இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

கடவுளின் மனித அவதாரத்தில் மரியாயைப் பயன்படுத்த அவர் சித்தங்கொண்டார்

16. பிதாவாகிய சர்வேசுரன் தம் ஏக திருக்குமாரனை மாதா வழியாகவே உலகிற்குக் கொடுத்தார். பிதாப் பிதாக்கள் எத்துணையோ பெருமூச்சு விட்டுக் கேட்டிருக்கலாம். நாலாயிரம் ஆண்டுகளாக தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டின் அர்ச்சிஷ்டவர்களும் அந்தத் திரவியத்தைப் பெற என்னென்ன மன்றாட்டுகளோ செய்திருக்கலாம். ஆனால் மாதா மட்டுமே தன் வேண்டுதல்களின் வலிமையாலும் தன் புண்ணியங்களின் உயர்வாலும் அதனைப் பெறக் கூடிய தகுதியையும் கடவுளின் அருளையும் பெற்றார்கள். தேவ குமாரனை தேவனுடைய கரத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ள உலகம் தகுதி பெற்றிருக்கவில்லை; எனவே கடவுள் தம் குமாரனை மரியாயிடம் கொடுத்து அவர்கள் வழியாக உலகம் அவரைப் பெற்றுக் கொள்ளச் செய்தார் என்று அர்ச். அகுஸ் தீன் கூறியுள்ளார்.

நம் மீட்புக்காக தேவ குமாரன் மனிதனானார், ஆனால் மரியாயிடத்திலும் மரியாயின் வழியாகவுமே. சேசுகிறீஸ்துவை மரியாயிடம் பரிசுத்த ஆவி உரு வாக்கினார் - ஆனால் மரியாயின் சம்மதத்தை, தம் அணிக ளில் முதன்மை வாய்ந்த ஒரு தூதரை அனுப்பிக் கேட்ட பிறகே அவ்வாறு செய்தார்.

17. கடவுள் தமது பிறப்பிக்கும் வளமையை கன்னி மரிக்குத் தந்தார். ஒரு சிருஷ்டி எந்த அளவுக்குப் பெற் றுக் கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு அதைத் தத் தார். தம் திருக்குமாரனையும் அவருடைய ஞான சரீரத் தின் உறுப்பினர்கள் அனைவரையும் பிறப்பிக்க மாதா வுக்கு உதவும்படியாக அப்படிச் செய்தார்.

18. தன் பூவுலக மோட்சத்திற்கு வரும் புதிய ஆதாமாக கடவுளின் திருச்சுதன் மரியாயின் கன்னி யுதரத்தில் வந்தார். அங்கு தன் மகிழ்ச்சியைக் காணவும் வரப்பிரசாத - அற்புதங்களை நிகழ்த்தவும் இரகசியமாய் வந்தார். மனிதனான இறைவன் மரியாயின் திரு உத் ரத்தில் அடைபட்டிருப்பதில் தம் சுயாதீனத்தைக் கண் டார். இச் சிறு மங்கையால் சுமந்து செல்லப்பட தன்னை அனுமதித்ததில் அவர் தம் வல்லமையை வெளிப்படுத் தினார். தம் மாட்சிமைகளை இங்குள்ள எல்லா சிருஷ்டி களிடமிருந்தும் மறைத்து அவற்றை மாமரிக்கு மட்டுமே வெளிப்படுத்துவதில் அவர் தம்முடையவும் தம் பிதாவும் டையவும் மகிமையைக் கண்டார். அவர் தம் உற்பவத் திலும் பிறப்பிலும் கோவிலில் காணிக்கையாக்கப்பட்ட திலும், முப்பது ஆண்டுகள் மறைந்து வாழ்ந்ததிலும் இவ்வன்புக்குரிய கன்னிகையை நாடி சார்ந்திருப்பதி லேயே தமது சுயாதீனத்தையும் மகத்துவத்தையும் மகி மைப்படுத்திக் கொண்டார். அவர் தம் தாய் மரியா யுடன் ஒரே பலியை ஒப்புக் கொடுக்கவும், தம் மர ணத்தின் போது அவ்வன்னையும் உடனிருந்து - ஆபிரகா மின் சம்மதத்துடன் ஈசாக் முன்பு பலியிடப்பட்டதைப் போல் - இறைவன் சித்தத்துக்கு மரியாயின் சம்மதத்துடன் நித்திய பிதாவுக்கு தாம் பலியாக்கப்படவும் விரும்பினார். அவருக்கு அமுதூட்டி உணவு தந்து காப்பாற்றி வளர்த்து நமக்காக அவரைப் பலியிட்டது மாமரியே.

ஓ வியக்கத்தக்கதும் கண்டறியக் கூடாததுமான கட வுளின் சிருஷ்டி சார்புடைமையே! மனிதாவதாரமெடுத்த தெய்வ ஞானமானவர் தம்முடைய மறைந்த வாழ்க்கை யில் செய்த ஏறக்குறைய எல்லா ஆச்சரியமான காரி யங்களையும் நம்மிடமிருந்து மறைத்துக் கொண்ட பரி சுத்த ஆவி, இந்த ஒன்றை மட்டும் சுவிசேஷத்தில் கூறா மல் விட முடியவில்லையே! இதன் மதிப்பையும் மகிமை யையும் நமக்குக் காட்டும்படியாகவே அவ்வாறு அவர் செய்துள்ளார். சேசுக்கிறிஸ்து மிகப் பெரும் அற்புதங் களைச் செய்து உலக முழுவதையும் மனந்திருப்பியிருந் தால் தம் பிதாவுக்கு எவ்வளவு மகிமை கொடுத்திருப் பாரோ அதைவிட அதிக மகிமையை, முப்பது வருடம் தம் அன்னைக்குக் கீழ்ப்படிந்ததால் கொடுத்தார். நம் ஒரே முன்மாதிரிகையான சேசுகிறீஸ்து நமக்குக் காட்டி யது போல் நாமும் கடவுளுக்குப் பிரியப்படும்படி மாமரி அன்னைக்குக் கீழ்ப்படியும் போது, ஓ எவ்வளவு அதிக மான மகிமையை நாம் அவருக்கு அளிக்கிறோம்!

19. சேசு கிறிஸ்துவின் (மறைந்த வாழ்க்கை போக) எஞ்சிய வாழ்க்கையை நுணுகி ஆராயும் போது அவர் தமது அற்புதங்களை மரியாயின் வழியாக ஆரம்பிக்க விரும்பினார் என்று தெரிகிறது. மாதா கூறிய வார்த் தையைக் கொண்டு எலிசபெத்தம்மாளின் உதரத்திலி ருந்த அர்ச். ஸ்நாபக அருளப்பரை அவர் அர்ச்சித்தார். மாதா பேசத்தொடங்கியதுமே அரு ளப் பர் அர்ச்சிப் படைந்தார். வரப்பிரசாத நிலையில் இதுவே சேசு இயற்றிய முதல் புதுமையும் முதன்மையான புதுமையும் மாகும். கானாவூர் கலியாண விழாவில் அன்னையின் தாழ்வான வேண்டுகோளினிமித்தம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார். இயற்கை நிலையில் இதுவே அவர் இயற்றிய முதல் புதுமை. சேசு தம் அற்புதங்களை ஆரம்பித்ததும், தொடர்ந்து செய்ததும் மரியாயின் வழி யாகவே. இன்னும் கால முடிவு வரையிலும் அவர் அவ்வன்னை வழியாகவே அவற்றைச் செய்து வருவார்.

20. தமதிரித்துவ சர்வேசுரனிடத்தில் கூடுதலாக ஒரு தேவ ஆளை பரிசுத்த ஆவியானவர் பிறப்பிக்க முடியாது; இம்முறையில் அவர் இறைவனில் வளமற்றவராயிருக் கிறார். ஆனால் அவர் தம் பத்தினியாக ஏற்றுக்கொண்ட மாமரியால் வளமுடையவரானார். மரியாயுடன், மரியா யிடமிருந்து, மாமரியாலே தம் தலைசிறந்த படைப்பான தேவமனிதனைப் பிறப்பித்தார். இந்த ஆராதனைக்குரிய சிரசின் ஞான சரீரத்தின் அங்கங்களான முன் குறிக் கப்பட்டவர்களையும் மரியாயிடமாய், மரியாவுடன் கால எல்லை வரையிலும் தினம் தினம் அவர் பிறப்பித்து வருகிறார். இதன் காரணமாகவே பரிசுத்த ஆவியானவர், தம்மை விட்டுப் பிரிக்க முடியாத தம் நேச பத்தினி யான மரியாயை எந்த அளவுக்கு ஒரு ஆன்மாவில் காண்கிறாரோ அந்த அளவுக்கு சேசு கிறிஸ்துவை அந்த ஆன்மாவில் பிறப்பிப்பதற்கும், அந்த ஆன்மாவை சேசுவில் பிறப்பிப்பதற்கும் முயற்சியாயிருந்து அதிக வல்லமையுடன் செயல்படுகின்றார்.

21. இதனால் பரிசுத்த ஆவிக்கு, பிறப்பிக்கும் வளம் இல்லையென்றும் பரிசுத்த கன்னிமரியே அவருக்கு சுதனை வழங்குவதாகவும் அர்த்தமில்லை. ஏனென்றால் பரிசுத்த ஆவி கடவுளாயிருப்பதால் பிதாவைப் போலவும் சுதனைப் போலவும் பிறப்பிக்கும் தன்மை கொண்டிருக்கிறார். இத்தன்மையை அவர் செயல்படுத்துவதில்லை - இன்னொரு தேவ ஆளை அவர் பிறப்பிப்பதில்லையென்பதால். ஆனால் இப்பிறப்பிக்கும் தன்மையை பரிசுத்த கன்னிமரியாயின் வழியாக செயல்படுத்துகிறார். இதிலே கன்னிமரியம்மாள் அவருக்கு இன்றியமையாத தேவையாக இல்லை. ஆயினும் மரியாயின் துணை கொண்டு, மரியாயிடம் மரியாய் வழியாக சேசு கிறீஸ்துவையும் அவருடைய அங்கங்க ளாயிருப்பவர்களையும் பிறப்பிக்கிறார். இது வரப்பிரசா தத்தின் மறைந்த ஒரு திருநிகழ்ச்சி. மிகக் கற்றுத் தேர்ந்த, ஆன்மீக உணர்வுடைய கிறீஸ்தவர்களுக்குக் கூட இது எட்டாத மறைபொருளாகும்.