வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் குருவானவர் சேசுநாதருடைய முழு அதிகாரத்தோடு செயல்படுபவராக இருக்கிறார். நம் ஆண்டவர் பாவிகளின் மட்டில் கொண் டிருந்த பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றுபவராக அங்கே இருக்கிறார்; மிகுந்த தாராளத்தோடு கடவுளின் இரக்கங்களை மனிதர்களுக்குப் பகிர்ந்தளிக்கும்படியாக அவர் அங்கே இருக்கிறார்.

“சர்வேசுரா, பாவியாகிய என் பேரில் தயவாயிரும்.''

அநேக பாவங்களைத் தன் மீது சுமையாகக் கொண் டிருக்கிற பரிதாபத்திற்குரிய பாவி, தன் தவறுதல்களையும், பலவீனத்தையும் நன்கு உணர்ந்தவனாக கடவுளின் பரிசுத்த ஊழியரின் பாதங்களின் அருகில் முழந்தாளிடுகிறான். அவன் தன் பாவங்களை அவரிடம் சங்கீர்த்தனம் செய் கிறான். அவை பலவாகவும், இருண்டவையாகவும் இருந் தாலும், மன்னிக்கப்பட்டவனாக அவன் அங்கிருந்து எழுந்து செல்கிறான்.

அவனுடைய இருதயம் வேதனையாலும், துயரத் தாலும், அவமானத்தாலும் நிரம்பியிருந்தது. அவனது மனச் சான்று மனவுறுத்தலால் கிழிக்கப்பட்டது, அவனுடைய ஆத்துமம் சந்தேகங்களாலும், அச்சங்களாலும் கலங்கியது. அவன் இந்த தன்னுடைய பாரமான சுமையைக் குருவின் பாதங்களருகில் இறக்கி வைக்கிறான்; அவனுடைய பாவங்கள் கடவுளின் இரக்கமாகிய பாதாளத்தால் விழுங்கப் படுகின்றன. தன் தோள்களின் மீதிருந்து ஒரு மலை இறக்கப் பட்டு விட்டது போல அவன் உணர்கிறான். அவன் தன்னுள் ஒரு புதிய பலத்தையும், ஒரு புதிய சமாதானத்தையும், ஒரு புதிய உயிரையும் உணர்ந்தவனாக வாழ்வை, அதன் சகல துயரங்களோடும், சோதனைகளோடும் எதிர்கொள் கிறான். 

குருவானவர் செய்வதென்ன? அவர் தம் பாதங் களின் அருகில் முழந்தாளிட்டிருக்கிற பாவியின் மட்டில் அளவற்ற தயாளமுள்ளவராக இருக்கிறார்; பாவசங்கீர்த் தனம் செய்ய அவர் எத்தகைய கனிவுடன் அவனுக்கு உதவுகிறார்! எவ்வளவு அன்போடு அவனை ஊக்குவிக் கிறார், எவ்வளவு ஞானமுள்ள விதத்தில் அவர் அவனைக் கண்டிக்கிறார், அவர் பாவியை எவ்வளவு தாழ்ச்சியுள்ளவனாக உணரச் செய்கிறார் என்றால், அவரும் கூட ஒரு பாவியாகவும், பலவீனமுள்ளவராகவும்தான் இருக்கிறார். மனஸ்தாபத்தோடு தம்மிடம் பாவசங்கீர்த்தனம் செய்யும் பாவியின் பாவங்கள் எவ்வளவு கனமானவையாக இருந்தாலும், அவற்றைக் கேட்டு அவர் ஒரு கணம் முதலாய் அருவருப்படைவதில்லை. அவனுடைய சிறு சிறு இழிசெயல்களுக்காகவும், பலவீனங்களுக்காகவும், அவன் பாவசங்கீர்த்தனத்தில் சொல்ல வேண்டியுள்ள கடுமையான பாவ சோதனைகளுக்காகவும், அவர் அவனை நிந்தித்து வெறுப்பதில்லை. தமது ஆத்துமத்தின் உள்ளாழத்தில் இவ்வளவு பாவியாயிருக்கிற ஓர் ஆன்மாவை மீட்டு இரட்சிக்கக் கூடிய வரப்பிரசாதத்திற்காக அவர் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். அவர் விளக்க முடியாத ஒரு மிகப் பெரும் ஆறுதலாக இருக்கிறார்.

ஒரு குருவானவர் பீடத்தினருகில் தம் சர்வேசுரனோடு இருப்பதும், பாவசங்கீர்த்தனத் தொட்டியில் மனஸ்தாபமுள்ள பாவிகளோடு இருப்பதுமான தருணங் களே அவருடைய வாழ்வின் மிக மேலான, மிக மகிழ்ச்சி யான சமயங்களாக இருக்கின்றன.

கடவுள் அவருடைய இருதயத்தில், அவரிடம் வருகிற பரிதாபத்திற்குரிய பாவிகளின் மீதான ஒரு நேசத்தையும், பாசத்தையும் விதைக்கிறார். இந்த நேசமும், பாசமும், தன் பிள்ளைகள் மட்டில் ஒரு தாயின் இருதயத்தில் அவர் விதைக்கிற நேசத்திற்கு சமமானவையாக இருக்கின்றன.