இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இரண்டாம் வெளிப்படுத்தல்

அர்ச். பிலோமினம்மாள் தன் 2-வது வெளிப்படுத் தலை, நல்லவரும் தன்மேல் மிகுந்த பக்தியுள்ளவருமான ஒரு குருவானவருக்குக் கொடுத்தாள். அந்தக் குருவே இந்த சம்பவத்தை முஞ்ஞானோவில் அர்ச். பிலோமினம்மாள் அருளிக்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆலயத்திலே வெளிப் படுத்தினார்.

“ஒரு நாள் நான் ஒரு நாட்டுப் புறமாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு அறிமுகமில்லாத ஒரு பெண் வந்து: உங்கள் கோவிலில் நீங்கள் அர்ச். பிலோமி னம்மாளின் படம் ஒன்றை வைத்திருப்பது உண்மைதானா?'' என்று கேட்டாள். அதற்கு நான்: “ஆம். அது உண்மைதான்'' என்றேன். அதற்கவள்: “சரி, இந்த அர்ச்சியசிஷ்டவளைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?'' என்றாள். நான்: “மிகக் கொஞ்சம்தான் தெரியும். அவளது கல்லறையில் பொறிக் கப்பட்டிருந்த சின்னங்களிலிருந்து எவ்வளவு அறிய முடியுமோ அவ்வளவுதான்'' என்றேன். அந்த சின்னங்களை விளக்கிப் பேச ஆரம்பித்தேன். நான் பேசி முடிக்கும் வரை யிலும் அவள் காத்திருந்தாள். பின்: “இதற்கதிகமாக எதுவும் தெரியாதா?'' என்று கேட்டாள். நான்: “வேறு எதுவும் தெரியாது'' என்க, அவள்: “இந்த அர்ச்சியசிஷ்ட வளைப் பற்றி அறிய இன்னும் நிறைய விஷயங்கள் இருக் கின்றன. அவை அறியப்பட வரும்போது ஜனங்கள் ஆச்சரியமடைவார்கள். அந்த வேத கலாபனைக்கும் அர்ச். பிலோமினம்மாளின் வேதசாட்சியத்திற்கும் என்ன காரணம் என்றாவது உங்களுக்குத் தெரியுமா?'' என்று அந்தப் பெண் கேட்டாள். நான்: “அதைப்பற்றி ஒன்றும் தெரியாது'' என்றேன். அப்போது அவள்: “அப்படியென் றால் அதை நான் சொல்கிறேன். தியோக்ளேஷியன் அவளை மணக்க விரும்பினான். அதை அவள் மறுத்ததே அதற்குக் காரணம். அவள் ஏன் மறுத்தாளென்றால். சேசுக் கிறிஸ்துவின் அன்பிற்காக அவள், தான் ஒரு கன்னிகையா யிருப்பதாக அவருக்கு வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்'' என்று கூறினாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நான் அவளிடம்: “நீ என்னை ஏமாற்றவில்லையே? நீ இப்பொழுது கூறிய விஷயம் உண்மைதான் என்பது உனக்கு நிச்சயந்தானா? இதை நீ எந்தப் புத்தகத்தில் வாசித்தாய்? ஏனென்றால் பல வருடங் களாக நாங்கள் யாராவது ஒரு புத்தக ஆசிரியர் இந்த அர்ச் சியசிஷ்டவளைப் பற்றிக் கூறமாட்டாரா என்று தேடி வருகிறோம். இது வரை ஒரு துப்பும் கிடைக்கவில்லை. நீ சொன்ன விவரங்கள் எந்தப் புத்தகத்தில் இருக்கின்றன என்று சொல்லமாட்டாயா?'' என்று கேட்டேன். அவளது குரலில் விவரிக்கக்கூடாத வியப்பும், கனமும் காணப் பட்டன. அவள் மேலும் தொடர்ந்து: “நீங்கள் இப்படிப் பட்ட ஒரு கேள்வியை என்னிடமா கேட்கிறீர்கள்? அதைப் பற்றி எனக்கு ஒருவேளை தெரியாமலிருக்குமென்றா? நிச்சயம் அப்படியல்ல. உங்களை நான் ஏமாற்றவில்லை. அது எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு நிச்சயம்தான். என்னை நம்புங்கள்.'' இப்படி அந்தப் பெண் கூறியபடியே மின்னலைப் போல் மறைந்துவிட்டாள். சொன்ன விவரங்கள் எந்தப் புத்தகத்தில் இருக்கின்றன என்று சொல்லமாட்டாயா?'' என்று கேட்டேன். அவளது குரலில் விவரிக்கக்கூடாத வியப்பும், கனமும் காணப் பட்டன. அவள் மேலும் தொடர்ந்து: “நீங்கள் இப்படிப் பட்ட ஒரு கேள்வியை என்னிடமா கேட்கிறீர்கள்? அதைப் பற்றி எனக்கு ஒருவேளை தெரியாமலிருக்குமென்றா? நிச்சயம் அப்படியல்ல. உங்களை நான் ஏமாற்றவில்லை. அது எனக்கு தெரியும். அதைப்பற்றி எனக்கு நிச்சயம்தான். என்னை நம்புங்கள்.'' இப்படி அந்தப் பெண் கூறியபடியே மின்னலைப் போல் மறைந்துவிட்டாள்.

(அர்ச். பிலோமினம்மாள் தன் கன்னிமையை எவ்வளவு நேசித்து. அதைத் தன் சிறந்த காணிக்கையாக சேசு இரட்சகருக்குக் கொடுக்க விரும்பினாளென்றால், தன் கன்னிமைக்கு விலையாக உரோமை சாமராஜ்யத்தின் அரசி யாகும் வாய்ப்பை வேண்டாமென்றாள். உலகில் பெரிய மன்னனாகக் கருதப்பட்ட உரோமைச் சக்கரவர்த்தியான தியோக்கிளேஷியனை மறுத்தாள். ஆனால் 40 நாள் கடின சிறைவாசம் அனுபவித்தாள். தன் ஞான மணாளராகிய சேசுவைப்போலவே தூணில் கட்டப்பட்டு மேனியெல் லாம் இரத்த மயமாகும் வரை அடிக்கப்பட்டாள். அதன் பின் நங்கூரம் கழுத்தில் கட்டப்பட்டு ஆற்றில் எறியப்பட்ட போது கொடிய கொடூரமாகிய மூச்சுத் திணறி இறக்கும் மரணத்தை மனதில் ஏற்றுக்கொண்டாள். பின் சேசு முட் களால் முடிசூட்டப்பட்டது போலவும் ஆணிகளால் அறை யப்பட்டது போலவும், கூரிய அம்புகளால் எய்யப்பட்டு குற்றுயிராகி சாக விடப்பட்டாள். அனைத்து வேதனை களையும் தாங்கியபின், இறுதியாய் கழுத்தில் ஈட்டி பாய்ச்சப் பட்டு உயிர்விட்டாள். இதெல்லாம் சேசுவுக்கென தன் கன்னிமையைக் காப்பாற்ற அவள் கொடுத்த விலை. கன்னிமை எவ்வளவு சிறப்புடையது என்பதை உணரக் கிடைப் பதே ஒரு பெரிய வரம். அர்ச் பிலோமினம்மாளுக்கு அந்த வரம் கிடைத்தது போல் எத்தனையோ இளம் உள்ளங் களுக்கு அது கிடைக்காமலில்லை. ஆனால் தங்கள் சுய நலத்துக்காக அதை இழப்பவர்களே பெரும்பான்மையா யிருக்கிறார்கள். அர்ச். பிலோமினம்மாளைப்போல் தங்கள் கன்னிமையின் மேன்மையை அநேகர் உணர ஆண்டவரே அருள வேண்டும். அதற்கு ஆன்மாக்கள் செவிகொடுக்க வேண்டுமென நாம் மன்றாட வேண்டும்.)