இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சேசுவுக்கும் மரியாயிக்கும் அவர்களுடைய அடிமைகளைப் போல நாம் உரிமையாயிருக்கிறோம்

68. சேசு கிறீஸ்து நமக்கு யார் என்பதிலிருந்து நாம் பின்வரும் முடிவுக்கே வரவேண்டியுள்ளது : அப்போஸ்தலர் கூறுவது போல, நாம் நமக்குச் சொந்தமல்ல. நம்மை அளவற்ற விலை கொடுத்து, தம் இரத்தமாகிய கிரயத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ள சேசு கிறிஸ்துவுக்கே நாம் அடிமைகளாகவும் அங்கங்களாகவும் முழுச் சொந்தமாக இருக்கிறோம். 

ஞானஸ்நானம் பெறுமுன் நாம் பசாசின் அடிமைகளாய் பசாசுக்குச் சொந்தமாயிருந்தோம். ஞானஸ்நானம் நம்மை சேசு கிறிஸ்துவின் உண்மையான அடிமைகளாக ஆக்கியது. இவ்வடிமைகளாகிய நாம் இத் தேவமனிதனுக்கு நற்பயன் விளைவிக்கும்படியாகவே வாழ்ந்து, உழைத்து இறத்தல் வேண்டும்: நம் சரீரத்தில் அவரை மகிமைப்படுத்த வேண்டும்: நம் ஆன்மாவில் அவர் அரசாள வேண்டும். 

ஏனென்றால் நாம் அவருடைய வெற்றியின் மக்கள் அவருடைய வம்ச உரிமையும் சம்பாத்ய பிரஜைகளுமானவர்கள். இதே காரணத்திற்காகத்தான் பரிசுத்த ஆவி பின்வரும் உதாரணங்களுடன் நம்மை ஒப்பிடுகிறார்:

(1) வரப்பிரசாத தண்ணீர்களின் நடுவே திருச்சபையென்னும் வயலில் நடப்பட்டு தக்க காலத்தில் கனிதரக் கூடிய மரங்கள் நாம் என்றும்,

(2) சேசு கிறிஸ்துவே திராட்சைச் செடியாயிருக்க நல்ல திராட்சைக் கனிகளைத் தரும் அதன் கிளைகளாக நாம் இருக்கிறோம் என்றும்.

(3) சேசு கிறீஸ்துவே ஆயனாக இருக்க. நன்கு பலுகி - பால் வழங்கும் மந்தையாக நாம் இருக்கிறோம் என்றும்,

(4) கடவுளை உழவனாகக் கொண்டு, விதைகள் ஒன்றுக்கு முப்பது, அறுபது, நூறு மடங்கு பலனளிக்கும் நல்ல நிலமாக நாம் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

சேசு கிறீஸ்து கனி தராத அத்தி மரத்தை சபித்தார். தன் தலேந்தைக் கொண்டு வியாபாரம் செய்யாத உபயோக மற்ற ஊழியனைக் கண்டனம் செய்தார். இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? பரிதாபத்துக்குரிய நம்மிடமிருந்து சில நற்கனிகளை - அதாவது, நமது நற்செயல்களை அவர் எதிர்பார்க்கிறார் என்பதையே. ஏனெனில் அவை அவருக்கே உரிமையாயிருக்கின்றன. "நாம் நற்கிரியைகளைச் செய் வதற்கு கிறீஸ்து சேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம்' (எபே. 2:10). பரிசுத்த ஆவியின் இவ் வார்த்தைகள் காட்டுவ தென்ன? சேசு கிறீஸ்துவே தம் எல்லா நற்செயல்களின் துவக்கமாயிருக்கிறார். அவரே அவற்றின் முடிவாகவும் இருக்க வேண்டும். நாம் சம்பளம் பெறும் ஊழியரைப் போல் மட்டுமல்ல, அன்பின் அடிமைகளாக அவருக்கு ஊழியம் செய்யவேண்டும்.

என் கருத்தை விளக்கிக் கூறுகிறேன்:
69. இப்பூமியில் ஒருவன் இன்னொருவனுக்கு உரிமை யாயிருந்து அவனுடைய அதிகாரத்தில் சார்ந்திருப்பது இரண்டு முறைகளில் கூடும் : ஒன்று சாதாரண ஊழியம். மற்றது அடிமைத்தனம். இதனாலேயே ஊழியன் என்றும் அடிமை என்றும் இங்கு குறிப்பிடுகிறோம்.

கிறீஸ்தவர்களுக்குள் வழக்கத்திலிருக்கும் ஊழியம் என்பது, ஒரு குறிப்பிட்ட சம்பளம் அல்லது சன்மானத்திற் காக ஒருவன் இன்னொருவனுக்கு ஒரு குறிப்பிட்ட காலத் திற்கு ஊழியம் செய்ய ஏற்படுதல்.

அடிமைத்தனம் என்பது ஒருவன் தன் முழு வாழ்விற்கும் இன்னொருவனையே முழுதும் சார்ந்திருந்து. சம்பளமோ சன் மானமோ எதிர்பாராமல் தன் உயிர் மீதும் மரணம் மீதும் அதிகாரமுடைய அவனுடைய கால்நடைகளில் ஒன்றைப் போல், தன் எஜமானுக்கு ஊழியம் செய்வது.

70. இனி, அடிமைத்தனம் என்பது மூவகைப்படும். 

(1) இயல்பான அடிமைத்தனம் 
(2) கட்டாய அடிமைத் தனம் 
(3) விரும்பிய அடிமைத்தனம்.

(1) எல்லா சிருஷ்டிகளும் கடவுளுக்கு இயல்பாகவே அடிமைகளாயிருக்கின்றன. "பூமியும் அதில் நிறை யாவும் ஆண்ட வருடையதே'' (சங். 23:1). 

(2) பசாசுக்களும் தண்டனைத் தீர்ப்பிடப்பட்டவர்களும் கட்டாய அடிமைகளா யிருக்கிறார்கள். 

(3) அர்ச்சிஷ்டவர்களும் நீதிமான்களும் விரும்பிய அடிமைகளாயிருக்கிறார்கள். இருதயத்தைப் பார்க்கிறவரும் இருதயத்தை உரிமையாகக் கேட்கிறவரும் இருதயத்தின் இறைவன் அல்லது அன்புள்ள சித்தத்தின் கர்த்தர் என தன்னையே அழைக்கும் கடவுளுக்கு மிகச் சிறந்த மகிமையளிப்பதும் மிகவும் உத்தமமான தும் 'விரும்பிய, அடிமைத்தன மேயாகும். இது இப்படித்தான். ஏனெனில் நமக்கு இயற்கையின் கட்டாயத்தால் இவையெல்லாம் இங்ஙனம் இல்லாவிட்டாலும் கூட, இந்த அடிமைத்தனத்தில் சர்வேசுரனையும் அவருடைய ஊழியத்தையும் நாமேதான் தெரிந்து கொள்கிறோம்.

71. ஒரு ஊழியனுக்கும் ஒரு அடிமைக்கும் முழு வேறு பாடு உள்ளது:

(1) ஒரு ஊழியன் 'தான்' என்றுள்ள யாவற்றையும் 'தன்னுடையவை' என்ற யாவற்றையும், தன்னாலோ பிற ரைக் கொண்டோ தான் அடையக்கூடிய யாவற்றையும் தன் எஜமானுக்குக் கொடுப்பதில்லை. ஆனால் ஒரு அடிமை, தான் என்றுள்ளதை முற்றும் முழுவதும் கொடுத்து விடு கிறான். தன்னுடையவை யாவற்றையும் ஒன்று பாக்கியில் லாமல் எஜமானிடம் ஒப்படைத்து விடுகிறான்.

(2) 'ஒரு ஊழியன் தன் எஜமானுக்குச் செய்யும் உதவி களுக்கு ஊதியம் கேட்கிறான். ஆனால் ஒரு அடிமை எதை யுமே கேட்க முடியாது. அவன் எவ்வளவு - ஊக்கம், உழைப்பு. சக்தியைத் தன் வேலையில் செலவிட்டிருந்தாலும் தன் எஜமானிடமிருந்து எதையும் கேட்க முடியாது. 

(3) ஒரு ஊழியன் தான் விரும்பியபோது தன் எஜமானி டமிருந்து சென்று விடலாம்; குறைந்தபட்சம். தன் ஊழிய ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் சென்றுவிடலாம். ஆனால் ஒரு அடிமை தான் விரும்பும்போது எஜமானை விட்டுச் சென்றுவிட உரிமையில்லை.

(4) ஒரு எஜமானுக்குத் தன் ஊழியனுடைய உயிரின் மீதோ மரணத்தின் மீதோ அதிகாரம் கிடையாது. தன் பொதிமிருகங்களில் ஒன்றைப்போல அவன் தன் ஊழிய னைக் கொன்றால் அது அவனுக்குக் கொலைப்பாவமாகிறது. ஆனால் ஒரு அடிமையின் எஜமானுக்குத் தன் அடிமையின் உயிர் அல்லது மரணத்தின் மீது சட்டப்படி அதிகாரம் உள்ளது (சட்டப்படி என்னும்போது, அப்படிக்கொல்ல இயற்கைச் சட்டமோ, தேச சட்டமோ, தெய்வ நீதியோ இடமளிக்கிறது என்று அர்ச். லூயிஸ் இங்கு கூறவில்லை. அப்போது இருந்த நடை முறையைக் கூறுகிறார். அடிமை என்றால் முழு உரிமையையும் இழந்தவன் என்பதைக் குறிப்பிடவே அவர் விரும்புகிறார்.). அவன் தன் அடிமையை யாருக்கு விருப்பமோ அவர்களுக்கு விற்கலாம். அல்லது தன் குதிரையைப்போல கொன்றும் விடலாம். இந்த ஒப்புமையைச் சொல்ல நான் விரும்பவில்லை.

(5) ஒரு ஊழியன் தன் எஜமானிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கே இருக்கிறான். ஆனால், ஒரு அடிமை எப்போதும் இருக்கிறான்.

72. ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு அதிக உரிமையாக்குவது அடிமைத்தனத்தைப்போல் வேறு எதுவு மில்லை. இதைப் போலவே, நம் அன்பிற்காக அடிமை உரு வமெடுத்த சேசு கிறீஸ்துவைப்போலும், தன்னையே ஆண்ட வரின் அடிமையானவள் என்று அழைத்த கன்னிமரியாயைப் போலவும், அவ்விருவருக்கும் நம்மை அதிக உரிமையாக்கு வது நாம் விரும்பி ஏற்கும் அடிமைத்தனத்தைப் போல வேறு எதுவுமில்லை... “கிறீஸ்துவின் ஊழியன்" என்பதை ஒரு மதிப்பிற்குரிய பட்டமாகக் கொண்டு தன்னையே “சேசு கிறீஸ்து நாதருடைய ஊழியன்'' என்று அப்போஸ்தலரான அர்ச். சின்னப்பர் அழைக்கிறார். "கிறீஸ்துவின் ஊழியர்'' அதாவது “கிறீஸ்துவின் அடிமைகள்!'' என வேத நூலில் பல இடங்களில் கிறீஸ்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆன் றோர் ஒருவர் (''கடவுளின் வியத்தகும் அன்னைக்கு புனித அடிமைத்தனம்', என்ற நூலை எழுதியுள்ள ஹென்ரி மரிய பூடோன் என்பவர். இவர் எவ்ரூவில் அதி தியாக்கோனாயிருந்தார்.) உண்மையோடு கூறியிருப்பது போல், முந் நாட்களில் "ஊழியன்'' என்றால் ''அடிமை" என்பதைத் தவிர வேறு பொருள் இல்லை. ஏனென்றால் இக்காலத்தைப் போல் அப்போது ஊழியர்கள் இருக்கவில்லை. எஜமானர் கள் அடிமைகளால் அல்லது சுயாதீனர்களால்தான் ஊழிய உதவி பெற்றார்கள். திரிதெந்தீன் திருச் சங்கத்தின் ஞானோப தேசம் இதில் - நாம் கிறீஸ்துவின் அடிமைகள் என்பதில்எவ்வித சந்தேகமும் ஏற்படாதபடி திட்டவட்டமாக Mancipia Christi அதாவது "கிறீஸ்துநாதருடைய அடிமைகள்” என்றே கூறுகிறது** (+ Roman Catechism Part I. Ch. III)

இஃது இவ்வாறிருக்க,

73. நாம் ஊதியம் பெறும் ஊழியர்களாக அல்ல, அன்பு நிறைந்த அடிமைகளாக சேசு கிறீஸ்துவுக்கு உரிமைப்பட்ட வர்களாயிருந்து அவருக்கு ஊழியஞ்செய்ய வேண்டும் என்று நான் கூறுவேன். மிகப்பெரிய அன்பினால் நாம் நம்மையே அவருக்கு ஊழியம் புரியும் அடிமைகளாகக் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிமையாக இருக்கும் அந்த ஒரு மகிமைக்காகவே அங்ஙனம் செய்யவேண்டும். ஞானஸ்நா னம் பெறுமுன் நாம் பசாசின் அடிமைகளாயிருந்தோம். ஞானஸ்நானம் நம்மை சேசு கிறீஸ்துவின் அடிமைகளாக்கி யது. கிறீஸ்தவர்கள் ஒன்றில் பாசசின் அடிமைகள் அல்லது சேசு கிறீஸ்துவின் அடிமைகளாகத்தான் இருக்கமுடியும்.

74. நான் சேசு கிறீஸ்துவைப் பற்றி முழு உண்மை யாகக் கூறுபவைகளை அவருடன் சார்புடைய தன்மையில் மாமரி அன்னையைப் பற்றிக் கூறுகிறேன். சேசு, தம் வாழ் விலும் மரணத்திலும், . மகிமையிலும் தமது பரலோக பூலோக வல்லமையிலும் மரியாயை தன்னை விட்டுப் பிரிக்க முடியாத துணையாகத் தெரிந்துகொண்டதினிமித்தம், தாம் இயல்பாகக் கொண்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளை யும் தம் மகத்துவத்தோடு சார்புடைய தன்மையில் மாமரிக்கு தமதருளால் வழங்கியுள்ளார். கடவுளுக்குத் தம் சுபாவப் படி ஏற்பட்டதெல்லாம் மரியாயிக்கு வரப்பிரசாதத்தால் ஏற்படுகின்றன என்று அர்ச்சிஷ்டவர்கள் உரைக்கிறார்கள். .....எனவே சேசுவுடையவும். மரியாயுடையவும் மக்களும் - ஊழியரும் அடிமைகளும் அவர்கள் இருவருக்கும் பொது வாகவே உள்ளனர். (அர்ச். தமாஸின் அருளப்பர் [Sermo in A dormitione .B. M.])

75. ஆகவே அர்ச்சிஷ்டவர்களுடையவும் அநேக பெரியோருடையவும் கருத்துக்களைப் பின்பற்றி நாமும் சேசு கிறீஸ்துவுக்கு அதிக உத்தமமான முறையில் அடிமை கள் ஆவதற்கு ஏதுவாக நம்மை தேவ அன்னையின் அன்புள்ள அடிமைகளாகக் கருதலாம்: அங்ஙனமே நம்மை ஆக்கிக் கொள்ளலாம். (அர்ச். இல்ட போன்ஸ் (De virginitate Perpetua B.M.)) நமதாண்டவர் நம்மிடம் வருவதற்கு வழி யாக இருப்பது கன்னிமாமரி. நமதாண்டவரிடம் செல்வ தற்கு நாம் கைக் கொள்ள வேண்டிய பாதையும் கன்னி மரி யாயே. (அர்ச். அகுஸ் தீன் (Sermo in nativitate Domini)) இதன் காரணம் என்னவென்றால், மாதா மற்ற சிருஷ்டிப் பொருள்களைப்போல் அல்ல. மற்ற சிருஷ்டிப் பொருள்களிடம் நாம் சார்பு கொண்டால் அவை நம்மை கடவுளிடம் இழுப்பதற்குப் பதிலாக கடவுளை விட்டு விலகிப் போகச் செய்யக்கூடும். நம்மை தன் திருக்குமாரன் சேசு கிறீஸ்துவுடன் ஐக்கியம் கொள்ளச் செய்வதே மாதாவின் மிகப் பெரும் ஆசை. அதுபோலவே நாம் தம் திருத்தாயின் வழியாகத் தம்மிடம் வரவேண்டுமென்பதே தேவ சுதனின் மிகப் பெரிய விருப்பம். ஒருவன் தன் அரசனுக்கு அதிக உத்தம பிரஜையாகவும் அடிமையாகவும் ஆகும் பொருட்டு அரசியின் அடிமையாக தன்னையே ஆக்கிக்கொள்வது அவ் வரசனுக்கு எவ்வளவு விருப்பமும் மகிமையாகவும் இருக் குமோ, அதேபோல் சேசு கிறீஸ்துவுக்கு இது விருப்பமும் மகிமையுமாக இருக்கின்றது. இதனால்தான் திருச்சபையின் பிதாக்களும் அவர்களுக்குப்பின் அர்ச். பொனவெந்தூர் என்பவரும், நமதாண்டவரிடம் இட்டுச் செல்லும் பாதை கன்னி மாதாவே என்று கூறுகிறார்கள்.* (Psalter majus B. V சங், 117.)

76. யாவும், கன்னிமாமரி உட்பட. கடவுளின் ஆளு கைக்கு உட்பட்டவையாயிருக்கின்றன அல்லவா? அப்படி யானால் நான் முன்பு கூறியதுபோல் (எண் 38.) மாதா பர லோகத்துக்கும் பூலோகத்துக்கும் அரசியும் தலைவியுமாயிருப் பதால், யாவும், கடவுள் உட்பட, மாதாவின் ஆளுகைக்கு உட்ப ட்ட வையாகின்ற ன. (Imperio Dei Omnia subjiciuntur et virgo; ecce imperio Virginis-cmnia subjiciuntur et Deus..) இவ்வாறு அர்ச். ஆன் செலம், அர்ச். பெர்னார்ட், அர்ச். பெர்னார்டின், அர்ச். பொனவெந்தூர் ஆகியோர் உரைத் துள்ளனர். 'அங்ஙனமாயின், எத்தனை சிருஷ்டிகள் உள்ள னவோ அத்தனை பிரஜைகளும் அடிமைகளும் மாதாவுக்கு உண்டல்லவா? இத்தனை பேர் கட்டாய அடிமைத்தனத்தில் இருக்கும் போது அவர்கள் நடுவிலிருந்து, தங்கள் சொந்த சுதந்திர விருப்பமுடன் மாதாவைத் தங்கள் தலைவியாகத் தெரிந்து கொண்ட அன்பின் அடிமைகள் சிலரேனும் இருப்பது நியாயமல்லவா? என்ன!! மனிதர்களும் பசாசுக்களும் விருப்ப அடிமைகளைத் தங்களுக்குக் கொண்டிருக்க, மாதா மட்டும் அது இல்லாதிருப்பார்களா? என்ன!! ஒரு அரசன் தன் சகதர்மிணியான அரசிக்கு அவளுடைய மதிப்பும் அதி காரமும் தன்னுடையதே என்பதால் தன் மகிமை விளங்கும் படி அடிமைகளைக் கொடுப்பான். அவளும் அவர்களுடைய உயிர் மீதும் மரணத்தின் மீதும் அதிகாரம் கொண்டிருப் பாள் என்றால், சேசு கிறீஸ்து, மைந்தருட் சிறத்த மைந்தன், தன் முழு அதிகாரத்தையும் தமது திரு அன்னையுடன் பகிர்ந்து கொண்டுள்ள அவர் மட்டும் தம் தாய்க்கு அடிமை கள் இருப்பதை விரும்பமாட்டார் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்? அசுவேருஸ் அரசன் எஸ்தர் மீதும், சாலமோன் மன்னன் பெத்சபீ மீதும் கொண்டிருந்த மதிப்பையும் அன்பையும் விட குறைந்த அன்பையும் மதிப்பையுமா சேசு கிறீஸ்து தம் தாயிடம் கொண்டிருந்தார்? இவ்வாறு . கூற வும், ஏன் நினைக்கவும் கூட யார் துணிவார்கள்?

77. என் எழுதுகோல் என்னை எங்கே இழுத்துச் செல்லு கிறது. இத்தனை தெளிவான ஒன்றை நிரூபிக்க நான் ஏன் இங்கு நேரத்தைச் செலவிடுகிறேன்? யாரும் தங்களை மரியா யின் அடிமைகள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாவிட் டால் அதனால் என்ன? அவர்கள் சேசு கிறீஸ்துவின் அடிமை களாகட்டும், அவருடைய அடிமைகள் என்று தங்களை அழைக்கட்டும். இதுவும் மாதாவின் அடிமைகளாயிருப்ப தும் ஒன்றுதான். ஏனென்றால் மரியாயின் கனியும் அவர் களுடைய மகிமையும் சேசுதான். இதனையே நாம் உத்தம விதமாய்ச் செய்கின்றோம். அதுபற்றி இப்போது கூறுவோம்.