இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

முத். பவுலின் மரி ஜாரிகோ குணமடைதல்

(பிலோமினாளுக்கு அர்ச். பட்டம் வழங்கக் காரணமாயிருந்த பெரும் புதுமை)

அர்ச். பிலோமினம்மாளின் சரீரம் கண்டுபிடிக்கப் பட்டு 25 ஆண்டுகளுக்குப் பின் அவளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டம் கொடுக்கும் அலுவல் ஆரம்பமானது. இந்த அர்ச்சிய சிஷ்டவளின் பட்டம் அநேக காரியங்களில் தனி விசேஷம் பெற்றிருந்தது. அதற்கு மூலகாரணமாயிருந்த முத். பவுலின் மரி ஜாரிகோவிற்கு அர்ச். பிலோமினம்மாள் செய்த பெரும் புதுமை இதுவாகும்.

1825-ல் இப்புதுமை நடந்தது. அதற்கு முன் தொடர்ந்து 10 ஆண்டுகளாக முத். பவுலின் மரி ஜாரிகோ நோயால் வருந்தினாள். வர வர அவளுடைய நிலை கவலைக் கிடமாயிருந்தது. அப்போது முஞ்ஞானோ ஊர் பிலோமினா அற்புதங்களால் சிறந்து விளங்கிய காலம். பிலோமினா என்ற வெறும் பெயரே பவுலினுக்கு இருதய சாந்தமாயிருந்த தால் முஞ்ஞானோவுக்குத் திருயாத்திரையாயச் சென்றால் அர்ச். பிலோமினம்மாளுடைய உதவியால் தான் குண மடைய முடியும் என்று நம்பினாள்.

பவுலின் விசுவாசப் பரம்புதல் சபையை ஸ்தாபித்தவள். அதனால் பாப்பரசருக்கு மிகவும் அறிமுகமாகியிருந்தாள். முஞ்ஞானோ செல்லுமுன் பாப்பரசர் 16ம் கிரகோரியா ரிடம் போய் ஆசீர் பெறுவதென்று தீர்மானித்தாள். மிகுந்த சிரமப்பட்டு உரோமை சென்றாள். ஆனால் அவளால் வத்திக்கான் அரண்மனைக்குப் போக முடியவில்லை. ஆகவே பாப்பரசர் அவளைச் சந்திக்க அவள் தங்கியிருந்த திரு இருதய சபைக் கன்னியர் மடத்திற்குச் சென்றார். அவள் உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்ததென்றால் அவளால் முஞ்ஞானோவிற்குப் போய் உயிருடன் திரும்ப முடியாது என்றே பாப்பரசர் கருதினார். அவள் மோட்சம் சேர்ந்ததும் தனக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அப்போது பவுலின் பாப்பரசரைப் பார்த்து: “பரிசுத்த தந்தையே, நான் முஞ்ஞானோ சென்று பிலோமினா என்னை குணப்படுத்திவிட்டால் அவளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டமளித்து அவளுக்குப் பக்தி முயற்சிகள் செய்யப்பட ஏற்பாடு செய்வீர்களா?'' என்று கேட்டாள். “நிச்சயமாக மகளே! நீ திரும்பி வருவதாயிருந்தால் அது முதல் தரமான புதுமையாயிருக்குமே என்றார் பாப்பரசர். பவுலினை முஞ்ஞானோவுக்குத் தூக்கிச் சென்றார்கள். ஆகஸ்ட் மாத வெப்பத்திற்கஞ்சி அவர்கள் இரவில் பயணம் செய்தார்கள். ஆகஸ்ட் 10 ம் நாள் பிலோமினாளின் திருநாளுக்கு முந்திய நாள் மாலையில் அங்கு சேர்ந்தார்கள். பவுலின் திருச்சபைக்கு ஆற்றிய அரிய சேவையை அறிந்த மக்கள் அவளை பிலோமினம்மாள் குணப்படுத்த வேண்டுமென்று மிகவும் விரும்பி மன்றாடினார்கள்.

மறுநாள் பவுலின், பிலோமினம்மாளின் அருளிக்கங் களுக்கருகிலேயே பல பூசைகள் கண்டு, நற்கருணை அருந்தி னாள். அதன்பின் அவள் உடலெங்கும் நடுங்கி மூர்ச்சை யானாள். அவள் இறந்துவிட்டதாகக் கருதி ஜனக்கூட்டம் பெரும் குரலெழுப்பியது. திடீரென பவுலினின் கண்களி லிருந்து கண்ணீர் வடிய, அவள் முகம் நிறம் பெற்று கண்கள் திறக்க, அந்தக் கணமே அவள் முழுச் சுகமடைந்தாள். பவுலின் முஞ்ஞானோவில் சில நாள் தங்கி பிலோமினம் மாளுக்கு நன்றி கூறியபின் பாப்பரசரைப் பூரண சுகத்துடன் பார்க்கச் சென்றாள். பாப்பரசரோ தாங்கமுடியாத ஆச்சரிய மடைந்தார். அவளைத் தன் முன்பாக நடக்க வைத்து, அவளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். பின்னும் அவளை மருத்துவ ஆய்வுக்காக உரோமை யிலேயே ஒரு வருடம் தங்கியிருக்கக் கட்டளையிட்டார். பாப்பரசர் தாம் வாக்களித்தபடியே உடனடியாக பிலோமி னம்மாளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டமளிக்க எல்லா ஆய்வு களையும் தொடங்கி வைத்தார். 1837 ம் ஆண்டு அவரே அவளுக்கு அர்ச்சியசிஷ்ட பட்டமளித்து, கட்டளை செபத் தையும், திவ்ய பலிபூசையையும் நியமித்து, அகில திருச் சபைக்கும் அர்ச். பிலோமினம்மாளை அளித்தார்.