையாகப் பரிசுத்த ஆவியானவரால் நமக்குத் தரப்பட்டுள்ள சாலமோன். இந்தக் கொடையைத் தாம் ஆசித்து, அதைத் தேடி, அதற்காக நீண்ட காலம் ஜெபித்த பின்னரே அதைப் பெற்றுக் கொண்டார். "நான் ஞானத்தை ஆசித்துத் தேடினேன். அது எனக்குத் தந்தருளப் பட்டது. நான் கடவுளைக் கூவியழைத்தேன். ஞானத்தின் ஆவியானவர் என்னிடம் வந்தார்" (ஞான. 7:7). "என் வாலிபம் முதல் ஞானத்தையே ஆசித்துத் தேடினேன். அதை என்னுடன் சேர்ப்பதற்கு எங்கும் சுற்றித் திரிந்தேன்" (ஞான . 8:2,18). ஞான மாகிய இந்த மாபெரும் திரவியத்தை அடைவதற்கு சாலமோ னையும், தானியேலையும் போல, நாம் ஆசையுள்ள மனிதர்களாக இருக்க வேண்டும் (தானி. 9: 23 காண்க).