தெய்வீக ஞானமானவரை அடையும் நான்காவது வழி: தேவதாய் கன்னிமாமரியின் மீது நேசமுள்ள, உண்மையான பக்தி!

203. தேவ ஞானத்தைப் பெறவும், பாதுகாத்துக் கொள்ளவும் அனைத்திலும் மேலானதும், எல்லா இரகசியங்களிலும் அதிக அற்புதமானதுமாகிய வழி, மகா பரிசுத்த கன்னிகையின் மீது நாம் கொள்ளும் நேசமிக்கதும், உண்மையானதுமான பக்தியாகும்.

மரியாயின் மீது உண்மையான பக்தி கொள்வதன் அவசியம்

மாமரியைத் தவிர, தனக்கும், மனுக்குலம் முழுவதற்குமாக, சர்வேசுரனிடத்தில் கிருபை பெற்றவர்கள் வேறு யாருமில்லை (லூக் 1:30). நித்திய ஞானமானவரைக் கருத்தாங்கிப் பெற்றெடுக்கும் வல்லமை வேறு யாருக்கும் அருளப்படவில்லை. முன்கூட்டியே நியமம் செய்யப்பட்ட படி, பரிசுத்த ஆவியானவரின் செயலால், அவரை "மனிதனாக அவதரிக்கச் செய்யும் வல்லமை வேறு யாருக்கும் இருக்கவில்லை.

பழைய ஏற்பாட்டின் பிதாப்பிதாக்களும், தீர்க்கதரிசிகளும், புனிதர்களும் நித்திய ஞானமானவரின் மனித அவதாரத்திற்காக ஏங்கினார், ஜெபித்தனர். ஆனால் அவர்களில் யாரும் அதற்குப் பேறு பெற முடியவில்லை. மாமரி மட்டுமே, தனது உயர்த்தப் பட்ட பரிசுத்ததனத்தால் தெய்வீகத்தின் சிங்காசனத்தை அடைய வும், அளவற்ற மதிப்புள்ள இந்தக் கொடையை சுதந்தரித்துக் கொள்ளவும் முடிந்தது.

அவர்கள் தெய்வீக ஞானமானவரின் தாயாராகவும், எஜமானியாகவும், அவருடைய அமல பத்திராசனமாகவும் ஆனார்கள். 

204. மாமரி கடவுளின் மிகவும் தகுதியுள்ள தாயாராக இருக் கிறார்கள். ஏனெனில் அவர்கள் அவரைத் தன் திருவுதரத்தின் கனியாகக் கருத்தாங்கிப் பெற்றெடுத்தார்கள். ''உம்முடைய திருவுதரத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே" (லூக். 142).

இதன் காரணமாக, சேசுநாதர் மோட்சத்திலோ, பூமியிலோ, நம் தேவநற்கருணைப் பேழைகளிலோ, அல்லது நம் இருதயங் களிலோ, எங்கிருந்தாலும் அவர் மாமரியின் கனியாகவே இருக் கிறார் என்பது சாத்தியமாக இருக்கிறது. மாமரி மட்டுமே ஜீவியத்தின் மரமாக இருக்கிறார். சேசுநாதர் மட்டுமே அந்த மரத்தின் கனியாக இருக்கிறார்.

ஆகவே, இந்த அற்புதமான கனியைத் தன் இருதயத்தில் கொண்டிருக்க விரும்பும் எவனும் முதலில் அதை விளைவிக்கிற மரத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். சேசுவைச் சொந்தமாகக் கொண்டிருக்க விரும்பும் யாரும் மாமரியைச் சொந்தமாகக் கொண்டிருக்க வேண்டும். 

205. மாமரி தேவ ஞானமானவரின் எஜமானியாகவும் இருக் கிறார்கள். மெய்யங்கடவுளாக இருக்கிற அவருக்கு மாமரி மேற் பட்டவர்கள், அல்லது அவருக்கு சமமானவர்கள் என்பது இதன் பொருளல்ல. அப்படிச் சொல்வதோ, நினைப்பதோ ஒரு தேவ தூஷணமாகவே இருக்கும். ஆனால் நித்திய ஞானமாகிய கடவுளின் திருச்சுதனானவர், தமது தாயார் என்ற முறையில், தம் அன்னைக்குத் தம்மைக் கீழ்ப்படுத்திக் கொண்டு, தம்மீது அவர்களுக்குத் தாய்க்குரிய , சுபாவமான அதிகாரத்தைத் தந்திருக் கிறார் என்பதால், மாமரி கிறீஸ்துநாதரின் எஜமானியாக இருக் கிறார்கள். இது நம் புத்திக்கு எட்டாத காரியம். தாம் இந்த பூமியில் வாழ்ந்த போது மட்டும் அவர் இந்த அதிகாரத்தை அவர்களுக்குத் தரவில்லை, மாறாக, இப்போது மோட்சத்திலும் கூட, அவர் அதை அவர்களுக்குத் தருகிறார். ஏனெனில் மகிமையானது சுபாவத்தை அழித்து விடுவதில்லை, மாறாக அது அதை உத்தமமானதாக்குகிறது. ஆகவே மோட்சத்திலும் கூட சேசுநாதர் மாமரியின் திருக்குமாரனாகவும், மாமரி சேசுநாதரின் திருமாதாவாகவுமே இருக்கிறார்கள்.

அவருடைய திருத்தாயார் என்ற முறையில் மாமரி சேசுவின் மீது அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். அவரும் தமது சொந்த சித்தத்தின்படி, ஒரு விதத்தில் அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருக் கிறார். மாமரி தன் வல்லமையுள்ள ஜெபங்களாலும், தான் கடவுளின் தாயாராக இருப்பதாலும், தான் விரும்பும் அனைத் தையும் சேசுவிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். அவர்கள் தான் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவனுக்கு சேசுவைத் தருகிறார்கள். தான் தேர்ந்து கொள்ளும் ஆத்துமங்களில் ஒவ்வொரு நாளும் அவரை உருவாக்குகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். 

206. மாமரியின் உபகாரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் பேறுபெற்றவர்கள் ! தாங்கள் விரைவில் தேவ ஞானமானவரைச் சொந்தமாகக் கொண்டிருப்பார்கள் என்பதில் அவர்கள் நிச்சயமாயிருக்கலாம். ஏனெனில், தன்னை நேசிப்பவர்களை மாமரி நேசிப்பது போலவே (பழ.8.17 காண்க), அவர்களோடு தன் ஆசீர்வாதங்களையும் வெகு தாராளமாகப் பகிர்ந்து கொள் கிறார்கள். இந்த ஆசீர்வாதங்களில், எல்லா நன்மைகளையும் தன்னுள் அடக்கியுள்ள அளவற்ற பொக்கிஷமும், அவர்களது திருவதரத்தின் கனியுமாகிய சேசுவும் அடங்குவார். 

207. மாமரி ஒரு விதத்தில் மனிதனாக அவதரித்த ஞானமான வரின் எஜமானியாக இருக்கிறார்கள் என்பது உண்மை என்றால், கடவுளின் சகல வரப்பிரசாதங்களின் மீதும் கொடைகளின் மீதும் அவர்கள் எத்தகைய அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும், தான் யாரைத் தெரிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவற்றைத் தருவதற்கு அவர்கள் எத்தகைய சுதந்திரத்தைக் கொண் டிருக்க வேண்டும் !

மாமரி சர்வேசுரனுடைய சகல இலட்சணங்களின் பெருங் கடலாகவும், அவருடைய சகல உடைமைகளின் மாபெரும் சேமிப்புக் கிடங்காகவும், ஆண்டவருடைய வற்றாத கருவூல மாகவும், அவரது சகல வரங்களின் பொக்கிஷதாரியாகவும், அவற்றைப் பகிர்ந்தளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று திருச்சபைத் தந்தையர்கள் கூறுகிறார்கள்.

கடவுள் தம் ஏக சுதனையே அவர்களுக்குத் தந்ததால், அவருடைய எல்லாக் கொடைகளையும் அவர்கள் வழியாகவே நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதும், ஒரு வாய்க்கால் வழியாக வருவது போல, எந்தப் பரலோகக் கொடையும் அவர்கள் வழியாக அன்றி, பூமிக்கு வருவதில்லை என்பதும் அவருடைய சித்தமாக இருக்கிறது.

மாமரியின் நிறைவிலிருந்து நாம் அனைவரும் பெற்றுக் கொண்டோம். நாம் சொந்தமாகக் கொண்டிருக்கும் எந்த ஒரு வரமும், அல்லது இரட்சணியத்தைப் பற்றிய நம்பிக்கையும், கடவுளிடமிருந்து மாமரி வழியாக நமக்கு வரும் கொடையாகவே இருக்கிறது. எந்த அளவுக்கு அவர்கள் மெய்யாகவே கடவுளின் உடைமைகளின் எஜமானியாக இருக்கிறார்கள் என்றால், தான் யாரை சித்தங்கொள்கிறார்களோ, அவர்களுக்குக் கடவுளின் சகல வரப்பிரசாதங்களையும், சேசுக்கிறீஸ்துநாதருடைய சகல புண்ணி யங்களையும், பரிசுத்த ஆவியானவருடைய சகல கொடை களையும், சுபாவமான ஒவ்வொரு நற்காரியத்தையும், வரப்பிர சாதத்தையும், மகிமையையும் மாமரி தருகிறார்கள். இதுவே திருச்சபைத் தந்தையரின் சிந்தனையாக இருக்கிறது. சுருக்கம் கருதி, அவர்களுடைய வார்த்தைகளை நான் இங்கு மேற்கோள் காட்டவில்லை.

ஆனால் இந்த நம் அன்பிற்கு முற்றும் உரியவர்களும், நம் இராக்கினியுமாகிய அன்னை மாமரி , என்னதான் மாபெரும் கொடைகளை நம் மீது பொழிந்தாலும், மனிதனாய் அவதரித்த ஞானமாகிய தன் திருக்குமாரனை நமக்குத் தரும் வரையில் திருப்தியடைவதேயில்லை. ஞானமானவருக்குத் தகுதியுள்ளவ னாகிய எவனுக்கும் (ஞான. 617) அவரைத் தரும்படி அப்படிப் பட்டவன் எவனாவது இருக்கிறானா என்று அவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

208. மேலும், மாமரி நித்திய ஞானமானவரின் இராஜரீக சிம்மாசனமாகவும் இருக்கிறார்கள். அவர்களில் தான் அவர் தம் உத்தமதானத்தைக் காட்டுகிறார், தம் பொக்கிஷங்களைப் பார்வைக்கு வைக்கிறார், அவர்களில் தான் அவர் தம் மகிழ்ச்சி யைக் கண்டடைகிறார். ஒப்பற்றவர்களாகிய கன்னிமாமரியிட மாய் அன்றி, பரலோகத்திலும் சரி, பூலோகத்திலும் சரி, நித்திய ஞானமானவர் தமது அளவற்ற மகத்துவத்தை வெளிப்படுத்து வதும், அதிக இன்பம் காண்பதுமாகிய வேறு இடம் எதுவு மில்லை .

அதனால் தான் திருச்சபைத் தந்தையர் மாமரியைத் தெய்வீகத்தின் கூடாரம், இளைப்பாற்றியின் ஸ்தலம், மகா பரிசுத்த தமத்திரித்துவத்தின் பூரண மகிழ்வு, கடவுளின் சிம்மாசனம், கடவுளின் திருநகரம், கடவுளின் பலிபீடம், கடவு ளின் தேவாலயம், கடவுளின் உலகம் மற்றும் கடவுளின் மோட்சம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். மாமரியில் கடவுள் நிகழ்த்தி யுள்ள பல்வேறு அற்புதங்களின் அடிப்படையில், இந்த எல்லாப் பெயர்களும் அவர்களுக்கு முற்றிலும் பொருத்தமானவையாக இருக்கின்றன. 

209. ஆகவே, மாமரியின் வழியாக மட்டுமே தேவ ஞானமான வரை நாம் சுதந்தரித்துக் கொள்ள முடியும்.

ஆனாலும், இந்த மாபெரும் கொடையை நாம் பெற்றுக் கொண்டால், அவரை எங்கே தங்க வைப்போம், யாருடைய திருச்சன்னதியில் சூரியனின் ஒளிக்கதிர்களும் கூட வெறும் தூசியும், இருளுமாக இருக்கிறதோ, அந்த நம்முடைய பேரரசருக்கு நாம் தரக்கூடிய வாசஸ்தலம், ஆசனம், சிங்காசனம் நம்மிடம் என்ன இருக்கிறது? இதற்குப் பதில் மொழியாக, அவர் நம் இருதயத்தை மட்டுமே கேட்கிறார் என்றும், நம் இருதயத்தை நாம் அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்றும், அதில்தான் அவரை நாம் தங்க வைக்க வேண்டும் என்றும் நமக்குச் சொல்லப் படுவதை நாம் கேட்கிறோம்.

ஆயினும், நம் இருதயம் கறைபட்டும், மாம்சதன்மையுள்ள தாகவும், ஒழுங்கற்ற நாட்டங்கள் நிறைந்ததாகவும், அதன் விளைவாக, இப்பேர்ப்பட்ட மகத்துவமிக்கவரும், பரிசுத்தருமான விருந்தாளியைத் தங்க வைக்க அது முற்றிலும் தகுதியற்றதாகவும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். நம் சொந்த இருதயத்தைப் போல் ஓராயிரம் இருதயங்கள் நமக்கு இருந்து, அவற்றில் ஒன்றைத் தமது சிம்மாசனமாகத் தேர்ந்து கொள்ளும்படி நாம் அவரிடம் கூறுவோம் என்றால், நம் காணிக்கையை அவர் சரியான முறையில் மறுத்து ஒதுக்குவார், நம் மன்றாட்டுக்களுக்கு செவிசாய்க்க மாட்டார். இவ்வளவு அசுத்தங்கள் நிறைந்ததும், தமது அரச மகத்துவத்திற்கு எந்த விதத்திலும் தகுதியற்றதுமாகிய ஓரிடத்தில் அவரைத் தங்க வைக்க நாம் விரும்புவதில் நாம் காட்டும் துணிச்சலையும், நம் ஆணவத்தையும் பற்றி அவர் நம்மைக் குற்றஞ்சாட்டவும் செய்வார். 

211. அப்படியானால் நம் இருதயங்களை அவருக்குத் தகுதி யுள்ளவையாக்க நாம் என்ன செய்ய முடியும்? இதோ ஒரு மாபெரும் வழி, ஓர் அற்புத இரகசியம். நாம் மாமரியின் ஊழியர் களாகவும், அடிமைகளாகவும் இருக்கும்படியாக, எந்த நிபந்தனை யுமின்றி நம்மை முழுவதுமாக அவர்களுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நம் இருதயமாகிய இல்லத்திற்குள் அவர்களை வரவழைப் போமாக. நமக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், நமக்குச் சொந்தமான அனைத்தையும், நாம் மிக அதிகமாக மதிக்கும் காரியங்களையும் கூட அவர்களிடம் கையளித்து விடுவோம். தாராள குணத்தில் தன்னை யாரும் விஞ்சி விட ஒரு போதும் அனுமதியாத நம்முடைய இந்த நல்ல எஜமானி, ஒரு நிஜமான், ஆனால் விவரிக்க முடியாத விதத்தில் தன்னையே நமக்குத் தருவார்கள் அதன்பின் அவர்களில் நித்திய ஞானமானவர் நமக்குள் வந்து, மகத்துவமுள்ள ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல நம் இருதயத்தில் வீற்றிருப்பார். 

212. மாமரி நித்திய ஞானமானவரால் எதிர்த்து நிற்கக் கூடாத அளவுக்கு மிகுந்த வல்லமையோடு அவரைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்ளும் ஒரு பரிசுத்தமான காந்தத்தைப் போல் இருக் கிறார்கள். மனுக்குலத்தை அவர் மீட்டு இரட்சிக்கும்படி, இந்தக் காந்தமே பரலோகத்திலிருந்து அவரை பூலோகத்திற்கு இழுத்து வந்தது. அதுவே தன்னைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு நாளும் அவரைத் தொடர்ந்து இழுத்து வருகிறது. நாம் அன்னை மாமரியை நம் சொந்தமாக்கிக் கொண்டதும், அவர்களுடைய மன்றாட்டின் வழியாக, எளிதாகவும், குறுகிய காலத்திலும் தேவ ஞானமான வரை நம் சொந்தமாக்கிக் கொள்வோம்.

சேசுக்கிறீஸ்துநாதரை சுதந்தரித்துக் கொள்ளும் எல்லா வழிகளிலும் மாமரியே மிக நிச்சயமானதும், மிக எளிதானதும், மிகக் குறுகியதும், மிகப் பரிசுத்தமானதுமான வழியாக இருக் கிறார்கள். மற்றவர்கள் கேட்டாலே அச்சப்படும் மிகக் கடுமை யான தவ முயற்சிகளை நாம் செய்யலாம், மிகுந்த வேதனையும் சோர்வும் தரும் திருயாத்திரைகளை மேற்கொள்ளலாம், முற்றிலு மாகச் சோர்ந்து போகச் செய்யும் அலுவல்களில் ஈடுபடலாம், தேவ ஞானமானவரைச் சொந்தமாக்கிக் கொள்ளும்படி நம் இரத்தம் முழுவதும் சிந்தவும் முன்வரலாம். இவ்வளவையும் நாம் செய்தாலும், மகா பரிசுத்த கன்னிகையின் மன்றாட்டாலும், அவர்கள் மீது நமக்குள்ள ஓர் உண்மை பக்தியாலும் இவை ஆதரிக்கப்படாவிட்டால், இந்த நம் எல்லா முயற்சிகளும் பயனற்றவையாகவும், போதாதவையாகவுமே இருக்கும். ஆனால் மாமரி நமக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்வார்கள் என்றால், நாம் அவர்களை நேசித்து, நாம் அவர்களது பிரமாணிக்கமுள்ள ஊழியர்களும், அவர்களைக் கண்டுபாவிப்பவர்களுமாக இருக் கிறோம் என்பதை எண்பிப்போம் என்றால், விரைவாகவும், அதிக சிரமமின்றியும் தேவ ஞானமானவரை நாம் சுதந்தரித்துக் கொள்வோம். 

213. மாமரி சேசுநாதருடைய திருமாதாவாகவும், தெரிந்து கொள்ளப்பட்ட அனைவருடையவும் இராக்கினியாகவும் இருப்பது மட்டுமின்றி, அவர்கள் அவருடைய எல்லா உறுப்பினர்களுடைய தாயாராகவும் இருக்கிறார்கள். இவ்வாறு மாமரியே அவர்களைக் கருத்தாங்கித் தன் திருவுதரத்தில் சுமந்து, அவர்கள் மீது தான் பொழிகிற கடவுளின் வரப்பிரசாதங்களின் வழியாகப் பரலோக மகிமைக்கு அவர்களைப் பெற்றெடுக் கிறார்கள். அர்ச். அகுஸ்தீனார் உட்பட, அநேக திருச்சபைத் தந்தையரின் போதனை இதுவே. தெரிந்து கொள்ளப்பட்ட வர்கள், மாமரிபரலோக மகிமைக்குத் தங்களைப் பெற்றெடுக்கும் வரை, அவர்களுடைய திருவுதரத்தில் இருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். மேலும், மாமரி யாக்கோபில் தங்கியிருக்க வேண்டு மென்றும், இஸ்ராயேலைத்தான் உரிமைச் சொத்தாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களிலும், முன் குறிக்கப்பட்டவர்களிலும் அவர்கள் வேரூன்ற வேண்டுமென்றும் கடவுளே நியமம் செய்திருக்கிறார் (சீராக். 24:13). 

214. இந்த சத்தியங்களிலிருந்து, நாம் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறோம்

1. நாம் மரியாயின் குழந்தைகளாக இல்லாவிடில், நாம் கடவுளின் மக்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வது பயனற்றதாகவே இருக்கும்.

2. தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் நாமும் ஒருவராக இருப்பதற்கு நாம் நம் இராக்கினியிடம் நேசமிக்கவும், உண்மை யுள்ளதுமான பக்தி கொண்டிருக்க வேண்டும். அப்போது அவர்கள் நம்மில் தங்கியிருந்து, தன் புண்ணியங்களால் நம்மில் வேரூன்றுவார்கள்.

3. மாமரி சேசுக்கிறீஸ்துநாதரில் நம்மையும், நம்மில் சேசுக்கிறீஸ்துநாதரையும் ஈன்றெடுத்து, அவரது பயதின் முழுமை மற்றும் நிறைவை நோக்கி நம்மைப் போஷித்து வளர்க்க வேண்டும். அப்போது, மாமரி , அர்ச். சின்னப்பரை விட அதிக உண்மையுள்ள விதமாக, "என் சிறு பிள்ளைகளே, கிறீஸ்துநாதர் உங்களில் உருவாகுமட்டும் நான் மறுபடியும் பிரசவ வேதனைப் படுகிறேன்" என்று சொல்ல முடியும் (கலாத் 4:19).