புல்லில் மறைந்திருக்கும் பாம்பு!

நம் கவனத்தை ஈர்க்க வேண்டிய மற்றொரு விவரமும் உள்ளது. அது என்னவெனில் இந்த அருவருப் பான தீமை மிகவும் இயற்கையான ஒன்றுதான் என்பது போலத் தோன்றுகிறது என்பதுதான். பசாசு, குறிப்பாக இந்தப் பாவத்தின் தொடக்கத்தில், நட்பு, பாசம் என்னும் போர்வைகளின் கீழ் அதை மறைக்கிறது. அது புற்றுநோய் போன்றது. ஆழமாக வேர்விட்டு, குணப்படுத்த மிகக் கடினமானதாக ஆகும் வரையிலும் அது மறைந்தே கிடக் கிறது.

இயல்பானதும், இயல்புக்கு மேலானதுமான சகல பயங்கரமுள்ள விளைவுகளும் ஏன் தெளிவாகவும், இடை விடாமலும், குழந்தைகளின் தலைகளுக்குள் புகுத்தப்பட்டு விட வேண்டும் என்பதற்கான மற்றொரு காரணம் இது. மருத்துவர்கள் காசநோயைக் குணமாக்குவதற்குப் பதிலாக, அது வராமல் தடுப்பதற்காகத் தங்கள் எல்லா முயற்சி களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்முறை மிகவும் ஞானமுள்ளது, அதிக பயனுள்ளது. நிச்சயமாக வருமுன் தடுப்பது, குணப்படுத்துவதை விட மேலானது. இதே கருத்து, அசுத்தப் பாவத்தைத் தடுக்கும் காரியத்திற்கு, இதை விட ஓராயிரம் மடங்கு அதிகக் காரணத்தோடு பொருந்துகிறது.

முறையான கல்வியின் மூலம் குழந்தைகளின் மனங் களுக்குள் செலுத்தப்படும் இந்தத் தீமையின் மீதான மிகப் பெரும் பயங்கர உணர்வின் மூலம் 90 சதவீதப் பாவங் களைத் தடுத்து விட முடியும் என்று பல ஞானமும், அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.

இந்தச் சீர்கேட்டின் பேரச்சம் தரும் பேரலையைத் தடுத்து விடுவதில் பெற்றோரும், மருத்துவர்களும், ஆசிரியர் களும் மிகப் பெரும் பங்காற்ற முடியும்.