மாமரி விசுவாசிகளின் பலமாக இருக்கிறார்கள்!

 ஜூலை 27, 1943

சேசு கூறுகிறார்:

...ஞானமுறையில் வாழும் படைப்பு, ஆவியின் தைரியத்தை சொந்தமாகக் கொண்டிருக்கிறது. ஏனெனில் உலகத்திற்கும், தங்கள் சொந்த பலவீனத்திற்கும் எதிராகப் போராடுபவர்களின் அருகில் நான் இருக்கிறேன்.

என் அருகில் அனைவருக்கும் தாயும், அனைவருக்கும் சகாயமுமாகிய மாமரி இருக்கிறார்கள். மோட்சத்தை நோக்கி வேதசாட்சிகளை உற்சாகப்படுத்துமாறு அவர்களை நோக்கிப் புன்னகைத்தவர்கள் அவர்களே. கன்னியர்களின் சம்மனசுக்கு ஒப்பான தேவ அழைத்தலில் அவர்களுக்கு உதவுமாறு அவர்களை நோக்கிப் புன்னகைத்தவர்கள் அவர்களே. குற்றம் செய்தவர்களை மனஸ்தாபத்திற்கு இழுத்து வருமாறு, அவர்களை நோக்கிப் புன்னகைத்தவர்களும் மாமரியே. எப்போதும், குறிப்பாக, மிகக் கொடூரமான வேதனையின் சமயங்களிலும் மனிதனுக்குத் தேவையா யிருப்பவர்கள் அவர்களே.

மாமரியின் நெஞ்சின் மீதுதான் நீங்கள் திடப்படுத்தப் படுகிறீர்கள், அங்கேதான் என்னையும், என் மன்னிப்பையும், மன்னிப்போடு பலத்தையும் கண்டடைகிறீர்கள். நீங்கள் என்னில் இருந்தால், கிறீஸ்துவின் கொடைகளை சொந்தமாகக் கொண்டிருப்பீர்கள், மரணத்தைச் சுவைபார்க்க மாட்டீர்கள்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...