இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கொள்ளையரிடமிருந்து பாதுகாப்பு

முஞ்ஞானோ பங்குக்குரு சங். லூஸியாவின் பிரான் ஸிஸ்கோவின் தாய் அங்கு வந்திருந்தாள். ஒரு நாள் அவர் பலிபூசை செய்ய கோவிலுக்குச் செல்லும்போது அவள் வேகமாய் வந்து. “மகனே, ஒரு வார்த்தைக்கு நில்லும் . உடனே சொல்கிறேன்'' என்று கூறினார். அவரும் நின்றார். “நான் ஒரு கனவு கண்டேன். அர்ச். பிலோமினம்மாள் இங்கிருந்து பயணம் புறப்பட்டிருக்கிறாள். முஞ்ஞானோவை விட்டு அவள் சென்றுவிடுவாளோ என்று பயந்து நாங்கள் அழுதோம். அப்போது அவள் அன்போடு சொன்னாள்: “நாளைக்கே திரும்பி வந்து விடுவேன். எனக்கு மிக வேண்டியவர்களான தெர்ரஸ் குடும்பம் பெரும் ஆபத்தில் இருக்கிறது. அவர்களைப் போய்க் காப்பாற்றுவது எனக்கு நன்றிக்கடன் என்றாள்” என்று கூறினாள். இது தன் தாயின் கற்பனையாயிருக்கக்கூடும் என்று பிரான்ஸிஸ்கோ சுவாமி எண்ணினார். ஆயினும் பின்னால் அவர் தெர்ரஸ் வீட்டா ருக்கு இவ்விஷயத்தைக் கடிதத்தில் எழுதினார். அந்த இரவில் தெர்ரஸ் குடும்பம் உண்மையிலே பெரும் ஆபத்திலிருந் தது. கொள்ளையர் போர்ச் சிப்பாய்களைப் போல் உடை யணிந்து வீட்டை உடைத்துத் திறந்து உள்ளே சென்று விட்டார்கள். அவ்வீட்டார் உடனே அர்ச். பிலோமினம் மாளை வேண்டிக் கொண்டார்கள். மாடிப் படிக்கட்டை நோக்கிப் போகையில் வெளியிலிருந்து அநேக குரல்கள் “வெளிச்சம் கொண்டு வாருங்கள். சீக்கிரம் வாருங்கள், சீக்கிரம் வாருங்கள்'' என்று பெரும் சத்தம் கேட்டது. கொள்ளையர் பயந்து உடனே வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டார்கள். அண்டை வீடுகளிலுள்ள அவர்களது நண்பர்கள் பலர் அங்கு வந்து நடந்ததையெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்த இரா வேளையில் தாங்கள் எப்படி சேர்ந்து அங்கே சென்றோம் என்பது அவர்களுக்கே புதிராயிருந்தது. நிச்சயம் இது அர்ச். பிலோமினம்மாளின் செயல்தான் என்று எல்லாரும் நிச்சயித்து நன்றி செலுத்தி னார்கள். பங்குக் குருவின் கடிதம் பின்னால் அதை அவர்களுக்கு உறுதியாக்கியது.