இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

உண்மையான அல்லது உத்தம பக்தியைத் தெரிந்தெடுத்தல்

மரியாயின் மீது உண்மைப் பக்தி அல்லது அன்பின் புனித அடிமைத்தனம்

24. மாதாவுக்குப் பல உண்மைப் பக்திகள் உள்ளன. தவறான பக்திகளைப் பற்றி இங்கு நான் பேசவில்லை.

25. (1) எந்த தனி முயற்சிகளும் இல்லாத பக்தி. முதல் வகைப் பக்தி நம் கிறீஸ்தவக் கடமைகளை நிறைவேற்றுவதிலும், சாவான பாவத்தை விலக்குவதிலும், அச்சத்தை விட அதிகமாய் அன்போடு கடவுளுக்காக செயல்படுவதிலும், இடைக்கிடையே மாதாவிடம் செபிப்பதிலும், மாதாவைக் கடவுளின் தாய் என்று மதிப்பதிலும் அடங்கியுள்ளது. இவ்வளவும் இருந்தாலும், ஏதாவதொரு தனிப்பக்தி அவ்வன்னையின் மீது கொள்ளப்படாமலிருக்கும் நிலை இது.

26. (2) குறிப்பான முயற்சிகளைக் கொண்ட பக்தி. இரண்டாம் வகைப் பக்தி, அதிக உத்தமமான மதிப்புணர்வும், அன்பும் நம்பிக்கையும், வணக்கமும் மாதா மீது கொள்வதில் அடங்கியுள்ளது. ஜெபமாலை, உத்தரியம் ஆகிய சபைகளில் சேரவும், ஜெபமாலையைச் சொல்லவும் மாதாவின் உருவச் சாயல்களுக்கும், மாதாவின் பீடங்களுக்கும் மரியாதை செலுத்தவும், அவ்வன்னையின் புகழ்ச்சிகளை வெளியிடவும் நம்மை மாதாவின் பக்தி சபைகளில் சேரவும் இது செய்கிறது. 

நாம் பாவத்துக்குட் படாமலிருந்தால் இந்த பக்தி நல்லதும், புனிதமுடையதும், புகழுக்குரியதுமாகும். ஆயினும் இது அடுத்து கூறப்படும் பக்தியைப்போல் அவ்வளவு உத்தமமானதல்ல; சேசு கிறீஸ்துவுடன் ஐக்கியமாவதற்கு நம் ஆத்துமத்தை சிருஷ்டிகளிடமிருந்து பற்றறச் செய்வதிலும் நம்மை நம்மிடமிருந்தே பற்றறச் செய்வதிலும் அவ்வளவு சக்தியுடையதுமல்ல.

27. (3) உத்தம பக்தி; அன்பின் புனித அடிமைத்தனம். வெகு சிலரால் அறியப்பட்டதும், வெகு சிலரால் கடைப் பிடிக்கப்படுவதும் 3-ம் வகைப் பக்தியாகும். முன்குறிக்கப் பட்ட ஆன்மாவே! அதை உனக்கு இப்பொழுது கூறப்போகிறேன்.