பிரசித்தி பெற்ற ப்ரொட்டெஸ்டாண்டினரும், பாவசங்கீர்த்தனமும்

பிரிவினைவாத சபைகளை ஸ்தாபித்தவர்களும் கூட தொடக்கத்திலிருந்தே எப்படியாவது தங்கள் சபையில் பாவசங்கீர்த்தனத்தைத தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.

லூத்தர் "பாபிலோனிய அடிமைத்தனம்' என்னும் தனது நூலில் பின்வரும் வார்த்தைகளைக் கூறுகிறான்: “பாவசங்கீர்த்தனத்தை ரத்து செய்து விடுவதை விட பாப்பானவரின் கொடுங்கோன்மைக்குத் தொடர்ந்து கட்டுப்பட்டிருப்பதையே நான் தேர்ந்து கொள்வேன்!''

மெலங்க்தான் என்பவன் தன் சபையில் பாவசங்கீர்த் தனம் அழிக்கப்பட்டு விட்டது பற்றி மிகக் கசப்பான வார்த்தைகளில் புலம்பித் தீர்த்ததோடு, அது மீண்டும் ஸ்தாபிக்கப்படுவது அவசியம் என்று அறிவித்தான்.

எட்டாம் யஹன்றி, தனது மிக பயங்கரமான பாவங்களில் விழுவதற்கு முன், தேவத்திரவிய அனுமானங் களைத் தற்காப்பது பற்றிய தனது நூலில், பாவசங்கீர்த்தனத் தைப் பற்றி இப்படி எழுதினான்: “பரிசுத்த வேதாகமத்திலோ, அல்லது திருச்சபைத் தந்தையரின் நூல்களிலோ பாவ சங்கீர்த்தனத்தைப் பற்றிய சத்தியத்தை நான் வாசிக்காமல் இருந்திருந்தேன் என்றாலும், அது மனித கண்டுபிடிப்பு அல்ல, மாறாக தெய்வீக சட்டம் என்று நம்பி ஏற்றுக் கொள்வதற்கு, எல்லாக் காலங்களிலும், சகல கிறீஸ்தவ மக்களினங்களாலும் அது எப்படி அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதைக் காண்பது ஒன்றே எனக்குப் போதுமானதாக இருந்திருக்கும்.''

ஆனாலும் சிறிது சிறிதாக, மிக அற்பமான கட்டுப் பாட்டையும் கூட விரும்பாதவர்களும், தங்களுடைய மிகக் கேவலமான ஆசைகளுக்கும் கூட வடிகால்கள் தேட விரும்பியவர்களுமான தங்கள் சொந்த சபையினரால் வற்புறுத்தப்பட்டு, இத்தகைய சீர்திருத்தவாதிகள் பாவசங் கீர்த்தனமாகிய சத்தியத்தையும், அதை அனுசரிப்பதையும் புறக்கணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். என்றாலும் இன்று வரையிலும்கூட, அதிக ஞான வெளிச்சம் பெற்றுள்ள பிரிவினை சபையினர், இந்த மிகுந்த ஆறுதல் அளிக்கும் தேவத்திரவிய அனுமானம் தங்கள் சபையில் இல்லாதது குறித்துப் புலம்பி அழுகிறார்கள்.

லெய்ப்னிட்ஸ் என்னும் புகழ்பெற்ற ப்ரொட்டெஸ் டாண்ட் தத்துவவாதி பாவசங்கீர்த்தனத்தைப் பற்றிப் பேசும்போது, பின்வருமாறு உறுதிபடக் கூறுகிறார்: “பாவசங்கீர்த்தனத்தின் ஸ்தாபகம் தேவ ஞானத்திற்குத் தகுதியானது என்றும், அதை விட அதிக மேலான அல்லது அழகான எதுவும் கிறீஸ்தவ வேதத்தில் இல்லை என்றும் ஒப்புக்கொள்ளாமலிருக்க நம்மால் இயலாது. பாவசங்கீர்த் தனம் செய்வதற்கான கடமை --எல்லாவற்றிற்கும் மேலாக, நம் இருதயங்கள் ஏற்கெனவே கடினப்பட்டு, வக்கிரமான நிலையை அடையாமல் இருக்கின்றன என்ற நிலையில்--எல்லாவற்றிற்கும் முதலாவதாக, நம்மைப் பாவத்திலிருந்து காத்துக் கொள்ள உதவுகிறது. இரண்டாவ தாக, துர்ப்பாக்கியமான விதத்தில் பாவத்தில் விழுந்து விட்டவர்களுக்கு அது பெரும் ஆறுதலாக இருக்கிறது, ஏனெனில் மீண்டும் எழுவதற்கு அது அவர்களுக்கு உதவுகிறது. இந்தக் காரணத்தினாலேயே பக்தியும், ஆழ்ந்த தன்மையும், விவேகமும் உள்ள ஓர் ஆன்ம குரு ஆன்மாக்களின் இரட்சணியத்தில் கடவுளின் வல்லமை யுள்ள கருவியாக இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். தமது ஆலோசனைகளைக் கொண்டு அவர் நம் பாவ நாட்டங்களைத் தணிப்பதில் நமக்கு உதவுகிறார், நம் குற்றங்குறைகளை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார், பாவசந்தர்ப்பங்களைப் பற்றி நம்மை எச்சரிக்கிறார். நாம் திருடியிருக்கக் கூடியவற்றைத் திரும்பச் செலுத்தி விடவும், நாம் செய்த அநியாயங்களுக்குப் பரிகாரம் செய்யவும் நமக்கு அறிவுறுத்துகிறார்; நம் சந்தேகங்களைத் தீர்த்து, நாம் மனச் சோர்வுற்றிருக்கும்போது, நம்மைத் தேற்றுகிறார். ஒரே வார்த்தையில் சொல்வதானால், அவர் நம் ஆன்மாக்களின் பலவீனத்தைக் குணமாக்க, அல்லது குறைந்த பட்சம் அதைக் குறைக்க உதவுகிறார்.

பூமியின்மீது பிரமாணிக்கமுள்ள ஒரு நண்பனை விட மேலான ஒரு காரியம் இருப்பது அரிது என்றாலும், உடைபடாத இரகசியத்தைக் கொண்ட ஒரு தேவத்திரவிய அனுமானத்தின் வழியாக, நம் நம்பிக்கையை இரகசிய மாகப் பாதுகாக்கக் கூடியவரும், நமக்கு உதவுபவரும், தமது ஆலோசனைகளை நமக்குத் தருபவருமான ஆன்ம குரு நிச்சயமாக ஒரு நல்ல, பிரமாணிக்கமுள்ள நண்பனுக்கும் மேலானவராகவே இருக்கிறார்.''

ஒரு புகழ்பெற்ற ப்ரொட்டஸ்டாண்ட் தத்துவஞானி யால் முற்றிலும் தன்னிச்சையாகத் தரப்பட்டுள்ள இந்த மகிமையான சாட்சியத்தை, தீவிரமான ஒவ்வொரு சிந்தனையாளனும் ஆழ்ந்து தியானிக்க வேண்டும்.

ஆகவே, நேர்மையும், உண்மையுமுள்ள ஆயிர மாயிரம் ப்ரொட்டெஸ்டாண்ட் சபையினர் தங்கள் சபைகளில் பாவசங்கீர்த்தனம் மீண்டும் ஸ்தாபிக்கப்பட இக்காலத்தில் முயன்று வருவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.