தன்னை ஆபத்திற்கு உள்ளாக்குதல்

கால்களிலும், கரங்களிலும், இருதயங்களிலும் கூட இப்படிக் காயப்பட்டவர்களாய்ச் சிறுவர்கள் கீழே கிடப்பதைக் கண்டு துக்கப் பட்டவனாக, “நீங்கள் காயப்படும்போதும், ஏன் அந்தக் குழிக்கு மேலாகத் தாண்டிக் குதித்துக் கொண்டே இருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டேன்.

“நாங்கள் தாண்டுவதில் இன்னும் போதிய திறமையுள்ளவர் களாக இல்லை ” என்று ஒரு பெருமூச்சோடு அவர்கள் பதில் தந்தனர்.

“அப்படியானால் நீங்கள் தாண்டிக் குதித்திருக்கவே கூடாது.”

“அதைச் செய்யாமலிருக்க எங்களால் முடியவில்லை. நாங்கள் தாண்டுவதில் சிறந்தவர்கள் இல்லை. மேலும், இது இவ்வளவு ஆபத்தானதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்க வில்லை .”

குறிப்பாக ஒரு சிறுவன் நிஜமாகவே என்னை அதிரச் செய்தான். அவன்தான் எனக்குச் சுட்டிக் காட்டப்பட்டவன். தனது இரண்டாவது தாண்டுதலில் அவன் தோல்வியடைந்து அந்தப் படுகுழிக்குள் விழுந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் நிலக்கரியைப் போல கறுப்பாக வெளியே உமிழப்பட்டான். ஆனாலும் இன்னும் அவனுக்கு மூச்சிருந்தது. அவனால் பேசவும் முடிந்தது. நாங்கள் எல்லோரும் கடும் அச்சத்தோடு அவனை உற்றுப்பார்த்தபடி, தொடர்ந்து அவனிடம் கேள்விகள் கேட்டுக் கொண் டிருந்தோம்.

ரூஃபினோ காலக்கிரமப் பதிவேடு இதற்கு மேல் இந்தக் கனவைப் பற்றி வேறொன்றும் சொல்லவில்லை. கனவின் விளக்கத் தைப் பற்றியும், எச்சரிப்புள்ள அறிவுரைகளைப் பற்றியும் அது முற்றிலுமாக மௌனம் சாதிக்கிறது. இந்த விளக்கங்கள், குறிப்பாக ஒரு புதிய பள்ளியாண்டில் மாணவர்களுக்கு மற்ற சமயங்களை விட அதிகம் தேவையாயிருந்தன. சந்தேகமற டொன் போஸ்கோ சிறுவர் களுக்குப் பொதுவிலும், தனிப்பட்ட விதமாகவும் இந்த விளக்கங் களையும், அறிவுரைகளையும் வழங்கினார். இதைப் பற்றி நாம் என்ன சொல்வது? இந்தக் கனவுக்கு விளக்கம் சொல்ல நம்மால் முடியுமா?

விளக்கம்

அந்தப் படுகுழி பரிசுத்த வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ள ஒன்றுதான்: ". . .ஆழமான படுகுழி,” “ஒடுக்கமான படுகுழி” (பழ. 23:27), “அழிவின் படுகுழி” (சங். 54:24). புனித சின்ன ப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தைப் பற்றிய தமது பதினோராம் பிரசங்கத்தில் அர்ச். ஜெரோம் சொல்வது போல, “அந்தப் படுகுழியில்தான் அசுத்ததனத்தின் பசாசு படுத்திருக்கிறது.” இந்தக் கனவு ஏற்கனவே பாவத்தால் அடிமைப்படுத்தப்பட்டவர் களை அல்ல, மாறாக பாவத்தின் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்து பவர்களைப் பற்றியே சுட்டிக் காட்டுகிறது என்று தோன்றுகிறது. இந்த இடத்தில், எளிய மனதும், வேடிக்கையும், இருதய சமாதானமும் மங்கி மறையத் தொடங்குகின்றன. இளம் வயதுள்ள சிறுவர்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் அந்தக் குழியைத் தாண்டிக் குதிக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய ஆசாபாசங்கள் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. மகிழ்ச்சியான முறையில் மாசற்றவர்களாக இருக்கும் அவர்கள் தங்கள் விளையாட்டு களிலேயே முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள். அவர்களுடைய காவல் தூதர்கள் அவர்களுடைய மாசற்றதனத்தையும், எளிமை யையும் பாதுகாக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் அந்தப் படுகுழியைத் தொடர்ந்து தாண்டிக்கொண்டிருந்ததாக இந்தக் கனவு சொல்லவில்லை. ஒருவேளை ஒரு நண்பனின் அறிவுரைக்கு அவர்கள் கீழ்ப்படிந்து, தாண்டுவதை நிறுத்தியிருக்கலாம்.

அதிக வயதான சிறுவர்களும் அந்தக் குழியைத் தாண்ட விரும்புகிறார்கள், ஆனால் அவர்களுக்குப் பயிற்சியில்லை, அத்தோடு தங்கள் தோழர்களின் அளவுக்கு உத்வேகமும், உற்சாகமும் அவர் களிடம் இல்லை . மேலும் அவர்கள் கற்புக்கு எதிரான முதல் போராட் டங்களின் மன அழுத்தத்தை உணர்ந்தார்கள். பாம்பின் திடீர்த் தாக்குதலை அவர்கள் அறிந்திருக்கவில்லை . “அந்தக் குழியைத் தாண்டிக் குதிப்பது நிஜமாகவே அவ்வளவு பயங்கர ஆபத்துள்ளதா?” என்று அவர்கள் கேட்பதாகத் தோன்றுகிறது. அதன்பின் அந்த விளையாட்டு தொடங்குகிறது. உணர்ச்சிபூர்வமான நட்புகள், எதிர்ப்புக்குரிய புத்தகங்களை ஏற்றுக்கொள்ளுதல், பலமான பற்றுகளை விரும்பி வளர்த்துக் கொள்ளுதல் ஆகிய தீமைகள் அவர் களில் உருவாகத் தொடங்கும்போது, அவர்களது முதல் தாண்டுதல் உருப்பெறத் தொடங்குகிறது. அளவுக்கு மீறிய சுதந்திரமும், முரட்டுத் தனமும் உள்ளவர்களாக, அவர்கள் நல்ல தோழர்களிடமிருந்து விலகுகிறார்கள், தங்கள் நல்லொழுக்கத்தைப் பாதுகாக்கும்படி மேலதிகாரிகள் அதிக முக்கியத்துவமுள்ளவையாகக் கருதுகிற விதிகளை அல்லது எச்சரிக்கைகளை அவர்கள் அவமதிக்கிறார்கள்.

முதல் தாண்டுதல் ஒரு பாம்பின் கடியில் போய் முடிகிறது. சில சிறுவர்கள் இந்தத் தீங்கிலிருந்து தப்பித்து, விவேகமாக முறையில் மேற்கொண்டு எந்த ஆபத்தான முயற்சியிலும் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களோ, அவசர புத்தியுள்ளவர்களாக, ஒரு நிஜமான ஆபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், அதனிடமே திரும்பவும் செல்கிறார்கள். குழிக்குள் விழுவதும், மீண்டும் வெளியே வீசியெறியப்படுவதும் சாவான பாவத்தில் விழுவதையும், ஆனால் தேவத்திரவிய அனுமானங்களின் வழியாகக் குணம் பெறும் வாய்ப்பை எப்போதும் ஒருவன் கொண்டிருப்பதையும் குறிக்கிறது என்று தோன்றுகிறது. விழுந்து அந்தக் குழியிலேயே இருந்து கொண்டவர்களைப் பற்றி, “ஆபத்தை நேசிக்கிறவன் அதிலேயே அழிவான்” (சர்வப். (சீராக்) 3:27) என்பதற்கு மேலாக வேறு ஒன்றும் சொல்லத் தேவையில்லை.