ஆண்டவரே அக்கிராமத்தைச் செய்கிற அனைவரையும் தேவரீர் பகைத்தீர். (சங் 5; 7)
பாவம் எவ்வளவு பெரிய ஒரு தீமை என்றால், உ ல க த்திற் சம்பவிக்கக் கூடிய எந்த மகா பெரிய கேடும் அதற்கு முன்பாக ' ஒரு தீமையாகத் தோற்றா து. பாவம் இவ்வள வு பொல்லாத து என்று, கிறீஸ்தவர்களே, நீங்கள் அனேக தட வை பிர சங்கங்களி லே சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்.
பாவத் தின் தீமையைப்பற்றிப் பலமுறை புத்தகங்களிலேயும் வாசித்திருப்பீர்கள். ஆனால், பிரசங்கத்தைக் கேட்கும்போது, அல்லது புத்தகத்தை வாசிக்கும் போது இவ் ஏக பொல்லாப்பின் பேரிலே வெறுப்பு எழும்புவது உண்டானாலும், பின்பு வாவர அவ்வெறுப்பு குறைந்து குறைந்து அற்றுப்போகிறது, அதினாலே தான் நமக்கெல்லாம் பெரும் சத்துருவாயிருக்கிற இந்த மகா தீங்கின் பேரிலே இடைக்கிடை தியானித்துப் பார்ப்பது நலமாய் இருக்கும்.
பாவத்தின் மேலே மெய்யான ஓர் அரோசிகம் உங்கள் மன திலே பிறக்கச் செய்யக் கூடுமானால் நான் எவ்வளவோ அதி ஷ்டசாலியாய் இருப்பேன். ஆனால், கிறிஸ்தவர்களே, நான் எவ்வள வாக உரத்தப்பேசினாலும், எவ்வளவு பெலமான நியாயங்களைத்தான் எடுத்துக்காட்டினா லும், ஸ்பிரித்து சாந்து சருவேசுரனுடைய அருளில் லாமல் உங்கள் மனம் அசையு மோ! நெகிழுமோ? உரு குமோ? இல்லையே. ஆகையால் பிரகாரத்தின் ஊற ணியாகிய இவரைப் பார்த்துப் பிரார்த்தித்துக்கொண் டே தொடங்குவோமாக.
விசுவாசிகளின் இருதயங்களைப் படிப்பித்தருளி ன வராகிய தேவனே, பிரகாசத்தின் ஊறணியே சுவா மி, தேவரீரே எழுந்தருளிவந் து உம்முடைய விசுவா சிகளு டைய இருதயங் களுக்கு அறிவைத் தந்தருளும். அடியேனுடைய நாவிலும் இருந்து என்னை நடத்தி யருளும், நான் ஒசை யிடுகிற வெண்கலம் போலவும், சத்தமிடுகிற கைத்தாளம் போலவும் இராமல், உம்மு டைய விசுவாசிகளுக்குப் பிரயோசனம் உள் ள வைக ளை யே பிரசங்கிக்க அடியேனுக்கு ஒத்தாசை கட்ட ளை பண்ணியருளும். ஆமென்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠