அர்ச். தோமையார் வரலாறு - மலையாள நாடு

புனித தோமையார் மலையாள நாடு வந்து அங்கு வெகுவாக உழைத்ததைப்பற்றி பாரம்பரை மிக்க உறுதியாகக் கூறுகின்றது. அவ்விடம் தோமையார் பேரால் பண்டையக் கா லத்தே கட்டப்பட்டுள்ள சில கோவில்களே அதற்கு அத்தாட்சி. அக்கா லமு தல் இக்காலம் வரையில் அத்தேசத் தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமன்று, இதர மதத்தினராகிய இந்துக்கள், முஸ்லீம்கள், யூதர் ஆகியவர்கள் முதலாய் தோமையார் அங்கு வந்ததை நம்பி, அவர் பேர்கொண்ட ஆலயங்களைத் தரிசித்துக் காணிக்கைகள் செலுத்துவது கவனிக்கற்பாலது. 

ஆண்டுதோறும் சூலை மாதம் 3 ஆம் நாள் அவர்கள் கொண்டாடும் புனித தோமையார் திரு நாள் அவர்களுக்கு ஒரு முக்கியமான நாள். ஒவ்வொரு குடும்பத்தி லும் தோமையார் பெயர் கொண்டவன் ஒரு வ னா கி லு ம் இருப்பான். மற்ற எவ்விடத்தையும் விட தோமையார் பெயரைப் பெரிதும் பாராட்டும் நாடு மலையாள நாடே. அது தோமையார் நாடு என்றால் தகும். 

அவர் களும் தொன்று தொட்டு 'தோமையார் கிறிஸ்தவர்கள்' என்றே வழங்கப்பட்டு வரு கின் றனர். அவ்விடத்தில் இன்னும் தோமையார் கிறிஸ்தவர்கள் இருப்பது வெளிப்படை. அவர் களின் மொத்தத் தொகை இன்று இருபது இலட்சத்திற்கு மேலாகிறது. பதினாறு இந்திய மறை ஆயர்களும் பன்னூறு உள் நாட்டுக் குருக்களும் அக்கிறிஸ்தவர்களைக் கண்காணித்து வருகின் றனர்.

நாராங்கோட்டையிலிருந்து கடல் மார்க்கமாக முதன் முதல் கரங்கனூர் வந்தார் தோமையார். அவரது அப் போஸ்தலிக்கு வேலையை ஆரம்பிக்க அதுவே ஏற்ற இட மாயிற்று. ஏனெனில், அக்காலம் கரங்கனூரில், சிரியாவி லிருந்து வந்துள்ள வணிகர்களும், யூதர்களும் குடியேறியிருந்தனர். அவர்கள் மத்தியில் தமது வேத அலுவலைத் தொடங்கினார். அந்த இடத்திலேயே தங்கி விடாது மலையா ளப் பகுதியின் பல பாகங்களுக்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எண்ணற்ற பேர்களை மனந்திருப்பி, 

அவர் களுக்காகச் சில ஆலயங்களை யும், வேறு சில இடங்களில் பெரிய கற்சிலுவைகளையும் அமைத்தார். ஆலயங்களில் முக்கியமானவை ஏழு. இவற்றைப்பற்றி அறியாதவர் கள் அந்தக் கிறிஸ்துவர் களுக்குள் ஒருவராகிலும் கிடையாது என்பது மிகையாகாது. அந் நாட்டில் அப்போஸ்தலர் எத்தனை ஆண்டு உழைத்தார் என்று நிச்சயமாய்க் கூறத் தகுந்த ஆதாரம் இல்லாதே போயினும், ஏறக்குறைய ஏழு ஆண்டுகள் அங்கிருந்தார் என்பது பாரம்பரை. 

அவ்விட மிருந்து திருமயிலை போனபின்பும் கூட இரண்டு முறை சென்றாராம். 1498 ஆம் ஆண்டு போர்த்துக் கீசியர் மலையாள தேசம் வந்தடைந்தபோது, அங்குப் பெருந்திரளான கிறிஸ்துவ சபையோரைக் கண்டது வரலாறு. அதைப்பற்றி வரலாற்று ஆசிரியராகிய பாரோஸ் 1552 ஆம் ஆண்டு பின் வருமாறு எழுதியிருக்கின்றார். "கரங்க னூரில் போர்த்துக்கீசியர் வந்திறங்கின போது பெருந் தொகையான கிறிஸ்துவர்கள் அங்கிருந்தனர். 

அவர்கள் 'தோமையார் கிறிஸ்துவர்கள்' என்று அழைக்கப்பட்டு வந்தார்கள். ஏனெனில், அவர்கள் அப்போஸ்தலராகிய தோமையாரால் மனந்திருப்பப்பட்டவர்களின் சந்ததியார். அவர் பலரை சத்தியமறையில் சேர்த்து, அவர்களுக் காகச் சில கோவில்களை யும் கட்டியிருந்தார்" என்பதே. மயிலாப்பூர் பக்கத்திலேயே தோமையார் மரித்ததாகக் கிறிஸ்துவர்கள் நம்பி வந்தபோதிலும், போர்த்துக்கீசியர் வந்தபோது அங் குக் கிறிஸ்துவர்கள் காணப்படவில்லை. 

ஆனால் மலையாள தேசத்துள் ள கரங்கனூர், தீயாம் பூரிலே கிறிஸ்துவர்களில் பெரும்பாலர் இருந்தார்கள். மயிலையில் ஏற்பட்ட போரினால் அவ்வூர் அடியோடு அழிந்து போயிற்று. இதனிமித் தம் மக்கள் பல திசையிலும் சிதறிப்போயினர். கிறிஸ் தவர் களோ தம் சகோதரர்களாகிய கிறிஸ்துவர்க ளிருந்த மலையாளப்பகுதிக்குப் போ னா ர் க ள். இதுவே அங்கிருந்த பெருந்தொகையான கிறிஸ்துவர்களுக்குக் காரண மென்பது பொதுவானக் கருத்து

நிற்க, கரங்கனூரில் தோமையாரின் சீடர்கள் இருவர் கட்டிய கோவில் ஒன்று இருக்கின்றது. அக் கோவிலானது மிகுந்த பக்தியோடு பாது காக்கப்பட்டு வருகின்றது. தோமையார் சீடர்களின் சடலங்கள் கரங்கனூரிலேயே அடக்கம் செய்யப்பட்டன. போர்த்துக்கீசியர் கோட்டை கட்டுகையில் அந்த இடத்தில் சிறு கோபுரங்கள் அமைத்த னராம்.

பிற்காலத்தில் கத்தோலிக்குக் குருக்கள் அரிதாயினர். ஆயினும் அர்மெனியாவினின்று மற்றக் குருக்கள் வந்தமை யால் கிறிஸ்துவை மறக்கவில்லை. போர்த்துக்கீசியர் வரு கைக்குச் சில ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்கரல் லாத தலைவர்கள் நால்வர் வந்து, மலையாள தேசத்தை நான் கு பாகங்களாகப் பிரித்து, ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு வர் ஆண்டுவர ஏற்பாடு செய்கையில் இருவர் இறந்தனர். 

மற்ற இருவரில் ஒருவர் கொல்லத்திலும், மற்றவர் கரங்க னூரிலும் ஆட்சிபுரிந்தனர். கரங்கனூரில் பதவி ஏற்றவர், அவருக்கு முன் இருந்த அதிகாரிகளைப்போல் கிறிஸ்துவர் களிடமிருந்து பணம் பறிக்க விரும்பவில்லை, வேறு வழிகளில் அவர்களைத் துன்புறுத்தவுமில்லை. கத்தோலிக்கு வேதத்தில் பற்று தலும், குருக்களிடம் அன்பும் உள்ளவராய் இருந்தார். இதனால் போர்த்துக்கீசிய அதிகாரியாகிய நூனோதா கூஞ்ஞா அவருக்கு உ த வி ய ா யி ரு ந் த ார். 

இந்தத் தலைவர் பெயர் அபூனா யாக்கோப். இவரையே பிற்காலத்தில் புனித சவேரியார் சந்தித்தார். அதன் பயனாக அவர் தமது பழைய கோட்பாடுகளைத் தள்ளிவிட்டு, நல்ல மேய்ப்பனின் மந்தை யில் வந்து அடைக்கலம் புகுந்தார். அச்சமயத்தில் அங்கு வாழ்ந்த தோமையார் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் சிதறிப் போ யிருந்தனர். அபூனா யாக்கோப், கத்தோலிக்குக் குருக்க ளாகிய பிரான் சிஸ்கு சபையாருடன் சேர்ந்து, அவர்களை மெய்ம்மறைக்குக் கொண்டுவரப் பெரிதும் உழைத்தார்

அவருக்கு வயது முதிர்ந்தபோது தமது அயரா உழைப்பி னால் பலம் குன்றி, ஒன் றுஞ் செய்ய இயலாதவராய்க் கோவை நகர் போய்ச் சேர்ந்தார் போர்த்துக்கல் அரசனாகிய மூன் ற வது யுவானுக்கு புனித சவேரியார் எழுதிய நிருபத்தில் இவரைப்பற்றி உரைப்ப தா வது : "அவரது பரிசுத்த வாழ்வா லும் புண்ணியங்களாலும் மெய்யாகவே கடவுளை முற்றும் நேசிப்பவர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்" என்பதே.

புனித சவேரியார் கரங்கனூருக்குப் போன போது அதைச் சுற்றிலும் அறுபது கத்தோலிக்குக் கிராமங்களும், பட்டணத்தில் ஒரு குருமடமும் இருந்தன என்று வரலாறு கூறுகிறது.

புனித தோமையார் மலையாள நாட்டில் செய்த செயல்களைக் கவனிப்போம்.