இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

பூசையின் பலன்

"அந்தக் காரியத்தை நான் பூசை நேரத்தில் கடவுளிடம் கேட்கப்போகிறேன். பூசை நேரத்தில் கேட்பது கிடைக்கிறது'' என கிளாரா ஒருநாள் ஜார்ஜ் என்னும் தன் தோழனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவருக்கும் வெகு அவசியமாக ஒரு காரியம் வேண்டியிருந்தது. பூசை நேரத்தில் அதற் காகக் கடவுளை மன்றாட அவர்கள் தீர்மானித்தது மிக நல்லது. திவ்விய பூசையானது மிக வல்லமை யுள்ள பலி. பூசை நேரத்தில் நாம் கேட்பதை கடவுள் கொடுக்க மறுப்பதில்லை. ஏனென்றால் நாம் கேட்பது கடவுளது ஆராதனைக்குரிய திருச்சித்தத்துக்கு ஏற்ற தாக இருந்தால், பூசை நேரத்தில் யேசுவே தமது பிதாவிடம் நமக்காகப் பரிந்து பேசுகிறார். யேசு கேட் கும்போது அவருடைய பரலோக பிதா இல்லை யென்று சொல்வாரா?

ஓர் ஊரில் பரிசுத்தவான் ஒருவர் இருந்தார். அவ ரது பெயர் செவெரினுஸ் சுவாமியார். அவர் ஒரு மடத்தின் அதிபதி. இந்தப் பரிசுத்த குரு வசித்த நாட்டில் அநேக நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு பெரிய ஆபத்து வந்தது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளி கள் திடீரென வந்து வயல்களில் இருந்த பயிர்மீது இறங்கின. குடியானவர்கள் பயந்து நடுங்கினர். ஏனென்றால் சில நாட்களில் தங்கள் பயிர்பச்சைகள் எல்லாம் நாசமாகும் என அவர்களுக்குத் தெரியும். வெட்டுக்கிளிகள், அனைத்தையும் சாப்பிட்டு விடும். குடியானவர்கள் என்ன செய்வதென்றறியாது திகைத்து, செவெரினு ஸ் சுவாமியாரை அணுகி, ஆலோசனையும் உதவியும் கேட்டார்கள்.

அவர் எல்லோரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று பிரசங்கித்தார். ''உங்களது பாவாக்கிரமங் களுக்குத் தண்டனையாக கடவுள் இந்த வெட்டுக்கிளிகளை அனுப்பியிருக்கிறார். நீங்கள் யாவரும் கடவுளது கோபத்தைத் தணிக்க முயலவேண்டும். எவ்விதம் அதைத் தணிப்பது என அறிய விரும்புகிறீர்களா? பாவத்தால் எழுப்பப்படும் கடவுளது கோபத்தைத் தணித்து, வேண்டிய காரியங்களைப் பெற்றுத்தர திவ் விய பூசையைப்போல் சிறந்தவழி ஒன்றுமே கிடை யாது. பூசைநேரத்தில் பீடத்தில் இருக்கும் யேசு நமக்காக மன்றாடுவதால், பிதா தம் நேச குமாரனின் குரலுக்கு உடனே செவி கொடுக்கிறார். நாளைக் காலையில் எல்லோரும் இங்கே வாருங்கள். நமக்கு வந்திருக்கும் பேராபத்து நீங்கும்படி எல்லோரும் என் னுடன் சேர்ந்து திவ்விய பூசைப்பலியை பிதாவுக்கு ஒப்புக்கொடுங்கள்'' என அவர் மொழிந்தார்.

எல்லோரும் சரி என்று ஒத்துக்கொண்டார்கள். பாவம் செய்ததற்காக மிக மனம் வருந்தி துயரப்பட் டார்கள். இனி பாவம் செய்வதில்லை எனப் பிர திக்கினை செய்தார்கள். பாவங்களுக்குத் தண்டனை யாகக் கடவுள் வெட்டுக்கிளிகளை அனுப்பியிருப்பதாக உணர்ந்து, மறுநாட் காலையில் பூசை கண்டு, கடவு ளிடம் பொறுத்தலும் இரக்கமும் கேட்டு மன்றாடத் தீர்மானித்தார்கள்.

ஒரு குடியானவன் மாத்திரம் அவர்களைப் பரிக சித்தான். “என்ன வேடிக்கையாயிருக்கிறது! உங் களுக்கு அறிவு எங்கே போய்விட்டது? பூசைசெய்து என்ன பயன்? ஒரு வெட்டுக்கிளியை முதலாய் அது வெளியே துரத்த முடியாது'' என அவன் கூறினான். மறுநாட் காலையில் அவன் ஒருவனே கோவிலுக்குப் போகவில்லை. வேலை செய்யும்படி வயலுக்குப் போனான்.

மற்றெல்லோரும் கோவிலுக்குச் சென்று வெகு பக்தியோடு பூசை கண்டனர். தாங்கள் பாவிகள் என ஒத்துக்கொண்டு, யேசுவின் முகத்தை பார்த்து தங்கள் மேல் இரக்கமாயிருக்கும்படி கடவுளை மன்றாடினார்கள். புனித கொலெற் அம்மாள் ஆராத னைக்குரிய பூசைப் பலியைக் கண்டு கொண்டிருக்கை யில், ஒருநாள் நடந்தது என் நினைவுக்கு வருகிறது. தேவவசீகர வார்த்தைகளைச் சொன்னபின், குருவான வர் எழுந்தேற்றம் செய்கையில், "ஓ என் சர்வேசுரா, என் யேசுவே, ஓ சம்மனசுக்களே, அர்ச்சியசிஷ்டர் களே, ஓ மானிடரே, ஓ பாவிகளே, நான் பார்க்கும் அதிசயங்கள் என்னே!'' என அவள் கூவுவது குரு வானவரின் காதில் விழுந்தது. பூசை முடிந்ததும் குருவானவர் கொலெற்றை அழைப்பித்து, அவள் சத்தமிட்டதன் காரணத்தை வினவினார். "சுவாமி, நீங்கள் திரு அப்பத்தை உயர்த்திய போது, கிறிஸ்து நாதர் சிலுவையில் தொங்குவதை நான் பார்த்தேன். அவரது விலைமதிக்கப்படாத காயங்களிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் யேசு தம் நித்திய பிதாவைப் பார்த்து, "பிதாவே, இந்த உடலுடன் நான் சிலுவையில் தொங்கி மனித ருக்காக வேதனைப்பட்டேன். என் காயங்களை நோக்கி யருளும்; நான் சிந்திய இரத்தத்தைப் பாரும், நான் பட்ட வேதனைகளையும், என் மரணத்தையும் நினைத்த ருளும். பாவிகளைக் காப்பாற்றும்படியே நான் இந்தப் பாடுகளைப் பட்டேன். இப்பொழுது அவர்கள் பாவம் செய்கிறார்களே என்று அவர்களை நரகத்தில் தள்ளு வீரானால், பசாசிடம் அவர்களைக் கையளிப்பீரானால், நான் கொடிய பாடுகளைப் பட்டு, பயங்கர மரண மடைந்து என்ன பயன்? என் முகத்தைப் பார்த்து, பிதாவே, பாவிகள் மேல் இரக்கமாயிரும். நித்திய நரகத்தில் அவர்கள் விழாதபடி அவர்களைக் காப்பாற் றும்'' என மன்றாடுவதை நான் கேட்டேன்'' என கொலெற் பதிலளித்தாள்.

அதேபோல் செவெரீனுஸ் சுவாமி செய்த பூசை நேரத்தில் யேசு தம் பிதாவைப் பிரார்த்தித்தார். அவரது மன்றாட்டு அளவற்ற பலனுள்ளது. அந்த மக்களுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கும்படி யேசு தம் பிதாவைப் பிரார்த்தித்தார்.

பூசை முடிந்ததும் குடியானவர்கள் வேலை செய் யும்படி வயல்களுக்குச் சென்றார்கள். இருண்ட மேகம் போல் வெட்டுக்கிளி யாவும் அப்படியே கிளம்பின. மக்கள் கடவுளை வாழ்த்தி மனப்பூர்வமான நன்றி செலுத்தினார்கள்.

திவ்விய பூசையின் வல்லமை இது. பீடமானது உண்மையாகவே வரப்பிரசாதத்தின் சிம்மாசனம். இரக்கத்தின் ஊற்று. அந்த ஊற்றினிடம் நாம் ஒவ் வொருநாளும் போகப் பிரயாசப்படவேண்டும். புனித சின்னப்பர் சொல்வதுபோல், வரப்பிரசாதத்தின் சிம்மாசனத்தை நாம் நம்பிக்கையுடன் அணுகவேண் டும். அப்படியானால் நமக்குத் தேவையான நேரத் தில் வரப்பிரசாதமும் இரக்கமும் கிடைக்கும்.

பூசைப்பலியை பரிகசித்த நிர்ப்பாக்கிய குடியான வனுக்கு நேரிட்டதையும் நான் சொல்லவேண்டும். மிக ஆராதனைக்குரிய திருப்பலியை அவன் நிந்தித் தான். கடவுள் அவனைச் சும்மா விடவில்லை. வெட் டுக்கிளிகள் புறப்பட்ட சமயத்தில் அவன் வயலில் இருந்தான். அதைக்கண்ட அவன் பிரமித்தான். உயரப் பறந்த வெட்டுக்கிளிகள் திடீரென கீழே இறங்கி அவனது வயலில் விழுந்தன. அவனுடைய பயிர்களை யெல்லாம் அவை நாசம் செய்தன. அவன் உடனே உதவி கேட்டுக் கடவுளை நோக்கிக் கூவினான். ஆனால் பயனில்லை. அவனுடைய வயலில் பச்சையா யிருந்ததெல்லாவற்றையும் சாப்பிட்ட பின்னரே அவை வெளியேறின.