திரையரங்குகள், ஒழுக்கக் கேட்டின் குகைகள்

திரையரங்குகளில் நிலவும் புலனிச்சையையும், உடலின்பத்தின் மீதான பெரும் ஈர்ப்பையும் பாருங்கள். அங்கே, மிகச் சாதாரணமாக கணவர்கள் தங்கள் மனைவிய ரையும், தாய்மார் தங்கள் மகள்களையும் கூட்டிச் செல் கிறார்கள். இளம் குழந்தைகளும் கூட அவர்களுடைய மூடத்தனமுள்ள பெற்றோரால் பொழுதுபோக்கு என்ற பெயரில் அங்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள்!

(இவையெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டன. இன்று இவற்றைவிட அதிக அருவருப்பான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்கள், தொலைக்காட்சிப் பெட்டி, கேபிள் டி.வி., வீடியோக்கள் மூலம் கத்தோலிக்க இல்லங்களுக்குள் ளேயே புகுந்து ஆக்கிரமித்து விட்டன.)

இந்தத் திரையரங்குகள் ஒழுக்கக் கேட்டின் குகை களாகவும், துர்க்குணத்தைத் தூண்டும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அங்கே பாவம் பொதுவாக்கப்படுகிறது, நியாயப்படுத்தப்படுகிறது, மிகவும் வெட்கமற்ற, திடமான முறைகளில் அங்கே பாவம் கற்றுத் தரப்படுகிறது.

அங்கே திருடுவது எப்படியென்றும், துணிந்து கொள்ளையடிப்பது எப்படியென்றும் திரையில் பாடம் நடத்தப்படுகிறது. கொலை செய்வதற்கான புதுப்புது முறைகளும் வழிகளும் கூட கற்றுத் தரப்படுகின்றன. அதைக் காணும் குழந்தைகள் கொலையைக் கூட சாதாரண மானதாக நினைக்கத் துணிகிறார்கள்.

அநாகரீகம் அதன் ஒவ்வொரு வடிவத்திலும் பிரபல மாக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியரும், இளைஞர், இளம் பெண்களும் மிகப் பெரும் சுய இச்சையுடனும், திருப்தியுடனும் மிக அருவருப்பான திரைப்படங்களைப் பார்க் கிறார்கள்.

திருமணமான இளம் ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு நாளும் தாங்கள் காண்பவையும், கண்களால் பருகுபவையுமான காரியங்களைத் தங்களையும் அறியாமல் நடை முறையில் கடைப்பிடிக்கத் தொடங்கி விடுகிறார்கள் என்பதில் என்ன அதிசயம் இருக்க முடியும்?

சில மாதங்களுக்கு முன்பு ஓர் அமெரிக்க மேற்றிராணியாரும், அவருடைய மேற்றிராசனத் தணிக்கையாளர்களும் சில திரைப்படங்களைப் பார்த்து, அவை பற்றித் தங்கள் கருத்துக்களைக் கூறும்படி அழைக்கப் பட்டனர். தங்களுக்குக் காட்டப்பட்ட காட்சிகளைக் கண்டு அவர்கள் மலைத்துப் போயினர். அவை எல்லாவற் றையும் பற்றிய தங்கள் பயங்கர உணர்வை அவர்கள் வெளிப் படையாக அறிவித்தார்கள். திரையுலகப் பிரமுகர்களில் எவனும் இத்தகைய அசுத்தமான தயாரிப்புகளைப் பொது மக்களுக்குக் காட்ட நினைக்கக் கூடும் என்பதே கூட அவர்களுக்கு நம்ப முடியாததாக இருந்தது.

இருந்தாலும் இந்தத் திரைக் காட்சிகளின் முடிவில் அனைவரிலும் அதிக வியப்புக்குள்ளானவர்கள் திரைத் துறையின் பிரமுகர்கள்தான். தங்கள் படங்கள் இயற்கைக்கு உண்மையானவையாக இருக்கின்றன என்றும், மக்கள் இவற்றைத்தான் விரும்புகிறார்கள் என்றும், இவற்றால்தான் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன என்றும் அவர்கள் வன்மையான முறையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித் தார்கள்!

ஆயர்கள் திரையுலகத்தினரின் இப்படிப்பட்ட கருத்தை அறிந்து, ஒன்றுபட்டு எதிர்த்தார்கள். இதன் விளைவாக அச்சமயத்தில் எட்டுக் கோடி டாலர்கள் மதிப்புள்ள அருவருப்பான திரைப்படங்கள் கண்டனம் செய்யப்பட்டு, தடை செய்யப்பட்டன.

ஆயினும், இன்று இளம் மனைவியரும், சிறுவர், சிறுமியரும், குழந்தைகளும், தங்கள் பெற்றோரின் முழு சம்மதத்துடன் பார்க்க அனுமதிக்கப்படுகிற திரைப் படங்கள் இப்படிப்பட்டவைதான்.

நூல் நிலையங்களும், புத்தகக் கடைகளும் இன்று ஒழுக்கக் கேடான நூல்களின் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. இச்சையைத் தூண்டும் அசுத்தமான நாவல் களும், அசிங்கமான படங்களும் இன்று எல்லா இடங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

அடக்க உணர்வு கூட குறைவுபடுவதைக் காட்டுகிற நவீன பாணிகளையும் கவனியுங்கள்; அஞ்ஞான உடைகள், அல்லது இடறலான விதத்தில் கடற்கரைகளிலும், கப்பல் தளங்களிலும், பொது இடங்களிலும் உடைகளே இல்லா திருத்தல் போன்றவை சகஜமாகி விட்டன. இளம் பெண்கள் தான் மிகவும் வெட்கங்கெட்ட பாவிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வெட்கம், நாணம் எல்லாவற்றையும், பரிசுத்ததன மாகிய உணர்வையும் அடியோடு இழந்து விட்டதாகத் தோன்றுகிறது.

கெட்டதாயிருக்கிற ஒரு பசு கோபவெறியுள்ள ஒரு எருதை விட மிக அதிக ஆபத்தானது என்றும் பெண் சிங்கம் ஆண் சிங்கத்தை விட அதிக வன்மையும், காட்டுத்தனமும் உள்ளது என்றும் அடிக்கடி சொல்லப்படுவதுண்டு.

பெண்கள் தங்கள் சுய மரியாதையையும், சுய கட்டுப்பாட்டையும் இழக்கும்போது, அவர்களும் கூட அனைவரிலும் அதிகம் கெட்டுப் போனவர்களாகவும், அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆகி விடுகிறார்கள். பொது அறிவுள்ள எந்த ஆண்தான் இப்படிப்பட்ட பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ள முடியும்? அவர்கள் எப்படி இவர்களை நம்ப முடியும்? இந்தப் பெண்கள் திருமணம் செய்தார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட தாய்மாராக இருப்பார்கள்?