இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

மாதா அவர்களை வழி நடத்துகிறார்கள்

209. மாதா, தன் பிரமாணிக்க ஊழியர்களுக்குச் செய் யும் மூன்றாவது உதவி என்னவென்றால், அவர்களைத் தன் - திருமகனின் சித்தப்படி வழி நடத்திக் கூட்டிச் செல்கிறார்கள். ரபேக்காள் தன் சிறிய யாக்கோபை வழி நடத்தினாள்.. இடைக்கிடையே அவனுக்கு நல்ல ஆலோசனை கூறினாள். அவன் தன் தந்தையின் ஆசீரைப் பெற்றுக் கொள்ளும்படி, அவன் சகோதரனான ஏசாவின் பகையிலிருந்தும் துன்புறுத் தலிலிருந்தும் அவனை அவ்வாறு காப்பாற்றிள்ை. சமுத் திரத்தின் நட்சத்திரமான மாதா பிரமாணிக்கமுள்ள தன் னுடைய எல்லா ஊழியரையும் பத்திரமான துறைக்கு நடத்திச் செல்கிறார்கள். நித்திய வாழ்வின் வழியை அவர் களுக்குக் காட்டுகிறார்கள். ஆபத்துட் செல்வதிலிருந்து தடுத்துக் காப்பாற்றுகிறார்கள். நீதியின் பாதையில் அவர் களை கரம் பிடித்து வழி நடத்துகிறார்கள். அவர்கள் விழப் போகும் தருணத்தில் தூக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். விழுந்து விட்டால் எழுப்பி விடுகிறார்கள். அவர்கள் தவ றும் போது அன்புள்ள அன்னையைப் போல அவர்களைக் கடிந்து கொள்கிறார்கள். சில சமயங்களில் அவர்களை அன்புடன் தண்டிக்கவும் செய்கிறார்கள். தன் தாயும் விபர மறிந்த வழிகாட்டியுமான மாதாவுக்குக் கீழ்ப்ப டிந்து நடக்கும் ஒரு குழந்தை நித்தியத்திற்குச் செல்லும் பாதை யில் வழி தவறிப் போக முடியுமா? "அவர்களைப் பின் சென்றால் நீ வழி தவறமாட்டாய்'' என்கிறார். அர்ச் பெர்னார்ட். மரியாயின் - உண்மையான ஒரு குழந்தை பசாசால் ஏமாற்றப்பட்டு மனமறிந்த பதிதத்தில் விழக் கூடுமென்று பயப்படாதே. மாதா வழி காட்டி நடத்தும் இடத்தில் கெட்ட அரூபி தன் ஏமாற்றுதல்களுடனும், பதி தர் தங்கள் நுட்பங்களோடும் காணப்படமாட்டார்கள்' Ipsa tenente non corruis. மாதா உன்னைத் தாங்கியிருக் கும் போது நீ வீழ்த்தப்பட மாட்டாய்.