இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வக்கீல் குணமானார்

நேப்பிள்ஸ் நகர பிரபல வக்கீல் அலெக்சாண்டர் சேரியோ. அவரும் அவர் மனைவியும் அர்ச். பிலோமினம்மாள் மேல் மிகுந்த பக்தி  பூண்டிருந்தனர். அந்த  வக்கீல் பல ஆண்டுகளாக வயிற்றில் நீடித்த நோயால் அவதியுற்றார்.  இதிலிருந்து விடுதலை தேடி அவ்விருவரும் அர்ச். பிலோமினம்மாளின் திருவிழாவிற்கு வந்திருந்தனர். தாங்களும் அதிகமாக ஜெபித்து பிறரையும் தங்களுக்காக  ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தனர். திருவிழாவன்று மாலை திவ்விய நற்கருணை ஆசீர்வாதத்துக்குப் பின் கோவிலில் இருந்த அலெக்சாண்டருக்குத் திடீரென கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது.  உடனே அவரை வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அது அதிகரித்து அவர் உயிராபத்தில் இருந்தார். கடைசிப் பாவசங்கீர்த்தனம் கூட செய்ய முடியாத  நிலை  ஏற்பட்டது.  அவரின் மனைவி

மிகவும் துயரப்பட்டு தன் கணவன் பாவசங்கீர்த்தனம் செய்த பிறகாவது மரிக்கும்படி அர்ச். பிலோமினம்மா ளிடம் கேட்டு முறையிட்டாள். “பிலோமினா, இதுதான் நீர் எனக்குத் தந்த பரிசா?'' என்று கேட்டுவிட்டு மேலும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு “இந்த வரத்தை நீர் என் கணவருக்குத் தந்தால் அவர் இறந்தபின் உமக்கொரு பளிங்குப் பீடம் அமைப்பேன்'' என்று பொருத்தனை செய் தாள். அவள் அதைச் சொல்லி முடியவும் அலெக்சாண்டர் பேசும் தன்மை பெற்றார். தான் ஆபத்தைக் கடந்துவிட்ட தாகக் கூறினார். பின் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தார். பாவசங்கீர்த்தனம் செய்து முடியவும் அவருடைய நோய் ஒரு அடையாளம் முதலாய் இல்லாமல் மறைந்தது.

அவர் மனைவி தன் பொருத்தனையை நிறைவேற்றி னாள். ஆனால் பீடத்தின் மேல் வைக்கப்பட்ட நீண்ட சலவைக் கல்லைப் பொருந்தும்போது தவறுதலான ஒரு சுத்தியல் அடியால் அது முழு அகலத்துக்கும் கீறி இரண்டு துண்டாகிவிட்டது. எல்லாரும் வருந்தினார்கள். ஆயினும் அதை இரும்புத் தகட்டால் இணைத்து மேல் பாகத்தில் சிமெண்ட பூசிவிடலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் இரும்புத் தகடு இல்லாமலேயே சலவைக்கல் ஆச்சரிய மாகப் பொருந்திவிட்டது. அது உடைந்த அடையாளமே இல்லை. ஒரே ஒரு நூல் போன்ற கோடு மட்டும் நேர்ந்த விபத்தை நினைவுப்படுத்துவதுபோல் காணப்பட்டது. இப்புதுமையை நினைவூட்டும் ஒரு சின்ன அறிக்கை அங்கே வைக்கப்பட்டது.