பாவசங்கீர்த்தனமும், அபகரித்ததை உரியவரிடம் திரும்பச் சேர்ப்பித்தலும்

பாவசங்கீர்த்தனத்தின் மூலமாக பெருந்தொகை யான பணம் ஒவ்வொரு வருடமும், அதைத் திருடியவர் களால் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுகிறது என்பதும் ப்ரொட்டஸ்டாண்ட் சபையினரை ஆழமாகப் பாதிக்கும் மற்றொரு உண்மையாக இருக்கிறது. ஒரு உரோமைக் கத்தோலிக்க குருவானவர் அவர்களிடம் ஒரு பெருந்தொகையான பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து, “இந்தப் பணம் பாவசங்கீர்த்தனத்தின் மூலம் என்னிடம் இரகசியமாக ஒப்படைக்கப்பட்டது. இது உங்களிடமிருந்து திருடப்பட்டது. இதைத் திருப்பிச் செலுத்தும்படி சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், எனவே இதைத் தயவுசெய்து வாங்கிக் கொள்ளுங்கள்'' என்று கூறும்போது, அவர்களை அதிகமாக ஆட்கொள்வது சந்தோ­மா, அல்லது ஆச்சரியமா என்பதைச் சொல்வது மிகவும் கடினம். 

சிறிது காலத்திற்கு முன்பு, தென் அயர்லாந்தில் வசித்து வந்த ஒரு வியாபாரி என்னிடம், “வட அயர்லாந் தைச் சேர்ந்த ஒரு குருவானவர் எனக்கு ஒரு பார்சல் அனுப்பி யிருந்தார். அதில் 200 டாலர் (சுமார் 12,000 ரூபாய்) பணமும், அத்துடன், “இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பணம் உங்கள் தந்தையிடமிருந்து பல வருடங்களுக்கு முன் அபகரிக்கப்பட்டது. இப்போது அது உங்களிடம் திருப்பிச் செலுத்தப்படும்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது'' என்ற குறிப்பும் இருந்தது'' என்றார்.