இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா அவர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் கொடுக்கிறார்கள்

208. மாதா தன் ஊழியர்களுக்குச் செய்யும் மற்றொரு அன்பின் உதவி என்னவென்றால், அவர்களுடைய ஆன் மாவுக்கும் சரீரத்துக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பது தான். சற்று முன் நாம் கூறியபடி மாதா இரட்டை ஆடைகளைத் தன் ஊழியர்களுக்கு அளிக்கிறார்கள்: கடவுளின் விருந்திலிருந்து மிக இனிய உணவுகளால் அவர்களை உண்பிக்கிறார்கள். தானே உருவாக்கிய வாழ் வின் அப்பத்தை அவர்களுக்கு அருந்தக் கொடுக்கிறார்கள். “என் கனிகளினால் நிரப்பப் படுங்கள்.'' (சர்வ. 21, 26) - மாதா கூறுவது: என் பிள்ளைகளே என் கனிகளினால் நிரப் பப் படுங்கள் என்று. அதாவது, நான் இவ்வுலகில் கொண்டு வந்த, வாழ்வின் கனியாகிய சேசுவால் நிரப்பப்படுங்கள். “வாருங்கள் என் அப்பத்தைச் சாப்பிட்டு உங்களுக்காக நான் கலந்து வைத்திருக்கும் இரசத்தையும் பருகுங்கள்." (பழ. 9, 5) *சிநேகிதரே உண்ணுங்கள், பானம் பண்ணுங் கள். பூர்த்தியாய்க் குடியுங்கள்.'' (உந். சங், 5, 1) மாதா திரும்பவும் திரும்பவும் கூறுகிறார்கள் : என் அப்பத்தை அருந்துங்கள்-சுேசு என்னும் அப்பத்தை- உங்களுக்கென நான் என் நெஞ்சின் அமுதுடன் கலந்து வைத்த இரசத்தைசேசுவின் அன்பைப் பானம் பண்ணுங்கள். இறைவனின் கொடைகளையும் வரப்பிரசாதங்களையும் பகிர்ந்தளிக்கும் பொக்கிஷதாரியாக மாதா இருப்பதால், அவற்றில் ஒரு நல்ல பகுதியை, ஏன், மிகவும் சிறந்த பாகத்தை தன் பிள்ளைகளையும் ஊழியர்களையும் போஷித்துக் காப்பாற்று வதற்கென ஒதுக்கி வைக்கிறார்கள். ஜீவிய அப்பத்தால் அவர்கள் கொழுமையடைகிறார்கள். கன்னியர்களைப் பிறப் பிக்கும் இரசத்தினால் அவர்கள் பூரிப்படைகிறார்கள். (சங். 9, 17) மார்போடணைக்கப் படுகிறார்கள். “மாரோடணைக்கப் படுவீர்கள், மடியில் சீராட்டப்படுவீர்கள்.'' (இசை 66, 12) கிறீஸ்துவின் நுகத்தை எவ்வளவு எளிதாக அவர்கள் சுமந்து செல்கிறார்களென்றால் அதன் பாரத்தை அவர்கள் அதிகம் உணர்வது கூட இல்லை. மாதா அதை பக்தி என்னும் தைலத்தால் மிருதுவாக்கி விடுகிறார்கள் 'அந்நுகமானது வரப்பிரசாத தைலத்தால் மக்கிப்போம்'' [இசை. 10, 27].