இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

துக்கத் தேவ இரகசியங்கள்

6-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! ஒலிவ தோட்டத்தில் நீர் பட்ட மரண அவஸ்தையின் மகிமைக்காக இந்த 6ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் எங்கள் பாவங்களுக்கு உத்தம மனஸ்தாபத்தையும் உமது சித்தத்துக்கு உத்தம கீழ்ப்படிதலையும் எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

நமதாண்டவரின் மரண அவஸ்தையின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி நான் என் உண்மையான துயரப்படவும் தேவ சித்தத்துக்கு முழுவதும் பணிந்திருக்கவும் செய்யுமாக

7-ம் பத்து மணி ! ஆண்டவராகிய சேசுவே! நீர் கசையால் அடிபட்டு இரத்தம் சிந்தியதன் மகிமைக்காக இந்த 7-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் எங்கள் புலன்களை அடக்கும் வரத்தை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

நமதாண்டவர் அடிபட்டதன் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி நான் உண்மையான பரித்தியாகம் செய்யத் தூண்டுவதாக

8-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! நீர் மிகக் கொடுமையாய் முள் முடி சூட்டப்பட்டதன் மகிமைக்காக இந்த 8-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியினாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் இவ்வுலகத்தின் மீது பெரும் வெறுப்பை எங்களுக்குத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

நமதாண்டவர் முள் முடி சூட்டப்பட்ட திருநிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி நான் இவ்வுலகை வெறுக்கச் செய்வதாக.

9-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! நீர் சிலுவை சுமந்து சென்றதன் மகிமைக்காக இந்த 9-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியினாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் உம்மைப் பின் செல்லும் பாதையில் எங்கள் சிலுவையை மிகப் பொறுமையுடன் சுமக்கும் வரத்தை எங்களுக்குத் தரும்படி மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், ஒரு திரி.

நமதாண்டவர் சிலுவை சுமந்த திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி நான் உண்மையாகவே பொறுமையுடன் இருக்கச் செய்வதாக.

10-ம் பத்து மணி : ஆண்டவராகிய சேசுவே! கல்வாரி மலையில் நீர் சிலுவையில் அறையப்பட்டதன் மகிமைக்காக இந்த 10-ம் பத்து மணி ஜெபத்தை ஒப்புக் கொடுக்கிறோம். இத்திரு நிகழ்ச்சியாலும் உமது மிகப் புனித அன்னையின் வேண்டுதலாலும் பாவத்தின் மீதும் பெரும் வெறுப்பையும், சிலுவையின் மேல் விருப்பத்தையும், இன்னும் நல் மரண வரத்தையும், எங்களுக்கும் மரணத் தறுவாயிலிருப்பவர் களுக்கும் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

ஒரு பர, 10 அருள், 1 திரி.

நமதாண்டவரும் இரட்சகருமாகிய சேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம் என்னும் திரு நிகழ்ச்சியின் திருவருள் என் உள்ளத்துள் இறங்கி என்னைப் புனிதப்படுத்துவதாக,