இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ச் - பிலோமினம்மாளின் சுரூபத்தில் இம்மாற்றங்கள் நிகழ்வதன் பொருளென்ன?

அர்ச். பிலோமினம்மாள் தன்னை நேசிக்கிறவர் களுக்கும் குறையற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறாள். சங். லூசியாவின் பிரான்ஸிஸ்கோ அவள் மட்டில் கொண்ட அன்பிற்காக அவருடைய மனம் முழு மகிழ்ச்சியடையும் படி திறமையற்ற ஒரு சிற்பியால் முரடாய்ச் செய்யப்பட் டிருந்த தன் உருவத்தை அழகுள்ளதாக மாற்றினாள்.

3-ம் நூற்றாண்டு வேதசாட்சியாகிய அர்ச். பிலோமி னம்மாளின் முகபாவம் எப்படியிருந்தது என்பது நமக்குத் தெரியாது. அதைக் காட்டும்படியாக அவளது முக ரூபம் அவளுடைய சுரூபத்தில் மாற்றமடைந்திருக்க வேண்டும்.

இந்த அர்ச்சியசிஷ்டவள் எதையும் சரிசெய்துவிடு வாள். அவள் சுரூபத்தை வைத்திருந்த பேழை சிறியதா யிருந்த போது, அதற்குள் தன்னை அடைத்து கொண்டாள். பேழை பெரியதாயிருந்தபோது, தன் கால்களை நீட்டி அதற்குத் தக்க சீர்படுத்திக் கொண்டாள்.

கடவுள் அர்ச். பிலோமினம்மாளுக்கு எதையும் மறுப்பதில்லை என்று அவளைப் பற்றிக் கூறப்படும் உண்மையும். பிலோமினா கடவுளுடன் வல்லமை பெற்ற அர்ச்சியசிஷ்டவள் என்று கூறப்படுவதும் இச்சுரூப மாற்றங்களால் மெய்ப்பிக்கப்படுகின்றன. சுரூபம் தானே இதில் போய்ப் புதுமை செய்வானேன் என்று பலரும் கருதலாம். ஆனால் ஆண்டவர் அவளுக்கென்றால் எதையும் செய்வார் என்பது இதனால் தெரிகிறது.