இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

நம் மத்தியஸ்தரான சேசு கிறீஸ்துவிடம் செல்ல நமக்கு ஓர் மத்தியஸ்தர் தேவை

83. கடவுளிடம் நாம் நேரில் செல்லாமல், ஒரு மத்தியஸ்தர் வழியாகச் செல்வது அதிக தாழ்ச்சியுடைய செயலாயிருப்பதால் அது அதிக உத்தமமான தாகிறது. நான் சற்றுமுன எடுத்துக்காட்டியதுபோல், நம் மனித சுபாவம் எவ்வளவு பழுதடைந்துள்ளதென்றால் கடவுளைச் சென்று அடையவும் அவருக்குப் பிரியப்படவும் நம் சொந்த செயல்களையும் முயற்சிகளையும் தயாரிப்புக்களை யும் நாம் நம்பியிருந்தால், நிச்சயம் நம் நம் செயல்கள் கரைபட்டுப்போகும். அல்லது அவை இறைவனை நம் முடன் ஒன்றிக்கவும் அவர் நம் குரலைக் கேட்கவும் தூண்ட முடியாதபடி அவர் சமூகத்தில் விலையற்றுப் போகும். கடவுள், தம் மகத்துவத்திற்கும் நமக்கும் இடையில் மத்தியஸ்தர்களைக் கொடுத்தது காரணமில்லா மலலல. நம்முடைய தகுதியற்ற தன்மையையும் நம் ஏலாத்தனத்தையும் அவர் கண்டு நம்மீது இரக்கம் கொண்டார். அவருடைய இரக்கம் நமக்கு எட்டும்படி யாக திறமையுள்ள மத்தியஸ்தர்களைப் புறக்கணித்து விட்டு, எந்தப் பரிந்து பேசுதலும் இல்லாமல் நாம் நேரடியாக அவருடைய பரிசுதத சமூகத்திற்குச் செல் வது, தாழ்ச்சியற்றதும், இத்தனை உந்நதரும் தூயவரு மான இறைவனுக்கு மரியாதை தவறிய செயலுமாகும். ஒரு உலக அரசனுக்கு அல்லது அரச குமாரனுக்குக் காட்டும் மரியாதையைவிட இவ் அரசர்க்கரசனுக்கு நாம் குறைவாய்ச் செய்வதாகும். நமக்காகப் பேசக் கூடிய ஒரு நண்பன் இல்லாமல் ஓரு உலக அரசனை நாம் அணுக விரும்பமாட்டோமே!

84. பிதாவுடன் நம் இரட்சண்யத்தின் மத்தியஸ்த ராகவும் நமக்காகப் பரிந்து பேசுபவராகவும் இருக்கிறார் நமதாண்டவர். வெற்றியடைந்துள்ள (பரலோக) திருச் சபையுடனும் போராடும் (பூலோக) திருச்சபையுடனும் சேர்ந்து நமதாண்டவர் வழியாகவே நாம் ஜெபிக்க வேண்டும். அவர் வழியாகவே கடவுளின் மகத்துவத்தை நாம் அணுக முடியும். கடவுளுடைய திருக்குமாரனின் பேறுபலன்களால் ஏந்தப்பட்டு, அவற்றையே அணிந்து கொண்டவர்களாயன்றி அவர் முன்னிலையில் நாம் ஒரு போதும் சொல்லக்கூடாது. இது எப்படியென்றால் இளை யவனான யாக்கோபு தன் தந்தை ஈசாக்கிடம் ஆசீர் பெறச் சென்றபோது ஆட்டுக்குட்டிகளின் தோலைப் போர்த்தியிருந்தது போல!

85. ஆனால் இந்த மத்தியஸ்தரிடம் சொல்வதற்கு நமக்கொரு மத்தியஸ்தர் தேவையா? நம்மை நேரடி யாக அவருடன் இணைக்க போதுமானதாக உள்ளதா நம் தூய்மை ? அவர் சகலத்திலும் பிதாவுக்குச் சரிசம மான கடவுளல்லவா? இதினிமித்தம் அவர் பரிசுத்தரி லும் பரிசுத்தராய், தம் பிதாவைப்போல் மரியாதைக் குரியவராய் இருக்கிறால் ரல்லவா? அவர். தம் பிதாவை சாந்தப்படுத்தி நம் கடனைத் தீர்ப்பதற்கென தமது அள வற்ற அன்பினால் பிதாவுடன் நம் மத்தியஸ்தராகவும் நமது அச்சாரமாகவும் ஆனாரென்றால், அதற்காக அவ ருடைய மகத்துவத்திற்கும் பரிசுத்தத்திற்கும் குறை மதிப் பும் குறைந்த மரியாதையும் நாம் கொள்வதா?

எனவே, அர்ச். பெர்னார்டுடன் நாமும் நம் மத்தியஸ் தரிடம் செல்ல நமக்கு ஓர் மத்தியஸ்தர் தேவை என்றும் இவ்வதவியைச் செய்ய மிகத் தகுதி வாய்ந்தது தேவமரியாயே என்றும் திடமாகக் கூறுவோம். மரியாயின் வழியாகவே சேசு கிறீஸ்து நம்மிடம் வந்தார். அவர்கள் வழியாகவே அவரிடம் நாம் செல்ல வேண்டும், கடவுளான சேசு கிறீஸ்துவின் அள வற்ற பெரும் தன்மையினாலோ அல்லது நம்முடைய தாழ்வினாலோ, நம் பாவங்களாலோ, நாம் அவரிடம் நேரடியாகச் செல்ல அஞ்சினால், நாம் நம் அன்னை யான மரியாயின் உதவியையும் மன்றாட்டையும் அஞ் சாமல் கேட்போம். மாதா அன்புள்ளவர்கள், மென்மை யுடையவர்கள். அவர்களிடம் கடினமானதும் இறுக்கமானதும் எதுவுமில்லை. அதிகப்படியாக உயர்ந்ததென் றும் ஜொலிப்பதென்றும் ஒன்றுமில்லை. நாம் அவர்களைப் பார்க்கும்போது நம் சொந்த மானிட இயல்பையே காண்கிறோம். தன்னுடைய ஒளியின் பிரகாசத்தால், நம் பலவீனத்தினிமித்தம் நம்மை பார்வையிழக்கச் செய்யும் சூரியன் அல்ல மாதா. மாறாக, சூரியனின் ஒளியை வாங்கி, நம்முடைய குறைந்த சக்திக்கு ஏற்றவாறு அதை மெதுப்படுத்தித் தரும் சந்திரனைப்போல் இனி மையும் கனிவும் கொண்டவர்கள் (உந். சங் 6:9). மாதா எவ்வளவு அன்புடையவர்களென்றால், தன்னுடைய பரிந்து பேசுதலை மன்றாடிக் கேட்கின்ற யாரையும், அவர்கள் எவ்வளவு பாவமுடையவர்களாயிருந்தாலும் தள்ளிவிடுவதில்லை. அர்ச்சிஷ்டவர்கள் கூறுவதன்படி உலகம் தோன்றியது முதல், நம்பிக்கையுடன், நீடித்து தேவ அன்னையை மன்றாடிய எவரும் தள்ளப்பட்ட தில்லை. மாதா எவ்வளவு வல்லமையுடையவர்களென் றால், அவர்களுடைய மன்றாட்டு ஒரு போதும் மறுக் கப்பட்டதில்லை. மன்றாடுவதற்கென மாதா தன் திருக் குமாரனிடம் சென்றால் போதும். அவர் உடனே அதை அருள்கிறார். மாதாவும் உடனே அதை அடை கின்றார்கள். தன்னை உதரத்தில் சுமந்து அமுதூட்டிய மிகவும் அன்பு மிகுந்த தமது அன்னையின் மன்றாட்டுக்களால் சேசு அன்புடன் மேற்கொள்ளப்பட்டு விடுகிறார்.

86. இந்தக் கருத்துக்களெல்லாம் அர்ச். பெர்னார்ட், அர்ச். பொனவெந்தூர் என்பவர்களிடமிருந்து கொள்ளப்பட்டவை. அவர்கள் கூறுவதின்படி பார்த்தால், கடவுளிடம் நாம் செல்லும் போது மூன்று படிகள் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. நமக்கு மிக அருகாமையில் இருக்கின்றதும் நம் தகுதிக்கு ஏற்றதுமான முதல் படி மாதா. இரண்டாவது படி சேசு கிறீஸ்து. மூன் றாவது பிதாவாகிய சர்வேசுரன். சேசுவிடம் சேருவதற்கு நாம் மாதாவிடம் செல்ல வேண்டும். மாதாவே நமக்காகப் பரிந்து பேசும் மத்தியஸ்தி. பிதாவிடம் போவதற்கு நாம் சேசுவிடம் செல்ல வேண்டும். நம் இரட்சிப்பின் மத்தியஸ்தர் அவரே. இதுமுதல் நான் விரித்தெழுதப் போகும் பக்தி முயற்சியில் இந்த வரி சைக் கிரமம் முழுமையாகக் கைக்கொள்ளப்படும்.