இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாழும் ஜெபமாலையை அங்கீகரித்த பாப்பரசர்!

16-ம் கிரகோரியாரின் சான்று

“இக்காலங்களின் ஆழ்ந்த வேதனையிலும், நிர்ப்பாக்கியத்திலும், துன்பத்திலும், “வாழும் ஜெபமாலை'' என்ற பெயரில் பரிசுத்த கன்னிகையை நோக்கிய இப்பக்தி முயற்சியில் நாம் பெரும் ஆறுதலைக் கண்டடைகிறோம். இதிலே நமக்குக் கடவுளின் உதவி உள்ளதென்ற திடமான நம்பிக்கை கிடைக்கிறது. இதன் ஒரு அனுகூலம் என்ன வென்றால், இப்பக்தி முயற்சி எளிமையானது. எந்த இடத் திலும் எந்நேரத்திலும் நம் தேவ அன்னையை மகிமைப் படுத்த முடிகிறது. அநேக ஆன்மாக்கள் இணைந்த ஜெபம், தூபம் போல் மேல் நோக்கி எழுவதால் அது ஒரு பெரும் ஜெப சக்தியாகி, கடவுளை நம்மீது இரக்கம் கொள்ளச் செய்கிறது.''

“இக்காரணங்களுக்காக நாம் இப்பக்தி முயற்சிக்கு பாப்புக்குரிய அத்தாட்சியை தயக்கமின்றி அளிக்கிறோம். மரியாயின் மகிமைக்காக ஏற்பட்ட ஜெபமாலையைச் சொல்லி, அவ்வன்னையுடன் தொடர்பு கொண்டு, மன்றாடுவதால் திருச்சபை முழுவதற்கும் கிடைத்துள்ள உதவிகளையும் ஞாபகத்தில் கொண்டு, கீழே கூறப்படும் ஞானப்பலன் களை வாழும் ஜெபமாலை''க்கு அளிக்கிறோம். 

இதே நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் நமது குருக்களும் வாழும் ஜெபமாலை இயக்கத்தை வரவேற் கிறார்கள். தங்களை அதற்கு அர்ப்பணிக்கிறார்கள். அநேக மேற்றிராணிமார்கள் தங்கள் மேற்றி ராசனங்களில், வாழும் ஜெபமாலையை தேவதிரவிய அனுமானங்களுக்கு அடுத்தபடியில் வைத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு விசுவாசி களிடம் பக்தி உருக்கத்தை எழுப்பி, அனைவருக்கும் வரப்பிரசாதங்களையும், ஆசீர்வாதங் களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். - ஜனவரி 7, 1832.