இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மரியாயிடத்தில்

261. நம் செயல்கள் அனைத்தையும் மரியாயிடத்தில் நாம் செய்ய வேண்டும். இப்பக்தி முயற்சியை முழுவதும் கண்டுணர வேண்டு மானால், நம் தேவ அன்னை தான் புதிய ஆதாமின் உண் மையான பூலோக சிங்காரத் தோட்டம் என்றும், நம் அன்னையின் அடையாளமாகவே முதல் ஏதேன் தோட் டம் இருந்தது என்றும் நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த சிங்காரவனத்தில் புதிய ஆதாமாகிய சேசு கிறீஸ்து விட்டுச் சென்ற செல்வங்கள், அழகுகள், அபூர்வப் பொருட்கள், சொல்லி விளக்க முடியாத ஆனந்தம் எல் லாம் உள்ளன. இந்த சிங்காரத் தோப்பில் அவர் ஒன் பது மாதமளவாக தம் மகிழ்வைக் கொண்டிருந்தார். தன் அதிசயங்களைப் புரிந்தார். இறைவனுக்குரிய தாராளத் தன்மையோடு தன் திரவியங்களை வாரி வழங்கினார். இப் புனித இடம் நம் அன்னையின் கன்னிமை, அமலோற்பவம் இவற்றால் ஆனது. இந்த அமலோற்பவ மண்ணிலிருந்தே மாசு மறுவற்ற புதிய ஆதாம் அங்கு உறையும் பரிசுத்த ஆவியால் உருவாக்கப்பட்டு உணவூட்டப்பட்டார். இந்தப் பூலோக மோட்சத்தில் தான் சீவியக் கனியான சேசு கிறீஸ் துவைப் பயின்ற உண்மையான ஜீவிய தரு வளர்கிறது இங்கு தான் உலகிற்கு ஒளி தந்த நன்மை தீமையின் அறிவைத் தரும் மரம் இருக்கிறது. இந்தத் தெய்வீக இடத் தில் கடவுளின் கரத்தால் மரங்கள் நடப்பட்டு அவரு டைய தெய்வீக அர்ச்சிப்பால் நீர் பாய்ச்சப்பட்டு தின மும் தெய்வச் சுவை பொருந்திய கனிகளைத் தருகிறது. தேவ தூதர்களை மகிழ்விக்கும் அழகிய பலவகை மலர் களான வாசனையுடைய புண்ணியங்கள் அடர்ந்து மலர்ந் துள்ள மலர்ப் பாத்திகள் உள்ளன. நம்பிக்கையால் பசுமை நிறங்காட்டும் சம வெளிகளும், நுழைய முடியாத பாது காப்பிடங்களும், உறுதியான நம்பிக்கை என்னும் அழகிய அரண்மனைகளும் எல்லாம் உள்ளன. இந்த உலகப் பொருள்களால் குறிக்கப் படுபவற்றின் உட்பொருளை பரி சுத்த ஆவி மட்டுமே அறியச் செய்வார். இந்த இடத்தில் ஆகாயம் சுத்தமாயிருக்கிறது எவ்வித நச்சு வாயும் இல்லை. இங்கு இரவு இல்லை. நிழல் படாத தெய்வீக சூரியனின் பரிசுத்த மனித சுபாவம் என்னும் ஓளி வீசும் பகல்தான் உள்ளது. எப்போதும் பற்றி எரியும் அன்பின் சூளை இங்கு காணப்படுகிறது. தாழ்ந்த உலோகங்களெல்லாம் இவ் வன்புச் சூளையில் எரிக்கப்பட்டு தங்கமாக மாறுகின்றன.

இப் பூமியிலிருந்து தாழ்ச்சி என்னும் நதி பொங்கிப் பாய்கிறது. நான்கு கிளைகளாக அது பிரிகிறது. இத் தலத்தை அவை நீர் பாய்ச்சுகின்றன- இவைதான் நான்கு மூலகாரணப் புண்ணியங்களுமாகும். (மூல காரணப் புண் ணியங்கள் : விவேகம், நீதி, மனத்திடம், மட்டு திட்டம்).

262. வேத பிதாக்களின் வாயால் பரிசுத்த ஆவி மரியாயை:

(1) “கீழ்த் திசை வாசல்'' என்று அழைக்கிறார். இவ் வாசல் வழியாக பெரிய குருவாகிய சேசு கிறீஸ்து இவ்வுல கிற்கு வருகிறார். செல்கிறார். இவ்வாசல் வழியாக அவர் முதலில் வந்தார். அவருடைய இரண்டாம் வருகைக்கும் அவர் இதையே கொள்வார்.

(2) "தெய்வீகம் தங்குமிடம்'' என்றும் அழைக்கிறார் தமதிரித்துவம் வாசஞ் செய்யும் இடம். கடவுளின் அரி யாசனம். கடவுளின் திருநகர். தேவனின் பீடம் தேவ ஆலயம். சர்வேசுரனுடைய உலகம். இந்தப் பெயர்களும் பட்டங்களும் மிகவும் உண்மையானவை. கடவுள் மரி யாயிடம் ஆற்றியுள்ள பல்வேறு அதிசயங்களையும் வரங் களையும் இவை குறிப்பிடுகின்றன. எத்துணை செல்வம்! எத் துணை மகிமை! எத்துணை மகிழ்ச்சி! உந்நத தேவன் தமது உயரிய மகிமையின் அரியாசனத்தை அமைத்துக் கொண் டுள்ள மரியாயிடம் சென்று தங்கியிருக்கக் கூடுமாயிருப் பது எத்தகைய ஆனந்தம்!

263. மாதா என்னும் இத்திருத்தலம் எவ்வளவு உயர் வுடையது! எவ்வளவு புனிதம் வாய்ந்தது! முதல் சிங் கார வனத்தைப் போல் ஒரு கெருபின் தூதரால் அல்ல இது காவல் செய்யப்படுவது. ஆனால் இந்தத் திரு இடத் துக்கு குழுத் தலைவனாய்த் தன்னையே வைத்துள்ள பரிசுத்த ஆவியாலேயே பாதுகாக்கப்படுகிறது. அவர் மரியாயைப் பற்றி “சுற்றிலும் அடைக்கப்பட்ட தோட்டம், என் சகோ தரி, என் மணவாளி, முத்திரையிடப்பட்ட நீர்ச் சுனை, என்று கூறுகிறார். (உந். சங். 6, 12). மாதா சுற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். மாதா முத்திரையிடப்பட்டுள்ளார்கள். இத்தகைய இடத்திற்கு பாவிகளான , நாம் செல்ல உத்தரவு பெறுவதும் அதனுட் செல்வதற்குரிய திறமையும் ஒளியும் பெறுவதும் எவ்வ ளவு கடினம்! ஏதேன் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்ட ஆதாம் ஏவா ளின் பரிதாபத்துக்குரிய பிள்ளைகளாகிய நாம் இந்தப் புதிய சிங்காரத் தோப்பினுள் புகுவது பரிசுத்த ஆவியின் விசேஷ அருளினால் தான் முடியும். அந்த அருளை நாம் சம்பாதிக்கவேண்டும்.

264. நம்முடைய பிரமாணிக்கத்தால் இந்தத் தனி வரத்தை அடைந்த பின் நாம் மரியாயின் அழகிய அகத் துள் மகிழ்ச்சியுடன் தங்கியிருக்க வேண்டும். அமைதியில் ஓய்ந்திருக்க வேண்டும். நம்பிக்கையுடன் அவர்கள் மேல் ஊன்றியிருக்க வேண்டும். உறுதியாகக் காப்பாற்றப்படு வோம் என்று அங்கு மறைந்து கொள்ள வேண்டும். ஒரு வரையறையிடாமல் மாதாவுக்குள் நம்மையே இழந்து விடவேண்டும். இவ்வாறு செய்தால் மரியன்னையின் கன் னிமை பொருந்திய நெஞ்சில்:

[1] மரியாயின் வரப்பிரசாதம் என்னும் அமுதால் நம் ஆன்மா உணவூட்டப் பெறும்.

[2] நம் ஆன்மா துன்பங்களிலிருந்தும் பயம் வீண் சந் தேகக் குழப்பங்களிலிருந்தும் விடுபடும்.

[3] மரியாயிடம் ஒரு போதும் புகுந்திராத உலகம் பசாசு, பாவம் என்னும் எதிரிகளிடமிருந்து ஆன்மா பாதுகாக்கப்படும். இதனாலேயே தன்னிடத்தில் வேலை செய்கிறவர்கள். பாவஞ்செய்ய மாட்டார்கள் என்கிறார் கள் நம் அன்னை (சங். 24, 30). அதாவது தங்கள் கருத் தால் மரியாயிடம் தங்கியிருப்பவர்கள் ஒரு போதும் கன மான பாவத்தில் விழ மாட்டார்கள்.

[4] சேசு கிறீஸ்துவில் நம் ஆன்மா உருவாகும். நம் ஆன்மாவில் சேசு கிறீஸ்து உருவாவார். ஏனென்றால் வேத பிதாக்கள் கூறுவது போல மரியாயின் நெஞ்சம் தேவ மறைபொருள்களின் - இல்லம். அங்கு தான் சேசு கிறீஸ்துவும் தெரிந்தெடுக்கப்பட்ட அனைவரும் உரு வாகியுள்ளார்கள். (எண் 32).