இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உத்தமமாக இருக்க விரும்புகிறவர்களுக்குத் தனியான அந்தரங்கப் பக்தி முயற்சிகள்

257, இப்பக்தியின் வெளி முயற்சிகளை மேலே கூறி யுள்ளோம். நிந்தையினாலோ அல்லது அலட்சியத்தினாலோ இவற்றைச் செய்யாமல் விட்டு விடலாகாது. ஒவ்வொரு வரின் நிலைமைக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ப அவற்றைச் செய்யவேண்டும். இவை போக, மிகவும் அர்ச்சிக்கும் சில அந்தரங்க முயற்சிகள் கூறப்படுகின்றன. ஒரு உயர்ந்த உத்தம நிலைக்கு வரும்படி பரிசுத்த ஆவி அழைக்கிறவர் களுக்கு உரியவை இவை.

இவற்றை நான்கு வார்த்தைகளில் கூறலாம்: நம் எல்லாச் செயல்களையும் அதிக உத்தம விதமாய், மாசுவன் வழியாக காப்பகம் சேசுவின் வழியாக சேசுவுடன் சேசுவுக்காகச் செய்வதற்கு ஏதுவாக, அவற்றை நாம் மரியாயின் வழியாக மரியாயுடன் மரியாயிடத்தில் மரியாயிக்காகச் செய்ய வேண்டும்.