இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச். பிலோமினம்மாளின் இரத்தம் இப்படி கடவுளால் மகிமைப்படுத்தப்படுவது ஏன்?

எத்தனையோ அர்ச்சியசிஷ்டவர்களின் சரீரங்கள் அழியாமல் இருக்கின்றன. அர்ச். பிலோமினம்மாளின் சரீரம் அப்படி இல்லை. அதன் காரணத்தை ஆண்டவரே அறிவார். ஆனால் ஆண்டவர் அர்ச். அந்தோணியாரின் புனித நாவை அழியவிடாமல் மகிமைப்படுத்துவது போல் அர்ச். பிலோமினம்மாளின் புனித இரத்தத்தையும் இந்த அளவிற்கு மகிமைப்படுத்துகிறாரே! ஏன்? ஆண்டவரின் திட்டம் ஏதாயிருக்கலாம்?

வேதசாட்சிகளின் இரத்தம் விசுவாசத்தின் வித்து, திருச்சபையின் இறுதிக்காலப் போராட்டம் இன்று நடை பெறுகிறது. தேவ திருவுளப்படி இப்போராட்டத்திற்கு ஆதி திருச்சபையின் விசுவாசத்தில் விளைந்த வித்தாகிய அர்ச். பிலோமினம்மாளின் இரத்தம் தேவைப்பட்டது. ஆகவே தான் 1500 ஆண்டுகளாக அதை மண்ணில் மறைத்து வைத்து, இன்று ஆண்டவர் அதை மகிமைப்படுத்துகிறார். 

சாத்தானும் அவன் தூதர்களும் பரலோகத்திலிருந்து பூமியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பரலோகத்துக்கு உரியவர்களோ, தாங்கள் செத்தாலும் சரி, உயிரைப் பாரோம் என்று தங்கள் இரத்தத்தைச் சிந்தி சாத்தானை ஜெயிக் கிறார்கள். ஆதலால் பரலோகத்துக்குரியவர்கள் அக மகிழ் கிறார்கள். ஆனால் பூமிக்குரியவர்களாயிருக்கிறவர்களுக்கு ஐயோ கேடு. ஏனென்றால் சாத்தான் தனக்குச் சொற்பக் காலம் மாத்திரம் உண்டென்று அறிந்து ஆங்காரமாய்ப் பூமி யில் இறங்கியிருக்கிறான் என்று காட்சியாகமம் கூறுகிறது (காட்சி 12: 9,11,12). அதாவது உலகம் சாத்தான் வசமாகி விட்டதால் உலகத்துக்குரியவர்களாய் வாழ்கிறவர்களுக்கு ஐயோ கேடாம். இவ்வுண்மையை மனதிற் கொண்டு இக்கால அவிசுவாசத்தை வெல்ல அக்கால விசுவாச வித்தா கிய அர்ச். பிலோமினம்மாள் வரவேண்டியிருக்கிறது.

அர்ச். பிலோமினம்மாள் ஆதி வேத கலாபனைப் போராட்டத்தில் சிந்திய இரத்தம், இவ்விறுதிக் காலப் போராட்டத்தில் மகிமை பெறுகிறதென்றால், இதற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதல்லவா? அவளுடைய இரத்தம் செம்மறிப் புருவையின் இரத்தத்தோடு சேர்ந்து நமக்குத் திடமளித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ வேத சாட்சிகள் இரத்தஞ் சிந்தினார்கள். அவர்களுள் அர்ச். பிலோமி னம்மாளை இவ்வலுவலுக்குத் தேர்ந்து கொண்டது தேவ திருச்சித்தமேயாகும்.

1, 2, 3 ஆகிய தொடக்க கால மூன்று நூற்றாண்டு களில் கடவுளின் எதிரிகள் அவருடைய பிள்ளைகளைப் பத்து வேதகலாபனைகளால் வதைத்தார்கள். திருச்சபை வதைக்கப்பட்டது. அதிலே விளைந்த விசுவாச முத்து அர்ச். பிலோமினம்மாள். இப்பொழுது 19, 20, 21, ஆகிய இறுதிக் கால மூன்று நூற்றாண்டுகளில், எதிரிகள் மீண்டும் கடவுளின் பிள்ளைகளை நாஸ்தீக, நவீனப் பதிதங்களால் வதைக்கிறார்கள். திருச்சபை வதைக்கப்படுகிறது. இந்தப் பிந்திய வேதகலாபனையில், முந்திய வேதகலாபனையில் விளைந்த விசுவாச முத்தாகிய பிலோமினம்மாளைக் கொண்டு கடவுள் தன் திருச்சபையின் பிள்ளைகளை இரட் சிக்கிறார்; திருந்தாத தீயவர்களைத் தண்டிக்கிறார்.

இதற்கெனவே அர்ச். பிலோமினம்மாளுக்கு அசாதா ரண வரங்களையும், திடத்தையும் ஆண்டவர் கொடுத்திருக் கிறார். அவளுடைய உயிருள்ள இரத்தம் அற்புத அதிசயங் களை ஆற்றி வருகிறது.

அர்ச். பிலோமினம்மாளின் அலுவல் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அதை அவள் வெற்றிகரமாக முடித்து, ஆண்டவருக்கும், மாதாவுக்கும் மகிமையளிப்பதோடு, எண்ணற்ற ஆன்மாக்களையும் பாதுகாப்பாள். அவளுடன் நாம் அனைவரும் ஒத்துழைக்க அழைக்கப்படுகிறோம். கத்தோலிக்க விசுவாசிகள் இந்த அழைப்பை ஏற்று, ஜெப மாலை என்னும் ஆயுதத்தையும், உத்தரியம் என்னும் கேடயத் தையும் தரித்துக்கொண்டு தேவதாயின் மிக விருப்ப முள்ளவளும் மாதாவின் எல்லாப் புதல்விகளிலும் சிறந்த புதல்வியுமாக விளங்குகிற கன்னி வேதசாட்சி அர்ச். பிலோமி னம்மாளுடன் தம்மை இணைத்துக்கொண்டு இவ்விறுதிக் காலப்போராட்டத்தில் தைரியமாய் ஆர்வத்துடன் இறங்க வேண்டும்.